வெள்ளை ஒயின் உடலுக்கு ஆபத்தானதா?

Posted By:
Subscribe to Boldsky

பொதுவாக ஆல்கஹால் குடித்தாலே உடலுக்கு தீங்கு நேரிடும். அதில் வெள்ளை ஒயின் மட்டும் என்ன ஆரோக்கியமானதாக இருக்குமா? என்று பலர் கேட்கலாம். உண்மையில் ஆல்கஹால் ஆரோக்கியமானதே. அதிலும் அதனை அளவாக எடுத்து வந்தால், உடல் ஆரோக்கியமாகத் தான் இருக்கும். அளவுக்கு அதிகமானால் தான் உயிருக்கே ஆபத்தை விளைவிக்கும் படியான பிரச்சனையை சந்திக்கக்கூடும்.

ஆம், ஆல்கஹாலில் ரெட் ஒயின், பீர், விஸ்கி போன்றவற்றை அளவாக குடித்து வந்தால், உடல் மட்டுமின்றி சருமமும் ஆரோக்கியமாக இருக்கும். ஆனால் ஒயினின் மற்றொரு வகையான வெள்ளை நிற ஒயினை தொடர்ந்து அளவாக குடித்து வந்தாலும் ஒருசில ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திக்கக்கூடும்.

இங்கு வெள்ளை நிற ஒயினை தொடர்ந்து குடிப்பதால் என்ன பிரச்சனைகளை சந்திக்கக்கூடும் என்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
உடல் பருமனை ஏற்படுத்தும்

உடல் பருமனை ஏற்படுத்தும்

வெள்ளை நிற ஒயினில் கலோரிகள் அதிக அளவில் இருப்பதால், இதனை தொடர்ச்சியாக குடித்து வந்தால், உடல் பருமன் அதிகரிக்கும். அதிலும் ஒரு பெரிய டம்ளர் வெள்ளை ஒயினில் 300-380 கலோரிகள் நிறைந்துள்ளது. ஆகவே நீங்கள் உடல் எடையை குறைக்க நினைத்தால், வெள்ளை ஒயினை தவிர்க்க வேண்டும்.

அடிமையாக்கிவிடும்

அடிமையாக்கிவிடும்

வெள்ளை ஒயினை தொடர்ந்து குடித்து வந்தால், ஒரு கட்டத்தில் அது உங்களை அடிமையாக்கிவிடும். பின் தினமும் அதனை குடிக்காமல் விட்டால், உங்களுக்கு தலை பாரம், கை நடுக்கம் போன்றவை ஏற்பட ஆரம்பிக்கும். ஆகவே இதனை சாதாரணமாக கூட குடிக்க வேண்டாம். வேண்டுமெனில் என்றாவது ஒருநாள் நடக்கும் பார்ட்டியில் சிறிது குடிக்கலாம்.

இதர ஆரோக்கிய பிரச்சனைகள்

இதர ஆரோக்கிய பிரச்சனைகள்

வெள்ளை ஒயின் சற்று அதிகமானால், அது உயர் இரத்த அழுத்தம், கணைய அழற்சி, கல்லீரல் இழைநார் வளர்ச்சி, பக்கவாதம் மற்றும் பலவகையான புற்றுநோய்கள் தாக்கும் வாய்ப்புள்ளது. ஒருவேளை உங்களுக்கு ஒரு விஷயத்தை பழகினால் அடிமையாகும் நிலை இருந்தால், வெள்ளை ஒயின் குடிப்பதை அறவே தவிர்ப்பது நல்லது.

மலட்டுத்தன்மையை ஏற்படுத்தும்

மலட்டுத்தன்மையை ஏற்படுத்தும்

வெள்ளை ஒயினை ஆண்களோ அல்லது பெண்களோ பருகினால், மலட்டுத்தன்மை ஏற்படும் வாய்ப்பு உள்ளது. முக்கியமாக கர்ப்பமாக முயற்சிக்கும் போது, பெண்கள் வெள்ளை ஒயினைத் தவிர்க்க வேண்டும். ஆண்கள், வெள்ளை ஒயினை அதிகம் பருகினால், பாலுணர்ச்சி பாதிக்கப்படும்.

பெண்களுக்கு மன இறுக்கத்தை ஏற்படுத்தும்

பெண்களுக்கு மன இறுக்கத்தை ஏற்படுத்தும்

சமீபத்திய ஆய்வு ஒன்றில், வெள்ளை ஒயின் பெண்களுக்கு மன இறுக்கத்தை ஏற்படுத்துவதாக தெரிவித்துள்ளது. அதுமட்டுமின்றி, வெள்ளை ஒயினை தொடர்ந்து குடித்து வந்தால், அது தலை வலி மற்றும் சில வகையான அலர்ஜிகளையும் ஏற்படுத்தும். ஏனெனில் வெள்ளை ஒயினில் சல்பைட் என்னும் பொருள் நிறைந்துள்ளது. இவையே அனைத்திற்கும் காரணம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Is White Wine Bad For Health?

Is white wine bad for health? Well, when compared to red wine, white wine isn't so good for health.
Story first published: Friday, January 9, 2015, 17:05 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter