அதிகமாக தூங்குவதனால் ஏற்படும் உடல்நலப் பிரச்சனைகள்!!!

By: John
Subscribe to Boldsky

ராப்பகலாக ஓய்வின்றிக் கடுமையாக வேலை செய்துவிட்டு அதிகமாக தூங்குவதில் பிரச்சனையே இல்லை. ஆனால், அதுவும் கூட தொடர்ந்து செய்ய கூடாது. ஆனால், சிலர் எப்போதுமே மலை பாம்பனை போல இருந்த இடத்தைவிட்டு நகராமல் படுத்துக் கொண்டே இருப்பார்கள் அவர்களுக்கு தான் பிரச்சனையே.

இப்படி கும்பகர்ணன் போல படுத்து தூங்கிக் கொண்டிருந்தால் பல உடல்நலக் கோளாறுகள் ஏற்பட வாய்புகள் இருக்கின்றது என கூறப்படுகிறது. பிரசவ காலத்தில் இருக்கும் பெண்களுக்கு பிரசவம் ஏற்படுவதில் பிரச்சனை, இதயக் கோளாறுகள் போன்ற உடல்நல பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம் இருக்கிறதாம்.

இனி, அதிகமாக தூங்குவதனால் ஏற்படும் உடல்நலக் குறைபாடுகள் குறித்துப் பார்க்கலாம்....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மன அழுத்தம்

மன அழுத்தம்

அதிகமாக தூங்குவதனால் மன அழுத்தம் அதிகரிக்கும் வாய்ப்புகள் இருக்கிறதாம். தினமும் 9 மணி நேரமும் தூங்குபவர்களுக்கு 27% பேருக்கு மன அழுத்தம் அதிகரிக்கிறதாம். 9 மணி நேரத்திற்கும் அதிகமாக தூங்குபவர்களுக்கு 49% மன அழுத்தம் அதிகரிக்கிறதாம்.

கருவுறுதலில் பிரச்சனை

கருவுறுதலில் பிரச்சனை

பெண்கள் அதிகமாக தூங்குவதால் கருவுருவதில் பிரச்சனைகள் ஏற்படுகிறதாம். அதிகமாக தூங்குவதால் ஹார்மோன் சுரப்பு மற்றும் மாதவிடாய் சுழற்சியில் பிரச்சனைகள் ஏற்படுமாம். அதனால் தான் கருவுறுதலில் பிரச்சனை ஏற்படுகிறது என்று கூறப்படுகிறது.

உடல்பருமன் அதிகரிக்கும்

உடல்பருமன் அதிகரிக்கும்

ஆறு வருடங்களாக நடத்திய ஓர் ஆராய்ச்சியில் ஒரு நாளில் 10 மணி நேரத்திற்கு மேல் தூங்குபவர்களுக்கு 25% அதிகமாக உடல் எடை அதிகரிக்கிறது என்று கூறப்பட்டுள்ளது.

இதயத்தை பாதிக்கும்

இதயத்தை பாதிக்கும்

ஒருநாளுக்கு 10 மணி நேரம் வரை தூங்குபவர்களில் மூன்றில் ஒரு நபருக்கு இதயம் வலுவிழக்கிறது என்று கூறப்படுகிறது.

கருத்து

கருத்து

சாதரணமாக ஆரோக்கியமான உடல் தகுதிக்கு ஆறு மணிநேர தூக்கமே போதுமானது. எனவே, தேவையில்லாத நேரங்களில் படுத்தவாறே இருக்காமல், குறைந்தபட்சம் எழுந்து அமர்ந்திருக்க முயற்சி செய்யுங்கள். தேவையில்லாமல் நீங்களே விலைக் கொடுத்து பிரச்சனைகள் வாங்கிக் கொள்ள வேண்டாமே!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Health Risks Of Sleeping Too Much

Do You Know About The Health Risks Of Sleeping Too Much? Read Here.
Subscribe Newsletter