உங்கள் ஆரோக்கியத்தை அழிக்கும் தினசரி பழக்கங்கள்!!!

Posted By:
Subscribe to Boldsky

ரயில் வண்டியைப் போல புகைப்பது, மூக்கு முட்ட குடிப்பது தான் உங்கள் உடல் நலத்தை பாதிக்கும் என்று நீங்கள் நினைத்தால், அது முழுக்க முழுக்க உங்களுடைய தவறு. உங்களது அன்றாட பழக்கவழக்கங்கள் சிலவனவே உங்கள் ஆரோக்கியத்திற்கு அருகிருந்து குழிப் பறிக்கிறது.

மருத்துவரின் பரிந்துரையின்றி பெண்கள் சாப்பிடக்கூடாத மாத்திரைகள்!!!

சிலர் அன்றாடம் காபிக் குடிப்பது தான் பெரிய அளவில் உடல் நலத்தை பாதிக்கிறது என்று அஞ்சி நடுங்குவார்கள். காபியைக் கண்டால் ஏதோ காண்டாமிருகத்தைக் கண்டது போல காண்டாவார்கள்.

வலி நிவாரணியாக செயல்படும் சிறப்பான ஆறு உணவுகள்!!!

ஆனால் இதையெல்லாம் தவிர நீங்கள் ரசிக்கும், ருசிக்கும் சில பழக்கங்கள் தான் மிகவும் அதிகமான உடலநலப் பாதிப்பை ஏற்படுத்துகிறது...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
24x7

24x7

வாரம் முழுக்க இடைவிடாது செய்யும் வேலைகள். உடனே ஓய்வெடுக்காமல் உழைப்பது பற்றி எண்ண வேண்டாம். சிலர், நாள் முழுக்க சமூக வலைத்தளத்தில் சுற்றிக் கொண்டிருப்பார்கள். சிலர் டி.வி யை ஓயாமால் பார்பார்கள். சிலர், புத்தகம் படித்துக்கொண்டே இருப்பார்கள். இது போன்ற பல பழக்கங்கள் ஒவ்வொருவருக்கும் இருக்கின்றன. இது போன்று 24x7 ஏதனும் வேலையை இடைவிடாது செய்வது தான் பெரும்பாலும் உங்கள் உடல் சக்தியை குடித்துவிடுகிறது. இது உங்களுக்கு மன அழுத்தத்தை அதிரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

உட்கார்ந்த இடத்திலேயே சாப்பிடுவது

உட்கார்ந்த இடத்திலேயே சாப்பிடுவது

உட்கார்ந்த இடத்திலேயே சாப்பிடுவது, டைன்னிங் டேபிளில் அல்ல, வேலை செய்யும் இடத்திலேயே எழுந்திருக்க கூட நேரமின்றி அங்கேயே சாப்பிடுவது மிகவும் தீய பழக்கம். அதே போல கண்ட நேரத்தில் உணவை உட்கொள்ள கூடாது.. காலை 9மணிக்குள்ளேயும், மதியம் 2 மணிக்குள்ளேயும், இரவு 8 - 9 மணிக்குள்ளையும் உணவை எடுத்துக்கொள்வது சரியான முறை என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

செரிமானம் சீராக செயல்பட

செரிமானம் சீராக செயல்பட

உணவை உட்கொள்ள குறைந்தது 20 நிமிடங்களாவது எடுத்துக்கொள்ள, நன்கு மென்று உணவை சாப்பிடுவது அவசியம். இது உங்கள் செரிமானத்தை சரியாக்கும்.

உட்கார்ந்தே வேலை செய்வது

உட்கார்ந்தே வேலை செய்வது

இன்றைய வேலை முறைகள் பலவனவும் கணினியின் முன்னே உட்கார்ந்தே செய்வது போல அமைந்துவிட்டது நமது துரதிர்ஷ்டம். உட்கார்ந்தே வேலை செய்வது உங்கள் முதுகெலும்பை மட்டுமின்றி மூளையையும் பாதிக்கிறது. இதனால் உங்கள் உடல்வலு குறைகிறது. இதை தவிர்க்க அவ்வப்போது சிறிது இடைவேளை எடுத்து வேலை செய்யலாம்.

ஒழுங்கீனமான வாழ்வியல் முறை

ஒழுங்கீனமான வாழ்வியல் முறை

நமது உடல் ஓர் சீரான முறையில் இயங்கும் முறைக் கொண்டதாகும். இயந்திரம் போல அதற்கும் சரியான நேரத்திற்கு சீரான முறையில் ஓய்வு அளிக்க வேண்டும். அதே போல சீரான முறையில் இயங்க ஒத்துழைக்க வேண்டும். கண்ட நேரத்தில் தூங்குவது, எழுவது உங்கள் உடலின் சீரான முறையைக் கெடுக்கிறது. நம் உடலும் ஓர் கணினியை போல தான் சரியாக பயன்படுத்தவில்லை என்றால், ஓர் நாள் திடீர் என்று செயலற்று போய்விடும்.

உணவுக் கட்டுப்பாடு

உணவுக் கட்டுப்பாடு

நல்ல உடல்நிலைக்கு உணவுக் கட்டுப்பாடு என்பது அனைவரும் பின்பற்ற வேண்டியது தான். ஆனால், முற்றிலும் கொழுப்பை தவிர்ப்பதும் உங்கள் உடலுக்கு கேடு விளைவிக்கும். எனவே, உணவுக் கட்டுப்பாடு என்ற முறையில் உங்கள் உடலுக்கு தேவையான அன்றாட சத்துகளை முற்றிலும் தவிரத்து பின்பற்ற வேண்டாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Daily Habits That Are Totally Going To Kill Your Energy

Do you know about the daily habits that are totally going to kill your energy? Read here.
Story first published: Thursday, May 7, 2015, 10:03 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter