தினமும் டர்ர்ர்ர், புர்ர்ர்ரர் பிரச்சனையா? இதோ சில எளிய டிப்ஸ்!!!

Posted By:
Subscribe to Boldsky

கொலை செய்ததை கூட ஒப்புக்கொள்ளும் மனப்பான்மை நம்மவர்களிடையே இருக்கிறது. ஆனால், "குஷ்"விட்டதை ஒப்புக்கொள்ளும் மனப்பான்மை யாரிடமும் இல்லை. காரணம் இது மானப்பிரச்சனை, கேலி கிண்டல்களுக்கு ஆளாக வேண்டியிருக்கும். அதனால் தான் டர்ர்ர், புர்ர்ர் அவஸ்தி ஒருவரின் மிகப்பெரிய பிரச்சனையாக இருக்கிறது.

உருளைக்கிழங்கு மட்டும் தான் இதற்கு காரணம் என்று நீங்கள் நினைத்தால் அது மிகவும் தவறு. நாம் உண்ணும் முறையில் இருந்து, நாம் செய்ய தவறிய சில பழக்கங்களின் காரணமாகவும் கூட இந்த வாயுத்தொல்லை பிரச்சனை நீடித்து இருக்கலாம். இதை அடக்குதல் மிகவும் தவறு என மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

சில எளிய முறைகளை நீங்கள் கடைப்பிடித்தாலே போதுமானது, வாயுத்தொல்லையில் இருந்து தீர்வுக் கண்டுவிடலாம்....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
உணவுத் தேர்வு

உணவுத் தேர்வு

நிறைய உணவுகளில் வாயுத்தொல்லையை ஏற்படுத்தும் தன்மை இருக்கிறது. இவை மலச்சிக்கல் பிரச்சனையையும் ஏற்படுத்தும். முள்ளங்கி, வறுத்த உணவுகள், பீன்ஸ், முட்டைகோஸ், வெங்காயம் என நிறைய உணவுகள் வாயுத்தொல்லையை ஏற்படுத்தும். எனவே, இந்த உணவுகளை அளவாக எடுத்துக் கொள்ள வேண்டும். மேலும் இந்த உணவுகளை உண்ட பிறகு 10 நிமிடங்கள் வாக்கிங் சென்று வர மறக்க வேண்டாம்.

உணவு உட்கொள்ளும் முறை

உணவு உட்கொள்ளும் முறை

சமையலை போலவே, உணவை உட்கொள்வதும் கூட ஒருவகையான கலை தான். உணவை நன்கு மென்று சாப்பிட வேண்டுமே தவிர விழுங்க கூடாது. அப்படியே விழுங்குவதால் கூட வாயுத்தொல்லை ஏற்படலாம்.

இஞ்சியை சேர்க்கவும்

இஞ்சியை சேர்க்கவும்

செரிமானம் மற்றும் வாயுத்தொல்லை சார்ந்த பிரச்சனைக்கு ஓர் சிறந்த நிவாரணி இஞ்சி. உங்கள் உணவில் சிறிதளவு இஞ்சியை சேர்த்துக் கொள்வதால் வாயுத்தொல்லைக்கு நல்ல தீர்வுக் காண முடியும்.

யோகா

யோகா

நீண்ட நாள் வாயுத்தொல்லை பிரச்சனை இருந்து வந்தால் யோகா பயிற்சியின் மூலமாக கூட தீர்வுக் காண முடியும். பவன் முக்தாசனா மற்றும் வீராசனம் போன்ற ஆசனங்கள் வாயுவை வெளியேற்றி வயிற்றை நன்கு உணர வைக்க உதவுகிறது.

செரிமானக் கோளாறுகள்

செரிமானக் கோளாறுகள்

செரிமானக் கோளாறின் காரணமாக கூட வாயுத்தொல்லை அதிகம் ஏற்படலாம். உணவு உட்கொண்ட பிறகு சிறிது நேரம் நடைப்பயிற்சி, சூடாக ஒரு கப் டீ அல்லது கொஞ்சம் சுடுநீர் அல்லது ஒரு வெற்றிலையை வாயில் போட்டு மெல்லுதல் போன்றவை நல்ல தீர்வுக் காண உதவும்.

காற்றையும் சேர்த்து விழுங்க வேண்டாம்

காற்றையும் சேர்த்து விழுங்க வேண்டாம்

சிலர் நன்கு வாயை திறந்து அள்ளி எடுத்து சாப்பிடும் பழக்கம் கொண்டிருப்பார்கள். இவர்கள் காற்றையும் சேர்த்து விழுங்குவதால் கூட வாயுத்தொல்லை ஏற்படலாம். எனவே, நாம் முன்பு கூறியது போல உணவை நன்கு மென்று உண்ணுதல் நல்லது.

எலுமிச்சை நீர், பேக்கிங்பவுடர்

எலுமிச்சை நீர், பேக்கிங்பவுடர்

எலுமிச்சை நீரில் சிறிதளவு பேக்கிங்பவுடர் சேர்த்து நன்கு காந்து குடித்தால் வாயுத்தொல்லைக்கு நல்ல தீர்வுக் காண முடியும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Remedies For Passing Out Intestinal Gas Or Flatulence

Why do we fart? Why does it stink? How to get rid of flatulence or intestinal gas? Here are the remedies and the causes of this problem.
Story first published: Monday, November 16, 2015, 9:41 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter