ஆண்கள் கட்டாயம் பரிசோதனை செய்துக் கொள்ள வேண்டியவை!!!

By: John
Subscribe to Boldsky

மொபைல் கட்டணம், இன்டர்நெட் கட்டணம், மின்சார கட்டணம் என இதையெல்லாம் சரி பார்க்கும் ஆண்கள், தங்களது உடல்நிலை பற்றி கவலைக் கொள்வதே கிடையாது. இன்றைய சூழலில், ஃபேஸ் புக்கில் இருக்கும் அக்கறையில் 10% ஆவது உங்கள் நலனில் எடுத்தக்கொண்டால் 10 வருடம் உங்கள் ஆயுளை நீட்டிக்கலாம்.

நாற்பது வயதை நெருங்க, நெருங்க சந்திக்கும் உடல்நல பிரச்சனைகளில் இருந்து தப்பிக்க சில டிப்ஸ்...!

ஆனால், "லைக்" செய்ய நேரம் இருக்கும் நம்மவர்களுக்கு, தங்களது உடல்நிலை "ப்ளாக்" ஆகிக்கொண்டிருப்பது பற்றி தெரிவதில்லை. ஆனால், கட்டாயம் ஆண்கள் ஒரு சில பரிசோதனைகளை செய்துக்கொள்வது அவர்களது உடல்நலத்திற்கும், அவர்களை நம்பியிருக்கும் அவர்களது குடும்ப நலத்திற்கும் நன்மை விளைவிக்கும்....

உங்களுக்கு முப்பது வயசு ஆகபோகுதா? அப்ப இதெல்லா நீங்க கண்டிப்பா மாத்திக்கணும்!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
நீரிழிவு பரிசோதனை

நீரிழிவு பரிசோதனை

முன்பெல்லாம் தங்களது பெற்றோருக்கு நீரிழிவு இருந்தால் தான், தங்களுக்கும் வருமோ என்ற பயம் இருந்து வந்தது. ஆனால், இப்போது நமது உணவுமுறை மாற்றம் மற்றும் உணவுப் பொருட்களில் கலக்கபப்டும் இரசாயனங்களின் பின்விளைவுகளின் காரணமாகவும் நீரிழிவு நோய் ஏற்படுகிறது. உடல் எடை அதிகரிப்பதும் கூட ஓர் காரணமாக இருக்கிறது.

நீரிழிவு அறிகுறிகள்

நீரிழிவு அறிகுறிகள்

தாகம் எடுத்துக்கொண்டே இருப்பது, அதிகமாக சிறுநீர் வெளிப்படுவது, திடீர் உடல் எடை குறைவு, உடல் சோர்வு, பகாயங்கள் விரைவாக குணமாகாமல் இருத்தல்.

நீரிழிவு பரிசோதனை

நீரிழிவு பரிசோதனை

இரத்த பரிசோதனையின் மூலமாகவே, நீரிழிவு இருக்கிறதா? இல்லையா? என அறிந்துக்கொள்ளலாம். அதிகப்படியான இரத்த சர்க்கரை அளவை வைத்து நீரிழிவு நோய் இருக்கிறதா என ஊர்ஜிதம் செய்யப்படும். முக்கியமாக உங்கள் உடல் எடையில் கவனாமாக இருக்க வேண்டியது அவசியம்.

இடுப்பு அளவு

இடுப்பு அளவு

சமீபத்திய ஆய்வில், நடு வயதில் உடல் எடையை சரியாக பராமரிக்கலாம் இருப்பவர்களுக்கு தான் அதிகமாக இதய பாதிப்புகள், நீரிழிவு, சில வகை புற்றுநோய் போன்ற நோய்களின் தாக்கம் ஏற்படுகிறது என்று கூறப்பட்டிருக்கிறது. உங்கள் வயிற்றில் இருக்கும் கொழுப்பு, உங்கள் உடல்நலத்தை பாதிக்கும் ஒரு வகையான நச்சு என்கின்றனர் மருத்துவ நிபுணர்கள். இது, வயிற்றின் அருகில் இருக்கும் உடல் உறுப்புகளையும் பாதிக்குமாம்.

அறிகுறிகள்

அறிகுறிகள்

வயிற்றில் சதை தொங்க ஆரம்பித்தல் தான் இதற்கான அறிகுறி. உங்கள் இடுப்பின் அளவு 38 அங்குலத்தை தாண்டாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது அவசியம்.

இரத்தக் கொதிப்பு

இரத்தக் கொதிப்பு

இன்றைய அவசர முறை வாழ்க்கையில் இரத்தக் கொதிப்பு இலவச இணைப்பாக ஒட்டிக்கொள்கிறது. பருவ வயதுடையவர்களுக்கும் கூட இரத்தக் கொதிப்பு ஏற்படுகிறது என்பது தான் அதிர்ச்சியான செய்தி. இது, உங்கள் இதயம், சிறுநீரகம் போன்ற பாகங்களை பாதிக்கிறது.

அறிகுறிகள்

அறிகுறிகள்

இரத்தக் கொதிப்பை அறிந்துக்கொள்ள எந்த அறிகுறிகளும் இல்லை. 40 வயதை நெருங்குவோர், வருடத்திற்கு ஒருமுறை நீங்களாக பரிசோதனை செய்து தெரிந்துக்கொள்வது நல்லது. பெரும்பாலும் 40 வயதைக் கடக்கும் ஆண்களுக்கு இரத்தக் கொதிப்பு பதவி உயர்வு போல ஒட்டிக்கொள்கிறது.

கொழுப்பு

கொழுப்பு

இரத்தக் கொழுப்பு பரிசோதனை செய்துக்கொள்ள வேண்டியது மிகவும் அவசியமாகும். பெண்களை விட ஆண்களுக்கு தான் அதிகமாக மாரடைப்பு பாதிப்பு ஏற்படுகிறது. இரத்தக் கொழுப்பு அதிகமாவதால் தான் இருதய பாதிப்புகள் அதிகமாக ஏற்படுகிறது.

அறிகுறிகள்

அறிகுறிகள்

இரத்தக் கொதிப்பை போல, இரத்தக் கொழுப்பிற்கும் இது தான் அறிகுறி என்று ஏதும் இல்லை. நீங்கலாக பரிசோதனை செய்து தான் தெரிந்துக்கொள்ள வேண்டும். இதில் இரண்டு கொழுப்பு வகைகள் இருக்கின்றன. எச்.டி.எல் (நல்ல கொழுப்பு), எல்.டி.எல் (தீயக் கொழுப்பு). எல்.டி.எல் கொழுப்பு தான் இதயப் பிரச்சனைகள் ஏற்பட காரணமாக இருக்கிறது.

மனநிலை பரிசோதனை

மனநிலை பரிசோதனை

இன்றைய சூழலில் வேலைக்கு செல்லும் ஆண்கள் பலருக்கு மன அழுத்தம், மன சோர்வு ஏற்படுகிறது. இதனால் தான் பெரும்பாலுமான உடல்நலக் குறைபாடுகள் ஏற்படுகிறது.

 அறிகுறிகள்

அறிகுறிகள்

எப்போதும் சோகமாக இருப்பது, நம்பிக்கையின்றி இருப்பது, அன்றாட வாழ்க்கையில் ஈர்ப்பு இன்றி இருப்பது, உடலுறவில் நாட்டமின்றி இருப்பது, தூக்கமின்மை போன்றவை இதன் அறிகுறிகள் ஆகும்.

பரிசோதனை

பரிசோதனை

உங்கள் நெருங்கிய நண்பர், மனைவி, அம்மா, அப்பா கூட இந்த பிரச்சனைக்கு மருத்துவர்களாய் இருக்கலாம். மனம் திறந்து பேசுங்கள், உங்களுக்கு பிடித்த விஷயங்களை செய்ய ஆரம்பியுங்கள். இதுவே, உங்களை மன அழுத்தத்தில் இருந்து வெளிக்கொண்டு வந்துவிடும். இல்லையேல், நல்ல மனநல மருத்துவரைக் கண்டு தீர்வுக் கேட்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Five Health Checks For Every Men

Do you know about the five health checks for every men? read here.
Story first published: Friday, June 19, 2015, 11:01 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter