பெண்ணுறுப்பை சீரமைத்து அழகாக்கிக் கொள்ள லபியாபிளாஸ்டி அறுவை சிகிச்சை!

Posted By:
Subscribe to Boldsky

அமெரிக்காவில் தங்களது பெண்ணுறுப்பை அழகுபடுத்திக் கொள்ள பெண்கள் மத்தியில் மோகம் அதிகரித்து வருகிறது என்று மருத்துவர் ஜெனிப்பர் வால்டன் கூறியுள்ளார். இவர் அமெரிக்காவை சேர்ந்த பிரபல பெண்ணுறுப்பு இதழ் பிளாஸ்டிக் சர்ஜரி மருத்துவர் ஆவார்.

உடலுறவில் ஈடுபடாவிட்டால் பெண்ணுறுப்பு இறுக்கமாகி விடுமா?

அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில் தொழில்நுட்பம் தினம், தினம் ஒவ்வொரு துறையிலும் சிகரத்தை தொட்டு வருகிறது. இவர்கள் ஆணுறுப்பு, பெண்ணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வரையிலும் வெற்றிக் கண்டுவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பெண்ணுறுப்பில் வலியா? ஒருவேளை இதெல்லாம் கூட காரணமா இருக்கலாம்!

இந்த வகையில், பிகினி, யோகா பேன்ட் போன்ற மெல்லிய இறுக்கமான உடைகள் அணியும் போது பெண்ணுறுப்பு அப்பட்டமாக வெளியில் சங்கோஜமாக தோற்றமளிக்க வாய்ப்பிருக்கிறது. இதற்கு தீர்வாக தான் "Labiaplasty" எனப்படும் பெண்ணுறுப்பு இதழ் பிளாஸ்டிக் சர்ஜரி செய்யப்படுகிறதாம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
16 - 70 வயது வரை பெண்கள் மோகம்

16 - 70 வயது வரை பெண்கள் மோகம்

16 வயது இளம் பெண்கள் முதல் 70 வயது முதிர்ந்த பெண்கள் வரை இந்த காஸ்மெடிக் அறுவை சிகிச்சையை செய்துக் கொள்ள விருப்பமாக இருக்கிறார்கள். இவர்கள் இதற்கு மிகவும் விருப்பம் தெரிவிப்பதற்கு காரணம் தங்களது பிறப்புறுப்பை அழகாக தெரிய வேண்டும் என்று கருத்து தெரிவிக்கிறார்கள்.

அமெரிக்க எஸ்திடிக் பிளாடிக் அறுவை சிகிச்சை சமூகம்

அமெரிக்க எஸ்திடிக் பிளாடிக் அறுவை சிகிச்சை சமூகம்

சென்ற ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு 49% இந்த பிளாஸ்டிக் சர்ஜரி செய்துக் கொள்ளும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்று அமெரிக்க எஸ்திடிக் பிளாடிக் அறுவை சிகிச்சை சமூகம் (American Society for Aesthetic Plastic Surgery) தெரிவித்துள்ளது.

லபியாபிளாஸ்டி (Labiaplasty)

லபியாபிளாஸ்டி (Labiaplasty)

லபியாபிளாஸ்டி எனும் இந்த அறுவை சிகிச்சையில் பெண்ணுறுப்பு இதழ்களின் வடிவம் அழகாக வடிவமைக்கப்படுகிறது. சுற்றிலும் அசிங்கமாக தோற்றமளிக்கும் வேண்டாத தோலை அறுவை சிகிச்சை மூலம் அகற்றி விடுகிறார்கள்.

அறுவை சிகிச்சை வகைகள்

அறுவை சிகிச்சை வகைகள்

இந்த லபியாபிளாஸ்டி அறுவை சிகிச்சையில் மேஜர், மைனர் என வகைகள் இருக்கின்றன. எதுவாக இருப்பினும் பெண்ணுறுப்பு இதழ்களின் அளவு மற்றும் வடிவத்தை மாற்றுவதற்காக செய்வது தான் இந்த அறுவை சிகிச்சையாகும்.

பெண்களின் விருப்பம்

பெண்களின் விருப்பம்

பெரும்பாலும் லபியாபிளாஸ்டி அறுவை சிகிச்சை செய்துக் கொள்ள வரும் பெண்கள் தங்கள் பெண்ணுறுப்பை சிறிதாக அழகாக ஆக்கிக் கொள்ள தான் வருகிறார்கள் என்று மருத்துவர் ஜென்னிபர் கூறுகிறார்.

வேஜினாபிளாஸ்டி

வேஜினாபிளாஸ்டி

மேலும் குழந்தை பெற்ற பெண்கள் அல்லது நடுவயது பெண்கள் தங்கள் பெண்ணுறுப்பை இறுக்கமாக்கிக் கொள்ள வேஜினாபிளாஸ்டி எனும் அறுவை சிகிச்சை செய்துக்கொள்ள விரும்பி வருகிறார்கள் என்று ஜென்னிபர் கூறுகிறார்.

அறுவை சிகிச்சைக்கான செலவு

அறுவை சிகிச்சைக்கான செலவு

லபியாபிளாஸ்டி எனும் இந்த அறுவை சிகிச்சைக்கான செலவு மொத்தம் $6000 - $8000 வரை ஆகிறதாம். இது இந்திய மதிப்பில் மூன்றிலிருந்து ஐந்து லட்சம் வரை ஆகும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Rise In Designer Vagina Surgery

Sharp rise in designer vagina surgery fuelled by a desire to look good in yoga pants and bikinis. for more info, read here in tamil.
Subscribe Newsletter