"ஆப்டோ-ஜெனிட்டிக்ஸ்" கண்பார்வை பிரச்சனைக்கு தீர்வு - ஆராய்ச்சியாளர்கள் சாதனை!!!

By: John
Subscribe to Boldsky

தினமொருக் கண்டுப்பிடிப்பு, புதிய மருத்துவ யுக்தி, என உலக மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் சாதனை செய்து வருகின்றனர். தற்போதைய டிஜிட்டல் உலகில், கணினி, மொபைல், டி.வி, இ-ரீடர் என்று நமது கண்களை பாதிக்கும் பல கருவிகளை நாம் பயன்படுத்தி வருகிறோம். இதனால் கண் சார்ந்த பல பிரச்சனைகள் எழுகின்றன.

இது மட்டுமின்றி, மனித இனத்தின் தோற்றத்தின் முதலே, கண் பார்வை அற்றவர்களுக்கு, முழுமையான பார்வைக் கொண்டுவருவது என்பது மருத்துவர்களுக்கும், மருத்துவ ஆராய்ச்சியாளர்களுக்கும் மிகப் பெரிய சவாலாக இருந்து வந்தது.

ஆனால் இப்போது அதற்கும்,"ஆப்டோ-ஜெனிட்டிக்ஸ்" (ஆப்டிக்ஸ்+ஜெனிட்டிக்ஸ்) என்ற புதிய முறையைக் கண்டுபிடித்து அதன் மூலம் கண்பார்வையைக் கொண்டு வரவும் செய்து சாதனை செய்துள்ளனர்....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சுவிட்சர்லாந்து மருத்துவர்கள் சாதனை

சுவிட்சர்லாந்து மருத்துவர்கள் சாதனை

சுவிட்சர்லாந்தை சேர்ந்த மருத்துவ ஆராய்ச்சியாளர்கள், ஒளி உணர்வு புரதம் எனும் புதிய பொறியியல் யுக்தியை பயன்படுத்து பார்வைக் குறைபாடு அல்லது கண் பார்வையின்மையை குணப்படுத்தும் முறையைக் கண்டுப்பிடித்து சாதனை செய்துள்ளனர்.

எலிகளை வைத்து பரிசோதனை

எலிகளை வைத்து பரிசோதனை

ஆய்வுக்கூடத்தில் கண்பார்வையற்று இருந்த மூன்று எலிகளை இந்த ஆய்வுக்குட்படுத்தி, அந்த எலிகளுக்கு பார்வையும் கொண்டு வந்து இந்த புதிய முறையில் வெற்றியும் கண்டுள்ளனர் சுவிட்சர்லாந்து மருத்துவ ஆராய்ச்சியாளர்கள்.

மனிதர்களுக்கு பயன் தரும்

மனிதர்களுக்கு பயன் தரும்

இந்த ஆராய்ச்சியில் வெற்றி கண்ட ஆராய்ச்சியாளர்கள், இதுக் கண்டிப்பாக மனிதர்களுக்கு இருக்கும் கண்பார்வை குறைப்பாட்டை நீக்க சிறந்த பயன் தரும் என்று உறுதியாக கூறியுள்ளனர்.

விழித்திரை செல்கள்

விழித்திரை செல்கள்

விழித்திரை செல்கள் செயல்பாடு இன்றி இருப்பதால் தான் கண் பார்வை குறைபாடு ஏற்படுகிறது, எனவே, இந்த புதிய மருத்துவ முறையினால் விழித்திரையில் செயல்பாடின்றி இருக்கும் செல்களை தூண்டுவதால் அதை இயங்க செய்து கண் பார்வைக் கிடைக்க செய்யலாம் என்று சுவிட்சர்லாந்து மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.

பர்ந் பல்கலைக்கழகம்

பர்ந் பல்கலைக்கழகம்

சுவிட்சர்லாந்து பர்ந் பல்கலைக்கழகத்தை (University of Berne) சேர்ந்த மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் தான் இதைக் கண்டுப்பிடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

"ஆப்டோ-ஜெனிட்டிக்ஸ்" புரதம்

இவர்கள் விழித்திரையில் செயலிழந்து இருக்கும் செல்களை, தாங்கள் கண்டுப்பிடித்துள்ள இந்த புதிய "ஆப்டோ-ஜெனிட்டிக்ஸ்" புரதத்தின் மூலம் மாற்றம் செய்து, விழித்திரையை இயங்க வைக்கின்றனர். இதன் மூலம் கண்பார்வை அற்றவர்கள் அல்லது பார்வை குறைபாடு ஏற்பட்டவர்களுக்கு முழுமையான தீர்வு அளிக்க முடியும் என்று இவர்கள் நம்புகின்றனர்.

முந்தையக் கண்டுப்பிடிப்புகள்

முந்தையக் கண்டுப்பிடிப்புகள்

இதற்கு முன்னும் இதுப் போன்ற கண்டுப்பிடிப்புகள் கண்டறியப்பட்டிருந்தாலும், இந்த புதியக் கண்டுப்பிடிப்பின் மூலமாக சாதாரண ஒளியில் கூட அவர்கள் நன்கு பார்க்கும் திறன் அடையலாம் என்று இந்த ஆராய்ச்சியில் பங்கெடுத்திருந்த டாக்டர்.சொஞ்சா (Dr.Sonja) என்பவர் கூறியுள்ளார்.

ஒளிசார்ந்த பிரச்சனைகளுக்கு

ஒளிசார்ந்த பிரச்சனைகளுக்கு

மற்றும் இந்த குழுவை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், இந்த கண்டுப்பிடிப்பின் மூலம் ஒளி சார்ந்த பிரச்சனைகள் அனைத்திற்கும் தீர்வளிக்கும் என்றும். இதுக் குறித்து ஆராய்சிகள் மேலும் தொடரப்படும் மற்றும் இது மற்ற விலங்குகளில் பரிசோதனை செய்யப்பட்ட பிறகு மனிதர்களை வைத்து பரிசோதிப்போம் என்றும் கூறியிருக்கின்றனர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Optogenetics Could Soon Cure Acquired Blindness In Humans

Optogenetics is the combination of genetics and optics to control well-defined events within specific cells of living tissue. Optogenetics Restores Vision Of Lab Rats, Could Soon Cure Acquired Blindness In Humans.
Subscribe Newsletter