டெங்கு, மலேரியாவை தவிர கொசுவால் பரவும் தீவிரமான நோய்கள் - மழைக் காலம் உஷார்!!!

By: John
Subscribe to Boldsky

யானையின் காதில் புகந்த எறும்பையும், மனிதனின் வீட்டுக்குள் புகந்த கொசுவையும் அவ்வளவு சிறிதாக எடைப்போட்டுவிட முடியாது. ஏனெனில், இரண்டுமே உயிரைப் பறிக்கும் திறன் கொண்டவை. பெரும்பாலும் கொசுவினால் டெங்கு, மலேரியா போன்ற கொடிய காய்ச்சல் தான் உண்டாகும் என நாம் அறிந்திருப்போம். ஆனால், இவை இரண்டை தவிர மிக தீவிரமான முறையில் பரவும் ஐந்து நோய்கள் கொசுவினால் மனிதர்கள் மத்தியில் பரவும் பாதிப்புகள் இருக்கிறதாம்....

நீங்கள் மேலும் படிக்க வேண்டியவை.....

கொசுக்களை வீட்டினுள் வரவிடாமல் தடுக்கும் செடிகள்!!!

வீட்டில் பூச்சி தொல்லை இல்லாமல் தடுப்பதற்கான எளிய இயற்கை வழிமுறைகள்!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஜப்பனீஸ் என்சிபாலிட்டிஸ் (Japanese encephalitis)

ஜப்பனீஸ் என்சிபாலிட்டிஸ் (Japanese encephalitis)

ப்ளாவ் வைரஸின் மூலம் பரவும் நோய் தான் இந்த ஜப்பனீஸ் என்சிபாலிட்டிஸ். இந்த நோய் பரவ காரணமாய் இருப்பது குயூலெக்ஸ் கொசு ஆகும் (Culex). இது மூளையில் எரிச்சல், அழற்சியை ஏற்படுத்தும் தன்மைக் கொண்டது. இதன் நோயின் உச்சக்கட்டமாய், மூளையில் இரத்தக்கசிவு கூட ஏற்படலாம் என கூறப்படுகிறது.

யானைக்கால் நோய்

யானைக்கால் நோய்

"ஃபிலாரியால் வார்ம்" (Filarial Worm) எனும் பூச்சியின் காரணமாக இது மனிதனுள் பரவுகிறது. இந்த நோய் ஏற்படவும் குயூலெக்ஸ் கொசுக்கள் தான் காரணம் என்று கூறப்படுகிறது. இது நிணநீர் மண்டலத்தை பாதித்து, கால்களை வீக்கமடைய செய்கிறது. இதனால் தான் யானைக்கால் நோய் பாதிப்பு ஏற்படுகிறது.

மஞ்சள் காய்ச்சல்

மஞ்சள் காய்ச்சல்

இது, தென் ஆப்பிரிக்கா, மற்றும் ஆப்ரிக்காவில் பொதுவான நோயாக காணப்படுகிறது. மஞ்சள் காய்ச்சல் பரவ காரணமாய் இருப்பது பெண் ஏடெஸ் எகிப்தி (Aedes aegypti) எனும் கொசுக்கள் தான். மஞ்சள் காய்ச்சலுக்கு அறிகுறிகளை இருப்பவை, தசை வலி, காய்ச்சல், குமட்டல், மஞ்சள் காமாலை, இரத்த வாந்தி. இதனால், கல்லீரல் வலுவாக பாதிக்கப்படும்.

வெஸ்ட் நைல் வைரஸ்

வெஸ்ட் நைல் வைரஸ்

இந்த வைரஸ் முதன் முதலில் மேற்கு ஆப்ரிக்காவில் தான் கண்டுபிடிக்கப்பட்டது. ப்ளாவ் வைரஸின் மூலமாக தான் இதுவும் பரவுகிறது. இதைக் கண்டறிந்துக்கொள்ள எந்த அறிகுறிகளும் இல்லை. இது கழுத்து விறைப்பு, கோமா, நடுக்கம், வலிப்பு, அல்லது உடல் செயலிழப்பு போன்ற அபாயங்கள் ஏற்பட காரணமாய் இருக்கிறது. இதில் இருந்து மீண்டு வர குறைந்தது 10 மாதங்களில் இருந்து ஒரு வருடம் வரையிலும் ஆகலாம்.

சிக்குன்குனியா

சிக்குன்குனியா

நம் நாட்டிலும் அதிக உயிரிழப்பை ஏற்படுத்தி ஆட்டம் காண வைத்தது தான் இந்த சிக்குன்குனியா.இந்த வைரல் நோய், சிக்குன்குனியாவால் பாதித்த கொசு கடிப்பதனால் தான் ஏற்படுகிறதாம். இதனால் அதிகமான மூட்டு வலி, உடல் மற்றும் தசை வலி ஏற்படும். சிக்குன்குனியாவில் இருந்து மீண்டு வர குறைந்தது 6-7 மாதங்களாவது ஆகும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Five Diseases Caused By Mosquitoes Other Than Dengue And Malaria

Do you know about the five diseases caused by mosquitoes other than dengue and malaria? read here.
Story first published: Friday, June 19, 2015, 17:02 [IST]
Subscribe Newsletter