For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உடலின் மூலை முடுக்குகளில் சேர்ந்துள்ள நச்சுக்களை வெளியேற்றும் அற்புத ஜூஸ்!!!

By Maha
|

தற்போதைய காலத்தில் கண்ட உணவுகளை உட்கொண்டு உடலில் நச்சுக்களை அதிகமாக சேர்த்துக் கொண்டிருக்கிறோம். அதுமட்டுமின்றி, பழக்கவழக்கங்களும் உடலில் நச்சுக்கள் சேர்வதற்கு காரணமாக விளங்குகின்றன. நச்சுக்களின் அளவு உடலில் அதிகமாக தேங்கினால், அதனால் பல்வேறு உடல் உபாதைகளை சந்திக்கக்கூடும்.

நைட் தூங்கும் போது இத குடிச்சா தொப்பை குறையுமாம்...!

அதற்கு அவ்வப்போது உடலை சுத்தப்படுத்தும் உணவுப் பொருட்களை உணவில் சேர்த்து வருவதோடு, நீரை அதிக அளவில் குடித்து வர வேண்டும். மேலும் சரிவிகித உணவுகளை மேற்கொள்ளாவிட்டால், அதுவே நோய்களை வலிமையாக்கி, உடல் ஆரோக்கியத்தையே கெடுத்துவிடும்.

ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு உடனடி தீர்வைத் தரும் ஆயுர்வேத ஜூஸ்கள்!!!

எனவே உடலை வாரம் அல்லது மாதம் ஒருமுறை சுத்தப்படுத்தலாம் என நினைக்காமல், அன்றாடம் உடலில் சேரும் கழிவுகளை வெளியேற்றுங்கள். அதற்கு ஒரு அற்புதமான ஜூஸ் ஒன்று உள்ளது. அந்த ஜூஸை தினமும் குடித்து வந்தால், உடலில் சேர்ந்துள்ள கழிவுகளை எளிதில் அகற்றிவிடலாம்.

மூன்றே நாளில் தொப்பையின் அளவைக் குறைக்க உதவும் அற்புத ஜூஸ்!!!

சரி, இப்போது அந்த ஜூஸ் என்னவென்றும், அதில் சேர்க்கப்படும் பொருட்கள் குறித்தும் காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கேரட்

கேரட்

கேரட்டை தினமும் சாப்பிடும் பழக்கத்தைக் கொள்ளுங்கள். இதனால் கண் பார்வை அதிகரிப்பதோடு, கல்லீரலின் செயல்பாடு அதிகரித்து, செரிமானம் சீராக நடைபெற்று, மலச்சிக்கல் நீங்கி, உடல் சுத்தமாகிவிடும். மேலும் கேரட் குடல் சுவர்களில் படிந்துள்ள ஆபத்தான டாக்ஸின்கள் மற்றும் பயனில்லாத ஹார்மோன்களை வெளியேற்றும்.

ஆப்பிள்

ஆப்பிள்

ஆப்பிள் மிகவும் சிறப்பான ஒரு கிளின்சர் எனலாம். ஏனெனில் இது உடலின் செயல்பாடுகளை சீராக தூண்டிவிட்டு, குடலியக்கம் நன்கு நடைபெற்று, குடல் தசைகள் கழிவுகளை சீராக தள்ளி வெளியேற்றும்.

வெள்ளரிக்காய்

வெள்ளரிக்காய்

வெள்ளரிக்காயில் நீர்ச்சத்து அதிகம் உள்ளது. எனவே இதனை முடிந்தால் அன்றாடம் உட்கொண்டு வாருங்கள். இதன் மூலம் உடலில் வறட்சி ஏற்படுவதைத் தடுத்து, செல்களில் புகுந்துள்ள ஆபத்தான டாக்ஸின்களை வெளியேற்றலாம்.

செலரி

செலரி

செலரி என்பது சாலட்டுகளில் அதிகம் சேர்க்கப்படும் ஒரு மூலிகை கீரை. இந்த செலரி உடலை சுத்தப்படுத்தும் பணியை செய்வதில் சிறந்தது. பெரும்பாலானோருக்கு இதனைப் பற்றி தெரியது. ஆனால் இதில் உள்ள சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், செல்களுக்கு நல்ல பாதுகாப்பு தருவதோடு, இதில் உள்ள மருத்துவ குணங்களால் இரத்த அழுத்தம், புற்றுநோய், சிறுநீரக பிரச்சனைகள் போன்றவற்றை சரிசெய்யலாம்.

ஜூஸ் செய்யும் முறை

ஜூஸ் செய்யும் முறை

3 கேரட்

1 ஆப்பிள்

1 வெள்ளரிக்காய்

1 தண்டு செலரி

மேலே சொன்ன அனைத்து பொருட்களையும் மிக்ஸியில் போட்டு அரைத்து குடிக்க வேண்டும். மேலும் இதனை எப்போது வேண்டுமானாலும், எத்தனை முறை வேண்டுமானாலும் குடிக்கலாம்.

Image Courtesy: healthyfoodstyle

இதர நன்மைகள்

இதர நன்மைகள்

மேற்கூறிய பொருட்களைக் கொண்டு ஜூஸ் செய்து குடித்தால், உடலில் சேர்ந்துள்ள நச்சுக்கள் அனைத்து வெளியேறுவதோடு, ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள் நீங்கி, நீரிழிவு கட்டுப்பாட்டுடன் இருந்து, புற்றுநோய் செல்களின் வளர்ச்சி தடுக்கப்படும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Miraculous Juice To Cleanse Your Body And Remove All Toxins

Miraculous Juice to Cleanse Your Body and Remove All Toxins In most cases imbalanced diet is the root of all diseases you are fighting with.