இதனால் தான் ஆண்களுக்கு இதயநோய், நீரிழிவு அபாயம் அதிகரிக்கிறதாம்...

Posted By:
Subscribe to Boldsky

எண்ணற்ற முறை கூறியும் பயனற்று போகும் விஷயங்கள் நிறைய இருக்கின்றன. மது, புகை அருந்த வேண்டாம், அதிகமாக மொபைல், லேப்டாப் பயன்படுத்த வேண்டாம், இவை உங்கள் ஆண்மையை பாதிக்கும் என நாம் நிறைய இடங்களில் வாசகமாக, விளம்பரமாக, விழிப்புணர்வு நிகழ்வுகளாக கண்டிருப்போம்.

ஆண்களுக்கு டெஸ்டோஸ்டிரோன் அளவு குறைவதால் ஆண்மை குறைபாடு ஏற்படுகிறது. இந்த டெஸ்டோஸ்டிரோன் அளவு குறையும் போது, ஆண்களுக்கு மது, புகை, போதை பொருள் போன்ற காரணங்களால் ஏற்பாடும் உடல்நலக் குறைபாட்டை விட அதிகமான இதய பாதிப்புகள் ஏற்படுகின்றன....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மதுவை விட அதிக வாய்ப்பு

மதுவை விட அதிக வாய்ப்பு

மது, போதை மருந்து எடுத்துக் கொள்ளும் நபர்களைவிட, ஆண்மைக்குறைபாடு உள்ள ஆண்களுக்கு தான் அதிகமான நீரிழிவு மற்றும் இதய நோய் ஏற்படும் அபாயம் இருக்கிறதாம்.

குறைவான டெஸ்டோஸ்டிரோன் அளவு

குறைவான டெஸ்டோஸ்டிரோன் அளவு

சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வுகளில், குறைவான டெஸ்டோஸ்டிரோன் அளவு தான் அதிகப்படியான இதய நோய் மற்றும் மற்ற உடல்நல பாதிப்புகளுக்கு காரணமாக இருக்கிறது என ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகம்

ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகம்

இதுகுறித்து ஸ்டான்போர்ட் பல்கலைக்கழக மருத்துவ பள்ளி ஆய்வாளர் மைக்கேல் (Michael Eisenberg), "இனப்பெருக்கம் செய்யும் திறன் கொண்ட வயதுக்குட்பட்டு இருக்கும் ஆண்கள் (18 - 50) இது சார்ந்த பிரச்சனை என்றால் மருத்துவர்களிடம் பரிசோதனை செய்துக் கொள்வதில்லை. அது பெரியதாய் வளர்ந்த பிறகு தான் மருத்துவரை நாடுகிறார்கள்" என்று கூறியுள்ளார்.

ஆய்வுகள்

ஆய்வுகள்

கடந்த 2001 - 2009 வரை ஏறத்தாழ 1,15,000 நபர்களை வைத்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில் ஆண்மைக்குறைவு உள்ளதாய்கண்டறியப்பட்ட நபர்களின் உடல்நலம் தான் அதிகமாக பாதிக்கபப்ட்டுள்ளதாக ஆய்வாளர்கள் கண்டறிந்தனர்.

உடல்பருமன், குடி, புகை

உடல்பருமன், குடி, புகை

பொதுவாக உடல்பருமன் ஆண்மைக் குறைபாடு ஏற்பட ஓர் காரணமாக இருந்து வருகிறது என்று கூறுவார்கள். மேலும் உடல்பருமன் விந்தணு மரபணுக்களை பாதித்து, குழந்தைகளின் வளர்ச்சியில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்று வேறொரு சமீபத்திய ஆய்வில் கண்டறிந்துள்ளனர்.

உடனே சிகிச்சை மேற்கொள்ளுங்கள்

உடனே சிகிச்சை மேற்கொள்ளுங்கள்

இன்றைய நவீன சிகிச்சைகள் மூலம் நாம் பெரும்பாலும் தீர்வுக் கண்டுவிட முடியும். ஆனால், பாதிக்கப்பட்டுள்ள நபர்கள் சரியான நேரத்தில் பரிசோதனைக்கு வராமல், நேரம் தாழ்த்தி வருவது தான் இங்கு பெரிய பிரச்சனையாக இருக்கிறது என ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

ஆய்வறிக்கை

ஆய்வறிக்கை

இந்த ஆய்வறிக்கை கருவுறுதல் மற்றும் மலடு எனும் (Fertility and Sterility) ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Impotent Men At Higher Risk Of Heart Disease And Diabetes

Do you know Impotent Men At Higher Risk Of Heart Disease, Diabetes? read here in tamil.
Story first published: Wednesday, December 9, 2015, 14:21 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter