ஏன் தினமும் சரியான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும்?

Posted By:
Subscribe to Boldsky

ஒருவேளை இவ்வுலகு நீரின்றி அமைக்கப்பட்டிருந்தல் எப்படி இருந்திருக்கும் என்று ஓர் சிறிய யோசைனைக்காக கூட சிந்திக்க முடியாது. ஏனெனில், சிந்திக்க நாம் யாரும் இவ்வுலகில் உயிரோடு இருந்திருக்க மாட்டோம். தண்ணீர் என்பது இயற்கை, விலங்குகள், மனிதர்கள் என அனைத்திற்கும் தேவைப்படும் ஓர் முக்கிய பொருள்.

அதனால் தான் நம் முன்னோர்கள் "நீரின்றி அமையாது உலகு" என பாடி சென்றுள்ளனர். அப்படிப்பட்ட நீரை நீங்கள் தினமும் சரியான அளவு குடிக்காமல் இருந்தால் என்ன பிரச்சனை எல்லாம் வரும் என்று உங்களுக்கு தெரியுமா?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சரும சுருக்கங்கள்

சரும சுருக்கங்கள்

தினமும் சரியான அளவு நீங்கள் தண்ணீர் பருக தவறினால், உங்கள் சருமத்தில் சுருக்கங்கள் அதிகமாக வர ஆரம்பிக்கும். வயதிற்கு தாண்டிய வேகத்தில் சுருக்கங்கள் அதிகரிக்கும், இது வயதான தோற்றத்தை அளிக்கும்.

நீர்வறட்சி

நீர்வறட்சி

பசி எடுக்கவில்லை எனிலும் கூட உங்கள் மூளை பசிப்பது போன்ற சிக்னலை உங்கள் உடலுக்குள் எழுப்பும். இதற்கு காரணம் சரியான அளவு தண்ணீர் குடிக்காததால் ஏற்பட்ட நீர்வறட்சி தான். இது உங்கள் வளர்ச்சிதை மாற்றத்தை சீர்குலைக்கும்.

தசை வலிமை குறையும்

தசை வலிமை குறையும்

நீங்கள் சரியான அளவு தண்ணீர் குடிக்காமல் இருந்தால். தசையின் வலிமை குறையும். ஏனெனில் நம் உடலில் இருக்கும் தசையில் பெரும் பங்கு நீருடையது. எனவே, நீங்கள் தினமும் நீர் சரியான அளவு பருக வேண்டியது அவசியம்.

சரும வறட்சி

சரும வறட்சி

நீர் சரியான அளவு பருகாமல் இருப்பதால் சரும சுருக்கங்கள் மட்டுமின்றி, சரும வறட்சி ஏற்படவும் நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன. இதற்கு காரணம் உங்கள் உடலில் ஏற்படும் நீர்வறட்சி தான். சரியான அளவு நீர் குடிக்காமல் இருப்பதால் சரியாக வியர்வை வராது, நச்சுக்கள் உடலை விட்டு வெளியேறாது.

மூட்டு வலி

மூட்டு வலி

மூட்டு வலி சார்ந்த பிரச்சனை உள்ளவர்கள் தினமும் சரியான அளவு தண்ணீர் பருகி வருவதால் வலியை குறைக்க முடியும். ஏனெனில் உங்கள் உடம்பில் உள்ள முதுகெலும்புகள் மற்றும் குருத்தெலும்பு போன்றவற்றில் 80% சதவீதம் நீரின் பங்கு இருக்கிறது.

கண்கள்

கண்கள்

சரியான அளவு நீங்கள் தினமும் நீர் பருகாமல் இருந்தால் கண் சிவந்தல், கண்ணெரிச்சல் போன்ற பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புகள் இருக்கின்றன.

மயக்கம், சோர்வு

மயக்கம், சோர்வு

உடலில் நீர்வறட்சி ஏற்படுவதால் உடலில் உள்ள செல்கள் அனைத்தும் வலுவிழக்கும். இதனால் உடல் சோர்வு மயக்கம் ஏற்படும் வாய்ப்புகள் நிறைய இருக்கின்றன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Bad Effects Of Drinking Less Water

Do you know about the bad effects of drinking less water? read here.