வல்லாரைக் கீரையை சாப்பிடுவதனால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்!!!

Posted By:
Subscribe to Boldsky

ஞாபக சக்தியை அதிகரிக்க பெருமளவில் உதவும் கீரையாக திகழ்கிறது வல்லாரைக்கீரை. இதற்கு இணையாக உலகிலேயே வேறெதுவும் கிடையாது என்று கூறலாம். வல்லாரைக்கீரை பொதுவாக ஏரி, குளம், குட்டை, வாய்க்கால், வேலி ஓரங்கள் என்று நீர்ப்பரப்பு பரவலான இடங்களில் தான் வளரும்.

தினமும் கீரை சாப்பிட்டீங்கன்னா, இந்த நோயெல்லாம் தூரமா ஓடிடும்!

வல்லாரைக்கீரையை நீங்கள் சமையலுக்கு பயன்படுத்தும் போது, அதில் புளியை சேர்க்க வேண்டாம். ஏனெனில் புளி வல்லாரைக் கீரையின் சக்தியைக் கெடுக்கும் என்று கூறப்படுகிறது. அதேப் போல, உப்பையும் பாதி அளவு சேர்த்து சமைத்தால் போதுமானது.

துளசி சாப்பிடுவதன் மூலம் கிடைக்கும் அற்புத நன்மைகள்!!!

இனி, வல்லாரைக்கீரையை சாப்பிடுவதனால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் பற்றிப் பார்க்கலாம்....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மாரடைப்பு

மாரடைப்பு

வல்லாரைக் கீரையை சீரான முறையில் உங்கள் உணவு பழக்கத்தில் சேர்த்துக் கொள்வதனால், மாரடைப்பு ஏற்படும் வாய்ப்புகள் வெகுவாக குறையும். இது இதயத்திற்கு வலு சேர்க்கும் உணவாகும்.

குழந்தைகளுக்கு

குழந்தைகளுக்கு

வல்லாரைக் கீரையை நெய் ஊற்றி வதக்கி சிறிதளவு இஞ்சி, ஓரிரு பூண்டு விழுதுகள் சேர்த்து துவையல் போன்று செய்து குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால், குழந்தைகளுக்கு ஏற்படும் சரும நோய்கள், நரம்புக் கோளாறுகள், வயிற்றுப்போக்கு முதலியப் பிரிச்சனைகள் எல்லாம் சரியாகும்.

பற்கள் வெண்மையாக

பற்கள் வெண்மையாக

பலருக்கும் பற்களில் மஞ்சள் நிறம் படிந்திருக்கும். இதனால் வாய்விட்டு சிரிக்கக் கூட தயங்குவர். அந்த மஞ்சளைப் போக்க வல்லாரைக் கீரை உதவுகிறது. வல்லாரைக் கீரையைப் பற்களின் மீது வைத்துத் தேய்ப்பதினால் மஞ்சள் போவதோடு, பற்கள் வெண்மையாக பளிச்சிடும்.

அளவோடு உண்ணுதல்

அளவோடு உண்ணுதல்

வல்லாரையை அளவோடு குறைந்த அளவுதான் சாப்பிட வேண்டும். தினமும் வல்லாரைக் கீரையை சாப்பிட்டால் உடம்பை பிழிவதைப் போல் வலி ஏற்படும் என்று கூறப்படுகிறது. எனவே, இக்கீரையை அடிக்கடி சாப்பிடாமல் பத்து நாட்களுக்கு ஒரு முறை உட்கொள்வதே சிறந்த முறையாகும்.

ஆயுளை நீட்டிக்கும்

ஆயுளை நீட்டிக்கும்

சீரான முறையில் நீங்கள் வல்லாரைக் கீரையை சாப்பிட்டு வந்தால், உங்கள் ஆயுள் நீட்டிக்கும். ஏனெனில், வல்லாரையில் இரத்தத்தை சுத்தம் செய்யும் திறன் அதிகமாக இருக்கின்றது.

மூளை பலப்படும்

மூளை பலப்படும்

நினைவாற்றல் மட்டுமின்றி, மூளையின் செயல்திறன், வலிமை அதிகரிக்கவும் வல்லாரைக் கீரை நல்ல முறையில் உதவுகிறது.

கை, கால் வலிப்பு குணமாகும்

கை, கால் வலிப்பு குணமாகும்

கை, கால் வலிப்பு பிரச்சனை உள்ளவர்களுக்கு வல்லாரைக் கீரை ஒரு வரப்ரசாதம் என்றே கூறலாம். ஏனெனில், இது வலிப்பு பிரச்சனைகளை சரி செய்ய உதவுகிறது.

உணவு பழக்கத்தில் சேர்த்துக் கொள்வதால்

உணவு பழக்கத்தில் சேர்த்துக் கொள்வதால்

உங்களது உணவுப் பழக்கத்தில் வல்லாரைக் கீரையை சேர்த்துக் கொள்வதால், காய்ச்சல், மாதவிடாய் கோளாறு, மாலைக் கண் போன்ற பிரச்சனைகளுக்கு எளிதாக தீர்வுக் காணலாம்.

முகப்பொலிவு

முகப்பொலிவு

முகத்தில் சுருக்கம், வறட்சி உள்ளவர்கள் வல்லாரைக் கீரையை சாப்பிடலாம். ஏனெனில், வல்லாரையில் இருக்கும் சத்துகள் உங்கள் முக சருமத்திற்கு புத்துணர்ச்சி அளித்து பொலிவுற உதவும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Amazing Health Benefits Of Vallaarai Keerai

Do you Know about the amazing health benefits vallaarai keerai? read here.
Subscribe Newsletter