தினமும் பல் துலக்காமல் இருந்தால் மனநோய் மற்றும் இதயப் பாதிப்புகள் ஏற்படுமா?

By: John
Subscribe to Boldsky

நமது சில பழக்கங்கள் நம்மை சுற்றி இருப்பவர்களுக்கு நன்மை விளைவிக்கும், சில பழக்கங்கள் நமக்கு நன்மை விளைவிக்கும். ஆனால், பல் துலக்குவது, குளிப்பது போன்ற சில பழக்கங்கள் தான் நமக்கும், நம்மை சுற்றி இருப்பவர்களுக்கும் நன்மை விளைவிக்கும்.

வெள்ளையான பற்களை பெறுவதற்கான 5 ரகசியங்கள்!!!

அட, பல் துலக்காம யாராவது இருப்பாங்களா என்று நீங்கள் நினைக்கலாம். இன்று சந்தையில் விற்கும் நிறைய பல் துலக்கும் பொருள்கள் வெறும் நுரையை மட்டும் தான் தருகிறதே தவிர சுத்தப்படுத்துவது இல்லை. பல், மற்றும் வாய் சுத்தமின்மையினால் வாய் சார்ந்த பிரச்சனைகள் மட்டுமின்றி ஒட்டுமொத்த உடலின் நோய் எதிர்ப்பு சத்தியையும் குறைக்கிறது.

பற்களில் உள்ள மஞ்சள் கறைகளைப் போக்க அற்புதமான வழிகள்!!!

இதுக் குறித்து பி.பி.சி. சமீபத்தில் ஓர் பரிசோதனை செய்து சில விரிவான தகவல்களை வெளியிட்டுள்ளது. இனி, தினமும் பல் துலக்காமல் இருந்தால், உடல் நலத்திற்கு ஏற்படும் குறைபாடுகள் குறித்துப் பார்க்கலாம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பர்மிங்காம் பல்மருத்துவ பல்கலைக்கழகம்

பர்மிங்காம் பல்மருத்துவ பல்கலைக்கழகம்

பர்மிங்காம் பல்மருத்துவ பல்கலைக்கழகம் (University of Birmingham School of Dentistry) சமீபத்தில் இரு வாரம் பல் துலக்காமல் இருந்தால் என்ன உடலில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படுகிறது என்று ஓர் ஆராய்ச்சியை நடத்தினர்.

நோய் எதிர்ப்பு குறைவு

நோய் எதிர்ப்பு குறைவு

இரு வாரங்கள் பல் துலக்காமல் இருந்தால், நோய் எதிர்ப்பு சக்தியின் காவலர்கள் என்று கருதப்படும் வெள்ளை இரத்த அணுக்களின் செயல்பாட்டில் குறைபாடு ஏற்படுகிறது என்று அந்த ஆய்வின் மூலமாக தெரியவந்துள்ளது.

தொற்று ஊடுருவுதல்

தொற்று ஊடுருவுதல்

இதன் காரணமாக, உடலில் ஏற்படும் தொற்று ஊடுருவுதலை எதிர்த்து போராடுவதில் வெள்ளை இரத்த அணுக்கள் தடுமாறுகிறது மற்றும் அதை எதிர்த்து நேரடியாக தாக்குதல் நடத்துவதில் அவை மந்தமாக இருப்பதாகவும் கூறியிருக்கின்றனர்.

ஈறுகளில் தொற்று

ஈறுகளில் தொற்று

தொடர்ந்து இரு வாரங்கள் பல் துலக்காமல் இருந்ததால், ஈறுகளில் தொற்று ஏற்பட்டிருக்கிறது. இந்த ஈறுகளில் ஏற்பட்ட தொற்றின் காரணமாக தான் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியில் குறைபாடு ஏற்பட்டதாகவும் மேலும் அந்த ஆய்வில் கூறப்பட்டிருக்கிறது.

ஈறுகளின் பிரச்னை நீரிழிவு ஏற்படுத்தும்

ஈறுகளின் பிரச்னை நீரிழிவு ஏற்படுத்தும்

சமீபத்திய அறிவியல் ஆய்வில், ஈறு சார்ந்த பிரச்சனைகள் அதிகரிப்பதன் காரணமாக, இதய நோய்கள், டைப் 2 நீரிழிவு நோய், மறதி நோய் (அல்சைமர்), வாதம், புற்றுநோய் போன்றவை ஏற்பட வாய்ப்புகள் இருப்பதாக கூறப்பட்டிருக்கிறது.

பேராசிரியர் சாப்பள்

பேராசிரியர் சாப்பள்

இது குறித்து அந்த ஆய்வை நடத்திய பேராசிரியர் சாப்பள் கூறுகையில், "ஓரிரு வாரங்கள் பல் துலக்காததினால் ஏற்பட்ட ஈறு பிரச்சனைகளுக்கு தீர்வுக் கண்டுவிடலாம். ஆனால் இதே நிலைத் தொடர்ந்து வந்தால், இது தீர்வில்லாத பிரச்சனைகள் ஏற்படும் அளவு பெரிய சேதத்தை ஏற்படுத்தலாம்" என்று கூறியிருக்கிறார்.

குழந்தைகளுக்கு பெரிய பாதிப்பு ஏற்படுத்தும்

குழந்தைகளுக்கு பெரிய பாதிப்பு ஏற்படுத்தும்

மேலும் இந்த ஆய்வை நடத்திய பேராசிரியர்," இந்த ஆய்வில் பெரியவர்களை வைத்து தான் நடத்தினோம். அவர்களுக்கே இவ்வளவு பாதிப்புகளும், உடலில் நோய் எதிர்ப்பு சார்ந்த மாற்றங்களும் ஏற்பட்டிருக்கிறது. இது போன்ற செயல்கள் குழந்தைகள் செய்து வந்தால், அதன் விளைவுகள் மோசமாக போகலாம் என்றும் அவர் கூறியிருக்கிறார்.

வெள்ளை அணுக்கள் பரிசோதனை

வெள்ளை அணுக்கள் பரிசோதனை

இந்த ஆய்வில் கலந்துகொண்டு, இரண்டு வரங்கள் பல் துலக்காமல் இருந்தவர்களது வெள்ளை அணுக்களை பரிசோதித்து பார்த்ததில் தான் இவ்வாறான தாக்கங்களும், பாதிப்புகள் உண்டாகலாம் என்று கண்டறியப்பட்டுள்ளது.

பி.பி.சி.க்கான ஆய்வு

பி.பி.சி.க்கான ஆய்வு

புதியதாக பி.பி.சி. தொடங்க இருக்கும் ஓர் இரண்டு பாக நிகழ்சிக்காக இந்த ஆய்வு நடத்தப்பட்டது, இதில் தான் இந்த விஷயங்கள் எல்லாம் தெரியவந்துள்ளது.

சரியாக பல் துலக்குதல்

சரியாக பல் துலக்குதல்

பலரும் தாங்கள் தினமும் பல் துலக்குகிறோம் என்ற பெயரில் கரகரவென பிரஷை வாய்க்குள்விட்டு ஆட்டிவிட்டு வாயை கழுவி வந்துவிடுகின்றனர். இதுவும் ஏறத்தாழ பல் துலக்காமல் இருப்பதற்கு ஈடானது தான். நீங்கள் பயன்படுத்தும் பெரும்பாலான டூத் பேஸ்ட்டுகள் வெறும் நுரையை மட்டுமே தரும். இதன் மூலம் முழுமையாக வாயில் இருக்கும் பாக்டீரியாக்கள் அழியாது.

இனிப்பு உணவுகள்

இனிப்பு உணவுகள்

இனிப்பு உணவுகள் சாப்பிட்ட சிறிது நேரத்தில் வாயை நன்கு கழுவுதல் அவசியம். பெரும்பாலும் வாய் சார்ந்த பாக்டீரியா தாக்கம் ஏற்பட காரணமாக இருப்பது பல் இடுக்குகளில் சிக்கிக்கொள்ளும் இனிப்பு உணவுகள் தான்.

பற்களை வெள்ளை ஆக்கும் பொருட்கள்

பற்களை வெள்ளை ஆக்கும் பொருட்கள்

பற்களை வெள்ளை ஆக்கும் என சந்தையில் ஏராளமான பொருட்கள் விற்கப்படுகிறது. ஆனால், அவை யாவும் முற்றிலும் பயனளிப்பது அல்ல என்றும் இயற்கையான பொருள்களை பயன்படுத்துவது தான் சிறந்த முறை என்றும் கூறப்படுகிறது.

கருத்து!!!

கருத்து!!!

"இதத்தான அய்யா நாங்க காலம் காலமா பண்ணிட்டு இருந்தோம், நீங்க இப்போ வந்து ஆராய்ச்சி பண்ணி சொல்றீங்க... என்னமா நீங்கள் இப்படி பண்றீங்களேம்மா... இதுல டூத் பேஸ்ட்ல உப்பு, கிராம்பு, மிளகா தூள் இருக்கான்னு எல்லாம் கேட்கிறீங்க..."

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Not Brushing Your Teeth Can Trigger Dementia And Heart Disease

Do you know, not brushing your teeth can trigger dementia and heart disease? read here.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter