For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மார்பக புற்றுநோய் ஏற்படாமல் இருக்க மற்றும் எதிர்த்து போராட உதவும் பழக்கங்கள்!!!

|

மார்பக புற்றுநோய், தற்போதைய நிலையில் பெண்களை குறிவைத்து தாக்கும் நோய்களில் உலக அளவில் முதன்மை பங்கு வகிக்கிறது. தன் விரலால் தனது கண்களை குத்திக் கொள்வதை போல தான், பெண்கள் உபயோகிக்கும் அழகு சாதனப் பொருட்களே, அவர்களுக்கு மார்பகப் புற்றுநோயை பரிசாய் அளிக்கிறது.

மார்பகப் புற்றுநோயுடன் போராடிய பிரபலங்கள்!!

இதில் இருந்து எப்படி தப்பிப்பது? ஆரோக்கியமான உணவு மற்றும் உடற்பயிற்சிகளை தாண்டி நீங்கள் எளிதான சில பழக்கங்களை பின்பற்றினாலே மார்பக புற்றுநோய் ஏற்படாமல் தவிர்க்கலாம். அதற்கு நீங்கள் முதன்முதலில் தவிர்க்க வேண்டியது, அழகு சாதனப் பொருட்களை பயன்படுத்துவது மற்றும் இன்ஸ்டன்ட் உணவுகள்.

கருச்சிதைவு ஏற்பட்டால் மார்பக புற்றுநோய் வருமா?

இனி, மார்பக புற்றுநோய் ஏற்படாமல் இருக்க மற்றும் எதிர்த்துப் போராட உதவும் பழக்கங்கள் பற்றி விரிவாகக் காணலாம்....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
இடை உடல்பயிற்சிகள்

இடை உடல்பயிற்சிகள்

வல்லுனர்கள், மார்பக புற்றுநோய்க்கும் வயிற்றுப் பகுதி கொழுப்பிற்கும் தொடர்பு இருக்கிறது என்று கூறுகின்றனர். வயிற்றுப் பகுதிக் கொழுப்பு உடல்நிலைக்கு மிகவும் ஆபத்தானது என்றும் மார்பக புற்றுநோய் வல்லுனர்கள் கூறிகின்றனர். எனவே, இடைப் பகுதிகளுக்கு வேலை தரவேண்டும். குனிந்து, நிமிர்ந்து வேலை அல்லது உடற்பயிற்சி செய்வது நல்லது.

குழந்தைகள்

குழந்தைகள்

25 வயதுக்குள் குழந்தைப் பெற்றுக்கொள்ளும் பெண்களுக்கு 50% மார்பக புற்றுநோய் ஏற்படும் அபாயம் கிடையாதாம். குறைந்தது 30 வயதுக்குள் குழந்தைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று வல்லுனர்கள் கூறுகின்றனர்.

வைட்டமின் டி 3

வைட்டமின் டி 3

நமது உடலுக்கும் மிகவும் தேவையான வைட்டமின் டி3 சத்து மார்பக புற்றுநோய் உண்டாவதை தடுக்க உதவும். சூரிய ஒளியில் இருந்தே எளிதாக வைட்டமின் டி 3 கிடைக்கும் என்று கூறப்படுகிறது. எனவே, பெண்கள் வைட்டமின் டி3 உணவுகளை தினமும் சாப்பிட வேண்டியது அவசியம்.

இறைச்சிகளை தவிர்க்கவும்

இறைச்சிகளை தவிர்க்கவும்

பெண்கள் சிவப்பு இறைச்சி உணவுகளை தவிர்ப்பது அவசியம். சிவப்பு இறைச்சி உணவுகள் மற்றும் சர்க்கரை இதயப் பாதிப்புகளை மார்பகம் மற்றும் இதய பாதிப்புகளை உண்டாக்கும் தன்மை கொண்டவை.

அறுத்த, வேகவைத்த காய்கறிகள்

அறுத்த, வேகவைத்த காய்கறிகள்

அறுத்த மற்றும் வேக வைத்த காய்கறிகள், பழங்கள் சாப்பிடுவது இதயத்திற்கும் நல்லது மார்பகத்திற்கும் நல்லது.

ஷிப்ட் வேலைகள் வேண்டாம்

ஷிப்ட் வேலைகள் வேண்டாம்

ஷிப்ட் வேலைகளில் பணிபுரியும் 30% பெண்களுக்கு மார்பக புற்றுநோய் ஏற்படும் அபாயம் இருக்கிறதாம். எனவே, மாறி மாறி ஷிப்ட் வேலைகள் செய்யும் பெண்கள் அவர்களது உடல்நிலை மீது அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியம்.

பரிசோதனை

பரிசோதனை

30 வயதிற்கு மேல் வருடத்திற்கு ஒரு முறை மார்பக புற்றுநோய் பரிசோதனை செய்துக்கொள்வது அவசியம். இதனால், முன்னவே மார்பக புற்றுநோய் இருப்பதை கண்டறிந்தால், பெரிய அபாயங்கள் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Breast Cancer Fighting Habits You Should Follow

Do you know about the breast cancer fighting habnits you should follow? read here.
Story first published: Monday, May 25, 2015, 14:59 [IST]
Desktop Bottom Promotion