உட்கார்ந்த இடத்திலயே வேலைப் பார்ப்பவர்களுக்கு ஏற்படும் 15 பக்கவிளைவுகள்- ஒரு ஷாக் ரிப்போர்ட்!

By: viswa
Subscribe to Boldsky

தினசரி இன்டர்நெட் உபயோகப்படுத்துபவராக இருந்தால், கண்டிப்பாக நீங்கள் ஒரு விளம்பரத்தை பார்த்திருக்க கூடும் "உட்கார்ந்த இடத்தில் இருந்தே நிறையப் பணம் சம்பாதிப்பது எப்படி?" கண்டிப்பாக கணினிமயமான தற்போதைய உலகத்தில் உட்கார்ந்த இடத்தில் இருந்தே நிறைய பணம் சம்பாதிக்கலாம். அது மட்டும் இன்றி கூடவே நிறைய பக்கவிளைவுகள், "பக்கா" விளைவுகள் என நிறைய சிரமத்தையும் சம்பாதிக்கலாம்.

பணம் இன்று இல்லையேல் நாளை சம்பாதிப்பது எளிது, ஆனால், உடல்நலம், ஆரோக்கியம்...? ஆம், ஒரே இடத்தில் அமர்ந்து வேலைப் பார்ப்பவர்களுக்கு நிறைய உடல் சார்ந்தப் பக்கவிளைவுகள் ஏற்படுகின்றன என சமீபத்தில் ஓர் ஆராய்ச்சியில் கண்டறியப்பட்டுள்ளது. இரத்தக் கொதிப்பி, இரத்தத் கொழுப்பு, உடல் பருமன், இதய நோய்கள், நீரிழிவு நோய், முதுகெலும்பு தேய்மானம் என எண்ணில் அடங்காது நீள்கிறது இதன் பட்டியல். இது முக்கியமாக கணினியில் வேலைப் பார்ப்பவர்கள். ஐ.டி., கால் சென்ட்டர், போன்ற இடங்களில் இருக்கையில் இருந்து நகர கூட நேரம் இன்று உட்கார்ந்த இடத்திலேயே வேலைப் பார்க்கும் பல ளைஞர்கள் இந்த பிரச்சனைகளை அறியாது உழைத்துக்கொண்டிருகின்றனர். இதைப் பற்றி மேலும் விரிவாக தெரிந்துக்கொள்ள தொடர்ந்து படியுங்கள்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
 அதிகக் கொழுப்பு

அதிகக் கொழுப்பு

வருடக் கணக்கில் அங்கும், இங்கும் நகராது ஒரே இடத்தில் உட்கார்ந்து வேலைப் பார்க்கும் போது நமது உடலில் உள்ள கலோரிகள் தேங்கி அதிகக் கொழுப்புகள் உருவாகக் காரணம் ஆகிவிடுகின்றன. இவ்வாறு அதிகக் கொழுப்பு உடலில் சேரும்போது நமது உடலில் உள்ள இன்சுலின் அளவுக் குறைந்திட நேரிடும்.

உடல் பருமன்

உடல் பருமன்

புகை மற்றும் மதுப் பழக்கத்தை போல ஒரே இடத்தில் உட்கார்ந்துப் பணிப்புரிவதும் ஒரு வகையில் நம் உடல் ஆரோகியத்திற்கு அபாயகரமானதாக அமையக் கூடியதாகும். கொழுப்புச்சத்து நம் உடலில் அதிகரிக்கும் போது, உடல் பருமனும் சேர்ந்தே அதிகரிக்கிறது. உடல் பருமன் அதிகரிக்கும் போது இதய நோய்கள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது என்பதை மனதில் வைத்துக்கொள்ளுங்க.

இதய நோய்கள்

இதய நோய்கள்

ஒரே இடத்தில் உட்கார்ந்துப் பணிப்புரியும் போது, நம் உடலில் இருக்கும் கலோரிகள் கரையாது கொழுப்புச்சத்தாக மாறிவிடுகிறது. இதயத்தை சுற்றி கொழுப்புச்சத்துக் கூடும் போது, இதயம் துடிக்க சிரமப்படுகிறது. இதனால் இருதயம் சார்ந்த நோய்கள் ஏற்பட நிறைய வாய்ப்புகள் உள்ளன.

புற்றுநோய்

புற்றுநோய்

உடல் செயல்திறன் குறையும் போது, இதயம் மற்றும் புற்றுநோய் காரணமாக உயிரிழப்பவர் எண்ணிக்கை அதிகரிக்கிறது என ஓர் ஆராய்ச்சி

அறிக்கை கூறுகிறது. ஒரே இடத்தில் உட்கார்ந்து வேலைப் பார்ப்பதினால் மார்பகம் மற்றும் கருப்பை வாய் புற்று நோய் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.

 நீரிழிவு நோய்

நீரிழிவு நோய்

ஒரே இடத்தில் உட்கார்ந்து வேலைப் பார்ப்பதினால் நமது உடலில் உள்ள இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்துவதில் கடினமாகிறது. மற்றும் உடலில் கொழுப்புச்சத்து அதிகரிப்பதால் இன்சுலின் அளவில் குறைப்பாடு ஏற்படுகிறது. இதன் விளைவுகளால் நமக்கு நீரிழிவு நோய் வர அதிக வாய்ப்புகள் ஏற்படுகின்றன.

மந்தமாகும் மூளை

மந்தமாகும் மூளை

இருதயம் நன்கு துடித்து இரத்த ஓட்டத்தை சீராக்கினால் தான், மூளை மற்றும் இதர உடல் பாகங்களுக்கு புதிய இரத்தம் சென்று நமது உடல் புத்துணர்ச்சி அடையும். அண்ணல் ஒரே இடத்தில உட்கார்ந்து வேலைப் பார்க்கும் போது ஏற்படும் அதிக கொழுப்புச்சத்தின் காரணத்தால் இதயத்தின் செயல்திறன் குறைந்து ஒட்டுமொத்த உடலின் செயல்பாட்டையும் மந்தமடைய செய்கிறது. இதனால் மூளை மந்தமடையும்.

வளர்ச்சிதைமாற்ற குறைபாடு

வளர்ச்சிதைமாற்ற குறைபாடு

சமீபத்திய ஆராய்ச்சியின் முடிவில், அதிக நேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்து வேலைப் பார்க்கும் போது, நமது உடலில் பல மாற்றங்கள் ஏற்படுகின்றன. இதனால் நமது உடலில் வளர்ச்சிதை மாற்ற குறைபாடு ஏற்பட வாய்புகள் உள்ளதாய் தெரியவருகிறது.

முதுகு வலி

முதுகு வலி

பெரும்பாலானவர்களுக்கு அதிக நேரம் ஒரே இடத்தில உட்கார்ந்து வேலைப்பதினால் ஏற்படும் குறைபாடு என்னவெனில், முதுகு வலி! இதை தொடர்ந்து சிலருக்கு முதுகெலும்புத் தேய்மானமும் ஏற்படுகிறது என்பது நம் உடல்நலத்திற்கு அபாயமான விஷயமாகும்.

வளைந்து கொடுக்காத முதுகு

வளைந்து கொடுக்காத முதுகு

குனிந்து, நிமிர்ந்து வேலை செய்யாமல், ஒரே திசை நோக்கி, ஒரே இடத்தில அமர்ந்தவாறு வேலை செய்வதனால் முதுகு வளைந்து கொடுக்கும் தன்மையை இழக்கிறது.

சலிப்பு

சலிப்பு

ஒரே இடத்தில் அமர்ந்தவாறு வேலை செய்வதினால் உங்களுக்கு ஏற்படும் மன சோர்வு மற்றும் உடல் திறன் குறைவு போன்றவை உங்களை மனநிலையை சலிப்படைய செய்கிறது.

கால்களில் குறைபாடு

கால்களில் குறைபாடு

ஒரே இடத்தில் அமர்ந்து வேலைப் பார்க்கும்

போது நமது உடலில் சீரான இரத்த ஓட்டம் இருக்காது. முக்கியமாக கால் பகுதிகளுக்கு சரியான அளவில் இரத்தம் சென்றடையாது. இதனால் கால் சார்ந்த பிரச்சனைகள் ஏற்பட நிறைய வாய்பிருக்கிறது.

நரம்புப் பிரச்சனை

நரம்புப் பிரச்சனை

ஒரே நிலையில் அதிக நேரம் அமர்ந்திர்ந்து வேலைப் பார்ப்பதினால். உடலின் பல பகுதிகளில் செய்திறன் குறைகிறது. இதனால், நரம்புப் பிரச்சனை வருகிறது.

சீரற்ற இடுப்பு

சீரற்ற இடுப்பு

ஒரே இடத்தில் அமர்ந்து வேலைப் பார்ப்பதினால் உடலில் கொழுப்புச்சத்து அதிகரிப்பதால். இடுப்பு சீரற்றதாக மாறுகிறது.

 உணர்வின்மை

உணர்வின்மை

நீண்ட நேரம் ஒரே இடத்தில அமர்ந்து இருப்பதால், நமது நரம்புகள் வலுவிழக்கிறது. இதனால், உடலில் உணர்வின்மை ஏற்படுகிறது.

மன சோர்வு

மன சோர்வு

மற்ற எந்த செயல்பாடுகளும் இன்றி, ஒரே இடத்தில் உட்கார்ந்து பல மணி நேரம் வேலை செய்வதினால் உடல் சோர்வு மட்டும் இன்றி மன சோர்வும் ஏற்படுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

15 Side Effects Of Constant Sitting At Work

The side effects of constant sitting at work causes high cholesterol, diabetes, back pain etc. These health hazards occur when you are constantly sitting.
Story first published: Tuesday, February 10, 2015, 10:45 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter