நடிகர் ஆர்யா கூறும் ஸ்லிம்மாவதற்கான "சூப்பர்..." இரகசியம்!!!

Posted By: John
Subscribe to Boldsky

பொதுவாக திரைப்பட நாயகர்கள் இளம் பெண்களின் கனவுக் கண்ணனாக இருப்பார்கள். ஆனால், தமிழ் திரைப்பட நடிகர் ஆர்யாவோ, திரைப்பட நடிகைகளின் கனவுக் கண்ணனாக வளம் வருகிறார். இவர், டார்லிங் என்று அழைக்காத நடிகைகளும் இல்லை. இவரை டார்லிங் என்று அழைக்காத நடிகைகளும் இல்லை என்ற பேச்சு வெட்ட வெளிச்சமாகவே அடிப்படுகிறது கோலிவுட்டில்.

தமிழ் நடிகர் நடிகைகளின் ஃபிட்னஸ் ரகசியம்!!!

சரி இனி நமது விஷயத்திற்கு வருவோம், ஆர்யா அப்படி என்ன உடல் எடை மெலிந்து, ஸ்லிம்மாக இரகசியம் வைத்திருக்கிறார்? இந்த கேள்வி பலரது மனத்திலும் எழும் வாய்ப்பு நிறையவே இருக்கிறது. ஆனால், நடிகர் ஆர்யா கூறிய ஸ்லிம்மாகும் டிப்ஸ் அவரது நெருங்கிய நண்பருக்கு. அவரும் அதைக் கடைப்பிடித்து ஸ்லிம்மாகிவிட்டார் என்பது தான் ஆச்சரியம்.

'குட்டி குஷ்பு' ஹன்சிகாவின் ஃபிட்னஸ் ரகசியம்!!!

யார் அந்த நண்பர்? ஆர்யா கூறிய ஸ்லிம் டிப்ஸ் இரகசியம் தான் என்ன??? தொடர்ந்துப் படியுங்கள்....

இதுதாங்க சூர்யாவின் ஃபிட்னஸ் ரகசியம்!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஆர்யாவிடம் அறிவுரை கேட்ட நண்பர்

ஆர்யாவிடம் அறிவுரை கேட்ட நண்பர்

பாஸ் என்கிற பாஸ்கரனில் ஆர்யாவோடு ஒன்றிணைந்து பட்டையை கிளப்பிய அதே நண்பர், நடிகர் சந்தானம் தான் ஆர்யாவிடம் ஸ்லிம்மாக அறிவுரை கேட்ட ரியல் லைப் நண்பரும் ஆவார்.

ஆர்யா கூறிய இரகசிய

ஆர்யா கூறிய இரகசிய "டீ"

சந்தானம் உடல் எடை குறைத்து ஸ்லிம்மாக டிப்ஸ் கேட்டதற்கு, என்னுடன் வா, நான் ஒரு டீ வாங்கித் தருகிறேன் அதைக் குடித்தால் உடல் எடை விரைவாக குறைந்து, ஸ்லிம் ஆகிவிடலாம் என்று கூறியிருக்கிறார் ஆர்யா.

சைக்கிள் பயணம்

சைக்கிள் பயணம்

கூறியது மட்டுமின்றி, மறுநாள் காலையே ஓர் சைக்கிள் எடுத்துக்கொண்டு சந்தானத்தின் வீட்டிற்கு சென்று, வா கிளம்பு என்று கூறி, சந்தானத்தை சைக்கிள் ஓட்ட சொல்லி, பின்னே அமர்ந்து சென்றிருக்கிறார் ஆர்யா.

மகாபலிபுரத்துக்கு பயணம்

மகாபலிபுரத்துக்கு பயணம்

மகாபலிபுரத்தில் இருக்கும் ஓர் சாலையோர கடையில் தான் விற்கப்படுகிறது அந்த ஸ்பெஷல் டீ என்று தினமும் இதே மாதிரி கூட்டி சென்று, அந்த சாலையோர கடையில் சந்தானத்திற்கு டீ வாங்கி தந்திருக்கிறார் ஆர்யா.

ஸ்பெஷல் டீ'யின் மகிமை

ஸ்பெஷல் டீ'யின் மகிமை

இப்படியே சில நாட்கள் தொடர்ந்து அந்த ஸ்பெஷல் டீயை பருகி வர, சந்தானத்தின் உடல் எடையிலும் நல்ல மாற்றம் தெரிந்ததாம்.

ஆர்யாவின் நக்கல்

ஆர்யாவின் நக்கல்

ஓர் நாள் ஆர்யாவை அழைத்து அப்படி என்ன மச்சான் அந்த டீ'யில விஷேசம் இருக்கு? என்று கேட்டிருக்கிறார் சந்தானம். அதற்கு ஆர்யா, அந்த டீ'யில இல்ல மச்சான் விசேஷம், தினமும் நீ சைக்கிள் மிதிச்சு சென்னையில இருந்து மகாபலிபுரம் வரைக்கும் போயிட்டு வரதுதான் விசேஷம் என்று நக்கலாக கூறியிருக்கிறார்.

ஆர்யாவின் ஸ்லிம் இரகசியம் இதுதானுங்கோ!!!

ஆர்யாவின் ஸ்லிம் இரகசியம் இதுதானுங்கோ!!!

இப்படி தினமும் சைக்கிள் மிதித்தால் உடம்பு தானாக ஸ்லிம்மாகி விடும், இது தான் விரைவாக உடல் எடை மெலிந்து ஸ்லிம்மாக எனது இரகசியம் என்றும் கூறியிருக்கிறார். வெளிநாட்டிற்கு சென்று சைக்கிள் போட்டியில் வெற்றிப்பெற்றதன் விளைவு தான் ஆர்யாவை இப்படி எல்லாம் பேச வைக்கிறது போல. மற்றும் ஆர்யா கூறியப்படியே தினமும் சைக்கிள் ஓட்டினால் உடல் எடையில் உண்மையாகவே நல்ல மாற்றம் காண முடியும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Actor Aryas Slim Secret Advice

Do you know about the actor Arya's slim secret advice? read here.