அழகு சாதன பொருட்களில் இருக்கும் இரசாயனங்கள் மார்பக புற்றுநோய் உண்டாக்கும் - எச்சரிக்கை!

Posted By:
Subscribe to Boldsky

மஞ்சள், கடலை மாவு, மருதாணிப் போன்ற இயற்கை பொருள்களை பயன்படுத்தி வந்த வரை அழகும், உடல் நலனும் சீர்கெட்டுப் போனதில்லை. எப்போது நாம் அயல்நாட்டு மோகத்தில் இரசாயன கலப்புகளால் தயாரிக்கப்பட்ட அழகு சாதனப் பொருட்களை விளம்பரங்களை நம்பி வாங்க தொடங்கினோமோ அப்போது தான் உடலிலும், உடல் நலத்திலும் நமக்கே தெரியாமல் மாற்றங்கள் ஏற்பட ஆரம்பித்தன.

ஆரோக்கியத்தை சீரழிக்கும் அழகு சாதனப் பொருட்கள்!

நீங்கள் உபயோகப்படுத்தும், கண் மையில் தொடங்கி, நகப்பூச்சு, லிப்ஸ்டிக், கிரீம்கள் என அனைத்திலும் நச்சுத்தன்மை உடைய இராசனங்கள் கலந்து தான் தயாரிக்கப்படுகின்றன. இவை யாவும் உடனே எதிர்வினை விளைவுகளை வெளிகாட்டுபவை அல்ல, மாதங்கள், வருடங்கள் என நாள்பட தான் இதன் சுயரூபத்தைக் காமிக்கும்.

காண்டம் பயன்படுத்துவதனால் ஏற்படும் பக்க விளைவுகள் - ஷாக் ரிப்போர்ட்!!!

இனி, நீங்கள் பயன்படுத்தும் அழகு சாதனப் பொருட்களில் சேர்க்கப்படும் இராசயங்களினால் உடல்நலத்திற்கு என்னென்ன கேடு விளைகிறது என்று பார்க்கலாம்....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ப்த்தாலேட்ஸ் (Phthalates)

ப்த்தாலேட்ஸ் (Phthalates)

ப்த்தாலேட்ஸ் என்பது நாளமில்லா சுரப்பிகளை ஊடறுக்கும் ஒரு கூட்டு இரசாயனம் ஆகும். இந்த இரசாயனம் நைல் பாலிஷ், வாசனம் திரவியங்களில் பயன்படுத்தப்படுகிறது. இது, பெண்கள் முன்னதாகவே பருவமடைய வைக்கிறது மற்றும் மார்பக புற்றுநோய் ஏற்பட காரணமாக இருக்கின்றது

டிரைக்ளோசான் (Triclosan)

டிரைக்ளோசான் (Triclosan)

ஆன்டி-பாக்டீரியல் சோப்பு, வாசனம் திரவியம் மற்றும் டூத் பேஸ்ட்களில் பயன்படுத்தப்படும் இரசாயனம் தான் டிரைக்ளோசான். இது ஒரு வகையான பூச்சிக்கொல்லி இரசாயனம் ஆகும். இது உங்கள் உடலின் ஹார்மோன் அமைப்பு முறையை பாதிக்கக் கூடியது ஆகும். முக்கியமாக தைராய்டு சுரப்பியை பாதிக்கும். மற்றும் இயற்கையான மார்பக வளர்ச்சியை இது சீர்குலைக்கும் என்று கூறப்படுகிறது.

1,4 - ஈரொட்சேன் (1,4 dioxane)

1,4 - ஈரொட்சேன் (1,4 dioxane)

1,4 - ஈரொட்சேன், எந்த ஒரு பொருட்களின் தயாரிப்பு மூலப்பொருள் குறியீட்டிலும், பட்டியலிலும் குறிப்பிடப்பட்டிருக்காது. இந்த இரசாயனம் பெட்ரோலியத்திலிருந்து எடுக்கப்படும் மூலப் பொருள் என்று கூறப்படுகிறது. இந்த இரசாயனத்தை ஷாம்பூ, குளியல் சோப்பு, குழந்தைகள் சோப்பு மற்றும் சில அழகு சாதன பொருட்களில் பயன்படுத்தப்படுகிறது. இந்த இரசாயணம் புற்றுநோயை உண்டாக்க கூடியது என்று சர்வதேச புற்றுநோய் ஆராய்ச்சி மையம் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

 பாராபென்ஸ் (Parabens)

பாராபென்ஸ் (Parabens)

பாராபென்ஸ் எனப்படும் இந்த இரசாயனம், கிரீம், லோஷன், ஆயின்மென்ட் (Oinment), அக்குள் பகுதிகளுக்கு உபயோகப்படுத்தப்படும் வாசனை திரவியம் மற்றும் இதர அழகு சாதன பொருட்களில் பயன்படுத்தப்படுகிறது. இந்த இரசாயனம் திசு ஆய்வு ஆராய்ச்சியில் மார்பக கட்டிகள் ஏற்பட காரணமாக இருப்பதாக கூறப்பட்டிருக்கிறது.

எத்திலீன் ஆக்சைடு (Ethylene Oxide)

எத்திலீன் ஆக்சைடு (Ethylene Oxide)

அறுவை சிகிச்சை கருவிகளை தூய்மைப்படுத்த பயன்படுத்தப்படும் இரசாயனம் தான் இந்த எத்திலீன் ஆக்சைடு. இது, ஷாம்பூ, குளியல் பொருள்கள், போன்றவற்றில் கலப்பு செய்யப்படுகிறது. சர்வதேச நச்சியல் திட்ட அமைப்பு (National Toxicology Program - NTP) இது, மார்பக முலைப் பகுதிகளில் கட்டி அல்லது புற்றுநோய் உருவாக காரணியாய் இருக்கின்றது என்று அடையாளம் கண்டுள்ளது.

1,3 - பியூற்றாதையீன் (1,3- butadiene)

1,3 - பியூற்றாதையீன் (1,3- butadiene)

ஷேவிங் கிரீம், சன் ஸ்க்ரீன் லோஷன் போன்றவற்றில் இந்த 1,3 - பியூற்றாதையீன் என்ற இரசாயனம் கலக்கப்படுகிறது. இது சுவாசம் மூலமாக உடலினுள் உட்புகுவதனால் மார்பக முலைக்காம்பு பகுதிகளில் கட்டிகள் உருவாக காரணமாக இருக்கின்றது.

பாலிசைக்ளிக் அரோமேடிக் ஹைட்ரோகார்பன்கள் (Polycyclic Aromatic Hydrocarbons - PAHs)

பாலிசைக்ளிக் அரோமேடிக் ஹைட்ரோகார்பன்கள் (Polycyclic Aromatic Hydrocarbons - PAHs)

இயற்கையாக இந்த பாலிசைக்ளிக் அரோமேடிக் ஹைட்ரோகார்பன், நிலக்கரி, கச்சா எண்ணெய் மற்றும் பெட்ரோலியப் பொருட்களில் இருந்து கிடைக்கின்றன. சில ஷாம்பூகளில் இந்த இரசயானம் கலக்கப்படுகிறது. இதனால், மார்பக புற்று நோய் ஏற்பட வாய்ப்பிருக்கிறது.

லேட் (Lead)

லேட் (Lead)

இந்த இரசாயனம் 650க்கும் மேற்பட்ட அழகு சாதன பொருட்களில் பயன்படுத்தப்படுகிறது. நைல் பாலிஷ், லிப்ஸ்டிக், சன் ஸ்க்ரீன் லோஷன், பற்களை வெண்மையாக்க உதவும் டூத் பேஸ்ட், போன்று பல பொருட்களில் இது கலப்பு செய்யப்படுகிறது. இது ஆண்களில் ஆண்மையை குறைக்கிறது மற்றும் பெண்கள் பருவமடைவதைத் பாதிக்கிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Chemicals in Cosmetics That Causes Bad Effects For Your Health

Do you about the chemicals in cosmetics that causes bad effects for your health? read here.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter