தூக்கி எறியும் கறிவேப்பிலையைக் கொண்டு உடல்நல பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பது எப்படி?

Posted By:
Subscribe to Boldsky

அன்றாட சமையலில் பயன்படுத்தும் ஓர் பொருள் தான் கறிவேப்பிலை. பலரும் கறிவேப்பிலை வெறும் சுவை மற்றும் மணத்திற்காகத் தான் சேர்க்கிறோம் என்று நினைக்கிறோம். ஆனால் அது தவறு. கறிவேப்பிலையில் ஏராளமான நன்மைகள் நிறைந்துள்ளன. குறிப்பாக தூக்கி எறியும் அந்த இலையில் நாம் நினைத்துப் பார்க்க முடியாத அளவில் சத்துக்கள் உள்ளதென்றால் பாருஙகள்.

வெறும் வயிற்றில் பூண்டு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!!!

உங்களுக்கு அன்றாடம் உடலுக்கு வேண்டிய சத்துக்களைப் பெற வேண்டுமானால், உணவில் சேர்க்கும் கறிவேப்பிலையை உட்கொண்டு வந்தாலே போதும். ஏனெனில் கறிவேப்பிலையில் நார்ச்சத்து, இரும்புச்சத்து, கார்போஹைட்ரேட், பாஸ்பரஸ், கால்சியம் மற்றும் வைட்டமின்களான ஏ, ஈ, சி மற்றும் பி போன்றவை நிறைந்துள்ளது.

இதயத்திற்கு செல்லும் இரத்த குழாய்களில் அடைப்பு ஏற்படாமல் இருக்க வேண்டுமா?

பலருக்கும் கறிவேப்பிலை சாப்பிட்டால் முடி வளரும் என்று தான் தெரியும். ஆனால் கறிவேப்பிலையைக் கொண்டு பல பெரிய பிரச்சனைகளுக்கெல்லாம் தீர்வு காணலாம். சரி, இப்போது கறிவேப்பிலையைக் கொண்டு உடல்நல பிரச்சனைகளுக்கு எப்படி தீர்வு காண்பது என காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அசிடிட்டி

அசிடிட்டி

அசிடிட்டி பிரச்சனை இருந்தால், கறிவேப்பிலை சாற்றினைப் பருக அசிடிட்டி மற்றும் செரிமான பிரச்சனைகள் தீரும். அதற்கு கறிவேப்பிலையை ஜூஸ் போட்டு குடிக்க வேண்டிய அவசியமில்லை. தினமும் அதனை சிறிது வாயில் போட்டு மென்று சாப்பிட்டாலே போதும்.

வயிற்று உப்புசம்

வயிற்று உப்புசம்

வயிறு உப்புசத்துடன் இருந்தால், மோரில் கறிவேப்பிலையை அரைத்து போட்டுக் கலந்து குடித்து வர, வயிற்று உப்புசம் குறையும்.

சிறுநீரகப் பாதை பிரச்சனைகள்

சிறுநீரகப் பாதை பிரச்சனைகள்

கறிவேப்பிலை சாற்றில் ஏலக்காய் பொடி சேர்த்து கலந்து குடித்தால், சிறுநீரக பாதையில் உள்ள பிரச்சனைகள் அனைத்தும் அகலும்.

வயிற்றுக்கடுப்பு

வயிற்றுக்கடுப்பு

கடுமையான நோய்த்தொற்றினால் உண்டாகும் வயிற்றுக்கடுப்பை சரிசெய்ய கறிவேப்பிலையை உட்கொண்டு வருவது நல்லது.

ஈறு பிரச்சனைகள்

ஈறு பிரச்சனைகள்

ஈறுகளில் உள்ள பிரச்சனைகள் அகல வேண்டுமெனில், கறிவேப்பிலையின் குச்சியைக் கொண்டு பற்களை துலக்கி வர வேண்டும். இதனால் ஈறுகள் வலிமையடைவதோடு, பற்களும் பளிச்சென்று மாறும்.

காலைச் சோர்வு

காலைச் சோர்வு

கர்ப்பிணிகளுக்கு காலையில் ஏற்படும் சோர்வைப் போக்குவதற்கு எலுமிச்சை ஜூஸில் வெல்லம் மற்றும் சிறிது கறிவேப்பிலை பொடி சேர்த்து கலந்து குடித்து வர, காலைச் சோர்வு நீங்கும்.

நாள்பட்ட இரத்த சோகை

நாள்பட்ட இரத்த சோகை

இரத்த சோகை குணமான சுடுநீரில் அல்லது பாலில் கறிவேப்பிலை பொடி சேர்த்து கலந்து குடித்து வர நல்ல பலன் கிடைக்கும்.

இரத்த சர்க்கரை அளவு

இரத்த சர்க்கரை அளவு

இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சீராக பராமரிக்க, கறிவேப்பிலை டீ உதவும். கறிவேப்பிலையில் இரத்த சர்க்கரை அளவை சீராகப் பராமரிக்கும் நார்ச்சத்து உள்ளது. எனவே அதனை டீயாகவோ அல்லது வெறும் வயிற்றில் அப்படியே பச்சையாகவோ சாப்பிட்டு வருவது நல்லது.

கருமையான முடி

கருமையான முடி

முடி கருமையாக வளர வேண்டுமானால், உணவில் சேர்க்கும் கறிவேப்பிலையை தூக்கி எறியாமல் சாப்பிடுவதோடு, கறிவேப்பிலையை எண்ணெயில் போட்டு காய்ச்சி, அந்த எண்ணெயை தினமும் தலைக்கு தடவி வாருங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Home Remedies With Curry Leaves

Here are some home remedies with curry leaves. Take a look...
Please Wait while comments are loading...
Subscribe Newsletter