Latest Updates
-
5 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான ஐஸ்கிரீம் - அப்படி இதுல என்னதான் ஸ்பெஷல் தெரியுமா? -
1 கப் பச்சரிசி இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. பசங்க கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
World Heart Day 2026: 1 சிகரெட் அடிச்சா 20 நிமிஷத்துல இதயத்துல என்ன நடக்கும்? - விளக்கும் இதய நிபுணர்! -
4 பிரெட் இருந்தா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - வீட்ல எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 11 வரை இந்த 5 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியும்! -
லாயருக்கும், அட்வகேட்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா? அப்ப ரெண்டும் ஒன்னு இல்லையா? ஷாக் ஆகாதீங்க -
அவலும், முட்டையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணி பாருங்க.. -
செப்டம்பர் 29, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு தெண்ட செலவுகள் தேடிவரப்போகுதாம் -
புதன் துலாம் ராசியில் வக்ர பெயர்ச்சியை தொடங்கப்போவதால் இந்த 3 ராசிகளின் கனவுகள் பலிக்கப்போகுதாம் -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் தொக்கு செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும்
வெளிநாட்டு மக்களும் பின்பற்றும் சில இந்திய இயற்கை வைத்தியங்கள்!!!
இந்தியா அதன் கலாச்சாரம், பழக்கவழக்கம், பண்பாடு போன்றவை நிறைந்த ஓர் நாடு. அதுமட்டுமின்றி, இந்திய நாட்டில் பல்வேறு இயற்கை வைத்தியங்களான யோகா, ஹோமியோபதி போன்றவை உள்ளது. மேலும் இந்திய நாட்டின் இயற்கை மருத்துவ முறைகளானது பல்வேறு நோய்களை நீக்கி, உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்து நிரூபிக்கப்பட்டதும், பல்வேறு மேற்கத்திய மக்களும் இந்திய இயற்கை வைத்தியங்களைப் பின்பற்ற ஆரம்பித்துவிட்டனர்.
இந்திய பாரம்பரிய பழக்கங்களைக் கடைப்பிடிப்பதால் பெறும் ஆரோக்கிய நன்மைகள்!!!
ஹாலிவுட் பிரபலங்கள் பலர் தங்களின் ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு இந்திய ஆரோக்கிய குறிப்புகளைத் தான் பின்பற்றுகின்றனர். உதாரணமாக, கிம் கர்தாஷியன், ஜெனீபர் அனிஸ்டன் போன்றோர் யோகாவை செய்து வருகின்றனர்.
நீங்கள் போதிய அளவில் தண்ணீர் குடிக்காவிட்டால் சந்திக்கும் பிரச்சனைகள்!!!
இங்கு மேற்கத்திய மக்கள் விரும்பி மேற்கொண்டு வரும் சில இந்திய ஆரோக்கிய குறிப்புகள் பட்டியலிடப்பட்டுள்ளன. அவை என்னவென்று சற்று படித்துப் பாருங்கள்.
ஏன் அக்கால ஆண்களுக்கு வயாகராவின் அவசியமே இருந்ததில்லை என்பதற்கான காரணங்கள்!

தியானம்
கண்களை மூடி ஓம் என்னும் மந்திரைத்தை உச்சரித்தவாறு, மூச்சை மெதுவாக உள்ளிழுத்து வெளியே விடும் தியானமானது மேற்கத்திய மக்களால் பின்பற்றப்பட்டு வருகிறது.

நெய்
நெய் ஓர் ஆரோக்கியமான உணவுப் பொருள். இதனை அன்றாடம் உணவில் சிறிது சேர்த்து வந்தால், உடலின் ஆரோக்கியம் மேம்படும். சொல்லப்போனால் வெஜிடேபிள் எண்ணெயை விட சிறந்தது நெய். இந்த நெய்யை கூட மேற்கத்திய மக்கள் தங்களின் உணவில் சேர்த்து வருகிறார்கள்.

இஞ்சி டீ
முன்பெல்லாம் சளி, இருமல் போன்றவற்றிற்கு மாத்திரைகளை எடுத்து வந்த மேற்கத்திய மக்கள், தற்போது சூடாக ஒரு கப் இஞ்சி டீயை குடித்து வருகிறார்கள். இஞ்சி டீயானது உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதோடு, தொற்றுக்களை சீக்கிரம் அழித்துவிடும் என்பது தெரிந்துவிட்டது.

தேங்காய் எண்ணெய்
கேரளாவில் தேங்காய் எண்ணெய் உபயோகம் அதிகம் இருக்கும். மேலும் அப்பகுதியில் உள்ளவர்கள் தங்களின் உணவில் தேங்காய் எண்ணெயை சேர்ப்பதால் தான் அவர்கள் சிக்கென்று உள்ளார்கள். எனவே இதை அறிந்து கொண்ட மேற்கத்திய மக்கள் தங்களின் உணவிலும் தேங்காய் எண்ணெயை சேர்க்க ஆரம்பித்துவிட்டார்கள்.

மஞ்சள்
மஞ்சளில் உள்ள நோயெதிர்ப்பு அழற்சி தன்மையினால், இது ஆயுர்வேத மருத்துவத்தில் பல நூற்றாண்டுகளாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அத்தகைய மஞ்சளையும் மேற்கத்திய மக்கள் தங்களின் உணவில் சேர்த்து வருகிறார்கள்.

யோகா
இந்தியாவில் தோன்றிய மிகவும் அற்புதமான ஓர் கலை தான் யோகா. இந்த யோகாவைக் கொண்டு எத்தகைய உடல்நல பிரச்சனைகளையும் போக்கிவிடலாம். இந்த யோகாவைக் குறித்து மேற்கொண்ட ஆய்வில், யோகாவின் ஒவ்வொரு நிலையும் ஒவ்வொரு பிரச்சனைகளை குணப்படுத்த உதவுகிறது என்று தெரிய வந்துள்ளது. எனவே மேற்கத்திய மக்கள் தங்களின் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த யோகாவை அன்றாடம் மேற்கொண்டு வருகின்றனர்.



Click it and Unblock the Notifications
