ஆண்களின் பிறப்புறுப்பு பகுதியை பாதிக்கும் "ஆர்.ஜி.எஸ்" என்னும் புதிய நோய் - எச்சரிக்கை!!!

By: John
Subscribe to Boldsky

நமது உணவுப் பழக்கவழக்கங்கள் மட்டுமின்றி, அன்றாட வேலைப்பாடுகள், நமது சில தவறான குணாதிசயங்கள் கூட நமது உடலையும், உடல் உறுப்புகளையும் பாதிக்கும் என்பதை நாம் மறந்திவிடுகிறோம்.

ஆண்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய அந்தரங்க நோய்கள் - ஒரு ஷாக் ரிப்போர்ட!

பொதுவாக, புகை, மது, மாது போன்ற பழக்கவழக்கங்களின் காரணமாக தான் உடலுக்கு தீய பாதிப்புகள் ஏற்படுகிறது என்று நாம் அறிந்து வைத்திருந்தோம். அதிலும், தகாத உறவினால் தான் பெரும்பாலும் பிறப்புறுப்பை பாதிக்கும் பால்வினை நோய் ஏற்படும் என்று கூறப்பட்டு வந்தது.

உங்களுக்கு 'அங்க' ரொம்ப அரிக்குதா? அதுக்கு இதெல்லாம் தான் காரணம்!

ஆனால், சமீபத்தில் ஓர் ஆராய்ச்சியில், உலகளவில் ஆண்களுக்கு மத்தியில் "ஆர்.ஜி.எஸ்." எனும் பிறப்புறுப்பு சார்ந்த பிரச்சனை பரவி வருகிறது என்று கண்டறியப்பட்டுள்ளது. இனி, ஆர்.ஜி.எஸ். என்றால் என்ன? எதனால் இந்த பிறப்புறுப்பு பாதிப்பு ஆண்களுக்கு ஏற்படுகிறது என்று பார்க்கலாம்..

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஆர்.ஜி.எஸ். (R.G.S)

ஆர்.ஜி.எஸ். (R.G.S)

ஆர்.ஜி.எஸ். என்பது ரெஸ்ட்லெஸ் ஜெனிட்டல் டிஸ்ஸார்டர் (Restless Genital Disorder).

ஆர்.ஜி. எஸ். என்றால் என்ன?

ஆர்.ஜி. எஸ். என்றால் என்ன?

பொதுவாகவே, உணர்ச்சி மேலோங்குகிறது எனில், அதற்கான தூண்டுதல் அல்லது சூழல் ஏற்பட வேண்டும். அவ்வாறு ஏற்பட்டால் தான் ஆண்களுக்கு ஆண்குறி விறைப்படையும். ஆனால், அது போன்ற என்ற காரணமும் இன்றி விறைப்படைவதை தான் ரெஸ்ட்லெஸ் ஜெனிட்டல் டிஸ்ஸார்டர் என்று கூறுகின்றனர்.

பெண்களுக்கு ஏற்படும் ஒன்று

பெண்களுக்கு ஏற்படும் ஒன்று

இது போன்று, எந்த ஒரு உடல் சார்ந்த அல்லது வேறு காரணங்கள் ஏதும் இன்றி பெண்களுக்கு தான் உச்சம் அடையும் தன்மை ஏற்படும். (உடலின் வேட்கை அதிகரிப்பதனால் ஏற்படும் உணர்ச்சியின் வெளிபாடு இது)

ஆர்.ஜி.எஸ்'ன் அறிகுறி

ஆர்.ஜி.எஸ்'ன் அறிகுறி

எந்த ஒரு காரணமும் இன்றி உங்களுது பிறப்புறுப்பு பகுதியில் அதிக உணர்ச்சி வெளிப்பாடு அல்லது விறைத்தல் போன்றவை ஆர்.ஜி.எஸ் தாக்கம் இருப்பதற்கான அறிகுறிகள் என்று மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

தெற்கு இல்லினாய்ஸ் பல்கலைக் கழகம்

தெற்கு இல்லினாய்ஸ் பல்கலைக் கழகம்

இது போன்ற ஒரு பிறப்புறுப்பு சார்ந்த பிரச்சனை பரவலாக ஆண்களுக்கு மத்தியில் பரவி வருகிறது என்று தெற்கு இல்லினாய்ஸ் பல்கலைக் கழக (Southern Illinois University) ஆராய்ச்சியாளர்கள் தான் கண்டறிந்துள்ளனர்.

சுய இன்பம் காரணமா?

சுய இன்பம் காரணமா?

இது போன்று எந்த ஒரு காரணமும் இன்றி உணர்ச்சி மேலோங்குவதற்கு சுய இன்பமும் ஓர் காரணமாக கூறப்படுகிறது. உணர்சிகள் இயற்கையாக ஏற்பட வேண்டியது. அதை, தாங்களாக எழுப்பிவிட முயற்சிக்கும் போது இது போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றன.

ஆண்குறி நரம்புகள் பாதிப்பு

ஆண்குறி நரம்புகள் பாதிப்பு

ஆண்குறியில் உணர்ச்சி சம்பந்தப்பட்ட நரம்புகள் இது போன்று எந்த காரணமும் இன்றி அடிக்கடி உணர்ச்சி அடைவதால், அந்த நரம்பு பகுதிகளில் பாதிப்பு ஏற்படலாம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

உடல்நிலை பாதிப்புகள்

உடல்நிலை பாதிப்புகள்

ஆர்.ஜி.எஸ், பிரச்சனையினால் மன அழுத்தம் அதிகரிக்கும் வாய்ப்புகள் இருக்கின்றது. மன அழுத்தம் அதிகரித்தல் அல்லது தொடர்ந்து இருத்தல் ஆண்மையைக் குறைக்கும் அபாயம் இருக்கின்றது.

இல்வாழ்க்கையை பாதிக்கும்

இல்வாழ்க்கையை பாதிக்கும்

மற்றும், இது போன்று ஆண்குறி உணர்சியடைவதால் இல்வாழ்க்கை பாதிப்படையலாம் என்று கூறப்படுகிறது. ஏனெனில், இது உங்கள் மீது ஓர் தவறான மதிப்பை ஏற்படுத்த வாய்ப்புகள் அதிகமாக இருக்கின்றது.

ஆர்.ஜி.எஸ்'ற்கான தீர்வு

ஆர்.ஜி.எஸ்'ற்கான தீர்வு

நரம்பியல் கட்டுப்படுத்தும் முறையில் மருந்துகள் இதற்கு தீர்வளிக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறியிருக்கின்றனர். ஆயினும், இந்த பிரச்சனை பிறப்புறுப்பு சார்ந்து இருப்பதால், இதற்கென தனி மருந்துகள் கண்டுப்பிடிக்க வேண்டும் என்று அவர்கள் ஆராய்ந்து வருகின்றனர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Restless Genital Syndrome A New Medical Disorder for Men

Do You Know About Restless Genital Syndrome? A New Medical Disorder for Men, Read here.
Subscribe Newsletter