Latest Updates
-
5 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான ஐஸ்கிரீம் - அப்படி இதுல என்னதான் ஸ்பெஷல் தெரியுமா? -
1 கப் பச்சரிசி இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. பசங்க கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
World Heart Day 2026: 1 சிகரெட் அடிச்சா 20 நிமிஷத்துல இதயத்துல என்ன நடக்கும்? - விளக்கும் இதய நிபுணர்! -
4 பிரெட் இருந்தா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - வீட்ல எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 11 வரை இந்த 5 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியும்! -
லாயருக்கும், அட்வகேட்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா? அப்ப ரெண்டும் ஒன்னு இல்லையா? ஷாக் ஆகாதீங்க -
அவலும், முட்டையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணி பாருங்க.. -
செப்டம்பர் 29, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு தெண்ட செலவுகள் தேடிவரப்போகுதாம் -
புதன் துலாம் ராசியில் வக்ர பெயர்ச்சியை தொடங்கப்போவதால் இந்த 3 ராசிகளின் கனவுகள் பலிக்கப்போகுதாம் -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் தொக்கு செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும்
மாதவிடாய் சுழற்சி குறித்த 9 கட்டுக் கதைகள்!!
மாதவிடாய் வந்து விட்டாலே பெண்கள் படும் அவஸ்தைகளைச் சொல்லி மாளாது. பத்து மாதம் கருவைச் சுமந்து, கஷ்டப்பட்டும் படாமலும் ஒரு குழந்தையைக் கூடப் பெற்றெடுத்து விடுவார்கள். ஆனால் மாதா மாதம் வரும் இந்தத் தொல்லையை மட்டும் அவர்களால் பொறுத்துக் கொள்ள முடியாது.
மாதவிடாய் காலங்களில் சுறுசுறுப்பாக இருப்பதற்கு என்ன சாப்பிடலாம்...?
அவர்களால் அலுவலகத்தில் எந்த வேலையும் செய்ய முடியாது. வீட்டில் கூட எந்த வேலையும் செய்ய முடியாமல், முக்கி முனகிக் கொண்டே படுத்திருப்பார்கள். அந்த அளவுக்கு மாதவிடாய் வலி பெண்களைப் பாடாகப் படுத்தி விடும். இந்த மாதவிடாய் குறித்த சில கட்டுக் கதைகளும் நிறையப் பரவியுள்ளன. அவை குறித்து பெண்கள் தெரிந்து கொள்வது மிகவும் நல்லது. அப்படிப்பட்ட 9 கட்டுக் கதைகள் குறித்த விவரங்கள் இதோ...
மாதவிடாய் சுழற்சியை சீராக்கும் உணவுகள்!!!

உடம்பு தளர்ந்து விடும்!
மாதவிடாயினால் இரத்தம் குறைவதால், பெண்களின் உடல் மிகவும் தளர்ந்து விடுவதாக சிலர் கூறுவார்கள். இது முற்றிலும் உண்மையல்ல. சுமார் 150 மி.லி. இரத்தம் மட்டுமே வெளியேறுகிறது. இரத்த சோகை உள்ள பெண்களின் கதை வேறு!

வேற்றுக் கிரகவாசியின் இரத்தம்!
நிச்சயம் இல்லை, பெண்களே! மாதவிடாயின் போது வெளியேறும் இரத்தம் சாட்சாத் உங்களுடையது தான். பாக்டீரியா தாக்குதலிலிருந்து தப்பிக்க அடிக்கடி நாப்கினை மட்டும் மறக்காமல் மாற்றி விடுங்கள்.

உடற்பயிற்சி கூடாது!
இது ஒரு கட்டுக் கதையே! பெண்கள் எப்போதும் போல் மாதவிடாயின் போதும் தாராளமாக உடற்பயிற்சி செய்யலாம்; யோகா பண்ணலாம். ஏன் கடலில் கூட நீச்சலடிக்கலாம்!

செக்ஸ் கூடாது!
இதுவும் ஒரு கட்டுக் கதைதான்! அவர்களுடைய வசதி-அசதிகளைப் பொறுத்து பெண்கள் தம் ஆண் துணையுடன் தாராளமாக உடலுறவு வைத்துக் கொள்ளலாம்.

தசைப் பிடிப்புகள்!
மாதவிடாயின் போது இடுப்பு மற்றும் அடிவயிறு ஆகிய பகுதிகளில் பயங்கரமான வலி ஏற்படும். ஆனால் அது தசைப் பிடிப்பு அல்ல. முதல் நாள் வலி ஏற்படும் போது சாக்லெட் சாப்பிட்டால் சிறிது வலி குறையும். அடுத்தடுத்த நாட்களிலும் வலி தொடர்ந்தால் மருத்துவரை நாடுவது நல்லது.

கர்ப்பம் தரிக்காது!
மாதவிடாயின் போது கர்ப்பம் தரிக்காது என்று கூறப்படுவது ஒரு கட்டுக் கதையே! இந்தச் சமயத்தில் கர்ப்பமாவதற்கான வாய்ப்புக்கள் தாராளமாக உள்ளன. கர்ப்பத்தைத் தவிர்க்க விரும்புபவர்கள், ஆணுறை அணிந்து கொள்ளலாம் அல்லது கர்ப்பத் தடை மாத்திரைகளைப் போட்டுக் கொள்ளலாம்.

தலைக்கு குளிக்கக் கூடாது!
மாதவிடாய் நேரத்தில் தலைக்குக் குளிக்கக் கூடாது என்பதற்கு ஒரு காரணமும் இல்லை. நன்றாக ஷாம்பு போட்டுக் குளிக்கலாம்; முடி வெட்டிக் கொள்ளலாம்; முடிக்கு சாயம் பூசிக் கொள்ளலாம்; மசாஜ் செய்யலாம்.

உணவுக் கட்டுப்பாடு!
இதுவும் ஒரு கட்டுக் கதையே! மாதவிடாய் சமயத்தில் பெண்கள் எப்போதும் போல் எது வேண்டுமானாலும் சாப்பிடலாம்.

சரியாக 28 நாளில்...!
ஒரு மாதவிடாய் சுழற்சியைத் தொடர்ந்து சரியாக 28வது நாளில் அடுத்த மாதவிடாய் வந்து விடும் என்று சொல்ல முடியாது. இது ஒரு சராசரிக் கணக்கு தான்! ஒவ்வொரு பெண்ணின் உடல் நலத்தைப் பொறுத்து இது மாறுபடும்.



Click it and Unblock the Notifications
