For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கட்டியணைத்துக் கொள்வது மற்றும் முத்தமிட்டுக் கொள்வதால் ஏற்படும் நன்மைகள்!!

|

வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்., திரைப்படம் வெளிவந்ததிலிருந்து, அப்படத்தில் நடிகர் கமல்ஹாசன் பேசிய வசனமான கட்டிப்பிடி வைத்தியம் என்பது மிக பிரபலமாக மாறியது. இளைஞர்கள், பெண்களிடம் நக்கலுக்காக கட்டிப்பிடி வைத்தியம் இலவசமாக கிடைக்குமா என்பது போல இன்றளவும் நையாண்டி செய்வதுண்டு.

ஆனால், இப்போது உண்மையிலேயே கட்டிப்பிடிப்பதும், முத்தமிட்டுக் கொள்வதும் ஓர் சிறந்த வைத்தியம் தான் என்று கூறப்பட்டுள்ளது. இந்த கட்டிப்பிடி வைத்தியமும், முத்தமிட்டுக் கொள்வதும் மன அழுத்தம், இதய நலன், தலைவலி, இரத்த அழுத்தம், உடல் எடை குறைப்பு போன்றவற்றுக்கு சிறந்த நிவாரணியாக விளங்குகிறதாம்....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மன அமைதி

மன அமைதி

தம்பதி இருவர் கட்டியணைத்துக் கொள்ளும் போது மன இறுக்கம் குறைகிறதாம். இதனால் மனநிலை மேலோங்குகிறது. மேலும் இதனால் உடலும், மனதும் ஒரு சேர்ந்து இலகுவாக உணர முடிகிறது.

இதயத்திற்கு நல்லது

இதயத்திற்கு நல்லது

அறிவியல் ரீதியாகவே கட்டிப்பிடிப்பது இதயத்திற்கு ஓர் நல்ல வைத்தியம் என்று கூறப்பட்டுள்ளது. உங்கள் விருப்பமானவரை அமைதியான சூழலில் கட்டியணைத்துக் கொள்வதால் இதயம் சார்ந்த பிரச்சனைகள் மற்றும் கோளாறுகள் குறைய வாய்ப்பிருக்கிறதாம்.

மன அழுத்தம் குறையும்

மன அழுத்தம் குறையும்

முத்தமிட்டுக் கொள்வதும், கட்டியணைத்துக் கொள்வதும் மன அழுத்தத்தில் இருந்து விடுபட உதவுகிறது. இதன் மூலம் இரத்தத்தில் "எப்பிநெப்பிரின் இயக்குநீர்"(epinephrine) வெளிபடுவதால், இதயத்துடிப்பு சீராகி மன அழுத்தம் சரி ஆகிறதாம்.

இரத்த அழுத்தம்

இரத்த அழுத்தம்

முத்தமிட்டுக் கொள்ளும் போது இரத்த நாளங்கள் விரிவடைந்து இரத்த அழுத்தம் குறைகிறதாம். இதை ஓர் ஆய்வின் மூலம் நிரூபணமும் செய்துள்ளனர்.

தலைவலியை போக்கும்

தலைவலியை போக்கும்

தலைவலியில் இருந்து விடுபட சிறந்த இயற்கை நிவாரணி கட்டியணைத்துக் கொள்வது என்று கூறப்படுகிறது. இதற்கு காரணம் இரத்த அழுத்தம் குறைவதும், இரத்த நாளங்கள் விரிவடைவதும் தான். இதனால், மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் வலியும் கூட குறையுமாம்.

உடல் எடை குறையும்

உடல் எடை குறையும்

ஒருமுறை முத்தமிட்டுக் கொள்வதால் உங்கள் உடலில் 8-16 கலோரிகள் கரைக்கப்படுகிறது. இதனால் உடல் எடை குறையும் என்று ஓர் பெரும் ஆய்வை நடத்தி கண்டறிந்துள்ளனர்.

உடற்பயிற்சி

உடற்பயிற்சி

தினமும் ஐந்து நிமிடம் முத்தமிட்டுக் கொள்வது ஓர் சிறந்த உடற்பயிற்சியாம். இது, கழுத்து, தாடை மற்றும் முக தசைகளுக்கு சிறந்த பயிற்சியாக அமைகிறதாம்..

அடிமையாகுதலை தடுக்கிறது

அடிமையாகுதலை தடுக்கிறது

இருவர் கட்டியணைத்துக் கொள்ளும் போது ஆக்ஸிடோசின் உருவாகி வெளிபடுகிறது. இந்த ஹார்மோன் ஆல்கஹால் போன்ற போதைக்கு அடிமையாகுதலை குறைக்க உதவுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Health Benefits Of Hugs & Kisses

Learn the health benefits of hugs and kisses! You will be stunned to see how these two activities help you to live longer and healthier, read here in tamil.
Desktop Bottom Promotion