காண்டம் பயன்படுத்துவதனால் ஏற்படும் பக்க விளைவுகள் - ஷாக் ரிப்போர்ட்!!!

Posted By:
Subscribe to Boldsky

ஆணுறை பயன்படுத்த காரணமே தேவையற்ற கருத்தரிப்பை தடுக்கவும், பால்வினை நோய்களில் இருந்து எந்த தாக்கமும் ஏற்படாது பாதுகாப்பாக இருக்கவும் தான். நமது நாட்டில் பெரும்பாலும் ஆணுறை தான் பயன்படுத்துகின்றனர். பெண்ணுறைகள் பற்றிய விழிப்புணர்வு இல்லாததே இதற்கான காரணம். ஆணுறை பயன்படுத்துவதனால் ஏற்படும் நன்மைகளை போலவே தீமைகளும் சில இருக்கின்றன.

காண்டம் பயன்படுத்தாமலேயே கருத்தரிப்பதை தடுக்க சில டிப்ஸ்...

இதன் மூலம் ஆண்கள் மற்றும் பெண்கள் இருபாலருக்கும் லேடெக்ஸ் (Latex Allergy) அழற்சிகள் உருவாகின்றன. இது ரப்பர் மரத்தில் இருந்து எடுக்கப்படும் பொருள் ஆகும். இதன் கலப்பு ஆணுறையில் பயன்படுத்தப்படுகிறது. இந்த மூலப்பொருளினால் பிறப்புறுப்பின் மேல் தோலில் அழற்சி ஏற்படுகிறது எனக் கூறப்படுகிறது.

ஆணுறையை தவிர்க்க ஆண்கள் சொல்லும் 10 சாக்கு போக்குகள்!!!

இது மட்டுமில்லாது காண்டம் பால்வினை நோய்களுக்கு எதிராக முழுவதுமாய் பயன் தருவதில்லை என்றும் கூறப்படுகிறது. இன்னும் இதை பற்றி மேலும் விரிவாக தெரிந்துக் கொள்ள தொடர்ந்து படியுங்கள்....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கருத்தரிப்பு பிரச்சனை

கருத்தரிப்பு பிரச்சனை

தேவையற்ற கருத்தரிப்பை தவிர்க்க தான் ஆணுறை பயன்படுத்துகின்றனர். ஆயினும் 100% ஆணுறை கருத்தரிப்பை தவிர்ப்பதில்லை என்பது தான் உண்மை. ஆணுறையிலும் தரம் இருப்பதை நீங்கள் தெரிந்துக் கொள்ள வேண்டும். ஆணுறை பழையதாக இருக்குமெனில் அது வலுவில்லாமலும் விரிசலடையவும் வாய்ப்புகள் இருக்கிறது. இதனால் 100-இல் 15 பெண்கள் ஆணுறை பயன்படுத்தியும் கருத்தரிக்கின்றனர் என ஒரு ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

லேடெக்ஸ் (Latex) அழற்சி

லேடெக்ஸ் (Latex) அழற்சி

இது ரப்பர் மரத்தில் இருந்து எடுக்கப்படும் பொருள் ஆகும். இதன் கலப்பு ஆணுறையில் பயன்படுத்தப்படுகிறது. இந்த மூலப்பொருளினால் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு பிறப்புறுப்பில் அழற்சி ஏற்படுகிறது எனப்படுகிறது. இது அந்தரங்க உறுப்பின் மேல் தோலில் சொறி படலம் போல உருவாகும் என கூறப்படுகிறது.

பால்வினை நோய்

பால்வினை நோய்

பால்வினை நோய்க்கு எதிராக முழுவதுமாய் ஆணுறைகள் பயனளிப்பது இல்லை எனக் கூறப்படுகிறது. நீங்கள் நினைப்பதை போல அனைத்து ஆணுறைகளும் ஒரே தரத்தில் தயாரிக்கப்படுவதில்லை. நீங்கள் உடலுறவுக் கொள்ளும் போது தரமற்ற ஆணுறைகளை பயன்ப்படுத்துவதன் மூலம் கிழிசல்கள் ஏற்படுகின்றன இதன் மூலம் பால்வினை நோய் தொற்று ஏற்படும் அபாயம் இருக்கிறது. மற்றும் ஹெர்பீஸ் (Herpes) எனப்படும் பால்வினை தோல் அழற்சி நோய் ஆணுறை பயன்படுத்தினாலும் கூட அந்தரங்க உறுப்பின் மேல் தோலில் பரவுகிறது என கூறப்படுகிறது.

துணையின் எதிர்ப்பு

துணையின் எதிர்ப்பு

உடலுறவுக் கொள்ளும் போது பெரும்பாலான துணையினர் ஆணுறை பயன்படுத்துவதை தவிர்கின்றனர். இதற்கு காரணம் இது அவர்களது உடலுறவில் உச்சம் அடைய தடையை இருக்கிறது என அவர்களது கருதுவதே ஆகும். மற்றும் எந்த ஒரு ஆணுறையும் அனைவருக்கும் சரியாக பொருந்தாது என்பதும் அதன் மூலம் அசௌகரியமாக அவர்கள் உணர்வதும் கூட ஒரு காரணமாக கூறப்படுகிறது.

ஆணுறை கிழிசல்

ஆணுறை கிழிசல்

நீங்கள் ஒருவேளை ஆணுறை பயன்படுத்துபவராக இருந்தால் சில சமயங்களில் நீங்கள் இதை எதிர் கொண்டிருந்திருக்கலாம். ஆணுறை அனைத்து நேரங்களிலும் பாதுகாப்பு தருவதில்லை. உடலுறவில் வேகம் காட்டும் போதும், அதன் தரம் குறைவாக இருக்கும் போதும் அல்லது ஒருவேளை ஆணுறை பழையதாக (தயாரித்து வெகு நாட்கள் ஆகியிருந்தால்) கிழிசல் ஏற்பட வாய்ப்புகள் இருக்கின்றன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Negative Side Effects of Condoms

Condoms may prevent you from the dangerous sexual transition diseases (STD's). But in other-side it has some negative side effects too. You must know about it.