மருத்துவர்களே ஆச்சரியப்படும் தேன் மற்றும் இலவங்கப்பட்டை கலவையின் பயன்கள்!!

Posted By:
Subscribe to Boldsky

எப்போதும் மருத்துவர்கள் தான் புதிய மருந்துகளை கண்டுபிடித்து நோயாளிகளை ஆச்சரியப் படுத்துவார்கள். ஆனால், இந்த முறை தேன் மற்றும் இலவங்கப்பட்டை இவற்றின் கலவையால் ஏற்படும் பயன்களை கண்டு மருத்துவர்களே ஆச்சரியத்தில் மூழ்கிப் போய் இருக்கிறார்கள்.

தேன் மற்றும் இலவங்கப்பட்டையில் இருக்கும் மருத்துவ குணங்கள் மிகவும் சக்தி வாய்ந்தவை என்றும், இவை பல உடல்நலக் கோளாறுகளுக்கு சிறந்த பயனளிக்கிறது என்றும் மருத்துவர்கள் மற்றும் ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகிறார்கள்.

ஆயிரம் வருடங்களாக எகிப்து பகுதிகளில் இவற்றை அருமருந்தாக பயன்படுத்தி வந்துள்ளனர். மற்றும் நமது இந்திய பாரம்பரியத்தில் இவற்றை நல்ல ஆரோக்கியத்துடன் நீண்ட வாழ்நாளுடன் இருப்பதற்கு பயன்படுத்தி வந்துள்ளனர். இதை இப்போது மாடர்ன் மருத்துவமும் ஒப்புக்கொண்டுள்ளது....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கொலஸ்ட்ரால் குறைக்க

கொலஸ்ட்ரால் குறைக்க

இரண்டு ஸ்பூன் தேனுடன், மூன்று ஸ்பூன் இலவங்கப்பட்டை சேர்த்து தண்ணீரில் கலந்து சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள கொலஸ்ட்ரால் அளவு இரண்டு மணி நேரத்தில் 10% குறையுமாம்.

இதய நலன்

இதய நலன்

தொடர்ந்து காலை வேளையில் கொஞ்சம் தேனுடன் இலவங்கப்பட்டை சேர்த்து ப்ரெட் போன்ற உணவில் வைத்து சாப்பிட்டு வந்தால் இரத்த கொழுப்பு அளவு குறைந்து மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பினை குறைக்கிறது.

வீக்கம்

வீக்கம்

இரண்டு ஸ்பூன் தேன் மற்றும் ஒரு ஸ்பூன் இலவங்கப்பட்டையை சேர்த்து உட்கொண்டு வந்தால், நாள்பட்ட மூட்டு வலி/ வீக்கம் குணமடையுமாம். ஓர் நாளுக்கு காலை மற்றும் மாலை என இரு வேளைகள் உட்கொள்ள வேண்டும்.

பித்தப்பை

பித்தப்பை

தேன் மற்றும் இலவங்கப்பட்டையின் கலவை பித்தப்பை தொற்றுக்கும் நல்ல தீர்வளிக்கிறது. இரண்டு ஸ்பூன் இலவங்கப்பட்டை பொடி மற்றும் பெரிய ஸ்பூன் அளவு தேனை சுடுநீரில் சேர்த்து உட்கொண்டு வந்தால் பித்தப்பை தொற்றை குணமாக்கலாம்.

சளி, கபம்

சளி, கபம்

ஒரு ஸ்பூன் தேன் மற்றும் கால் ஸ்பூன் இலவங்கப்பட்டை சேர்த்து உட்கொண்டு வந்தால் சளி, கபம், இருமல் போன்றவற்றுக்கு தீர்வுக் காண முடியும்.

நோய் எதிர்ப்பு மண்டலம்

நோய் எதிர்ப்பு மண்டலம்

உங்கள் நோய் எதிர்ப்பு மண்டலத்தை சரி செய்ய தினமும் இந்த தேன் மற்றும் இலவங்கப்பட்டை கலவையை உட்கொண்டு வாருங்கள் . இது இயற்கையாகவே நச்சுக்கள் மற்றும் பாக்டீரியாக்களிடம் இருந்து உடலை பாதுகாக்க உதவுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Honey And Cinnamon A Great Remedy

Even doctors are amazed by this remedy: It prevents heart attack, lowers cholesterol and boosts your immune system.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter