Latest Updates
-
ரவா பன் தோசையும், தக்காளி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
செப்டம்பர் 26, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கதவைத் தட்டும் நாளாக இருக்குமாம் -
அக்டோபரில் வக்ரமடையும் சுக்கிரன்: நவம்பர் வரை இந்த 3 ராசிக்கு பொற்காலமா இருக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
October 2026 Horoscope: அக்டோபர் மாதத்தில் ராஜவாழ்க்கை வாழப்போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி என்ன? -
முட்டையை ஒரே மாதிரி செய்யாம.. ஒருடைம் இப்படி செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்! -
உடுப்பி ஸ்டைல் கற்பூரவல்லி தம்பிலி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சளி, காய்ச்சல் டக்குனு காணாம போயிரும் -
October Matha Rasipalan 2026: அக்டோபரில் இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்! உங்க ராசி இதுல இருக்கா? -
இந்த 4 ராசி ஆண்கள் அழகான பெண்களை விட அறிவான பெண்களைத்தான் விரும்புவார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
2 உருளைக்கிழங்கும், வேர்க்கடலையும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸ் ட்ரை பண்ணி பாருங்க.. -
சூப்பர் எல் நினோவால் இந்தியாவில் நிகழப்போகும் 15800 உயிரிழப்புகள் - எந்தெந்த நாடுகள் ஆபத்தில் இருக்கு தெரியுமா
சுவையூட்டப்பட்ட துரித உணவுகளை தவிர்க்கும் வழிகள்!!!
சுவையூட்டப்பட்ட மதிப்பற்ற துரித உணவுகளின் நலிந்த தரத்தை எடுத்துரைக்க உணவுத்துறையில் வல்லவராக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. பல ஆரோக்கியமான உணவு வகைகளை கொடுக்கும் போதும், அந்த ஆரோக்கிய உணவுகளை விட, அனைவரது மனமும் நிச்சயமாக சுவையூட்டப்பட்ட துரித உணவுகளையே நாடும். ஆனால் அத்தகைய துரித உணவுகள் ஆரோக்கியமற்றது என்று தெரிந்தாலும், அதனை தவிர்க்க முடியாமல் பலர் தவிப்பார்கள். ஆகவே அத்தகையவர்களுக்காக சுவையூட்டப்பட்ட ஆரோக்கியமற்ற துரித உணவுகளை தவிர்க்க சில வழி முறைகளைக் கொடுத்துள்ளோம். அதை படித்து தெரிந்து கொண்டு, துரித உணவுகளை தவிர்த்து ஆரோக்கியமாக வாழுங்கள்.

காரணம் கண்டறிதல்:
சுவையூட்டப்பட்ட உணவு பழக்கத்தில் இருந்து மீண்டு வர முதற்கட்டமாக அது உடலுக்கு விளைவிக்கும் தீங்குகளை ஏற்று கொண்டு, அவற்றை தவிர்க்க ஒவ்வொருவரும் தங்களது தனிப்பட்ட காரணத்தை கண்டறிய வேண்டும். அத்தகைய காரணங்கள் என்னவாக இருக்கக்கூடும்? தாங்கள் நிலையற்ற இரத்த அழுத்தம் உள்ளவரா? அதிக கொழுப்பு சத்து கொண்டவரா ? எடை அளவு உயர்கிறதா? இதைப் போன்று தங்களுக்கான காரணத்தை கண்டுபிடித்தால் குப்பை உணவுகளை தவிர்க்கும் வைராக்கியம் தங்களுக்குள் அதிகரிக்கும்.
திட்டமிடுதல்:
மதிப்பற்ற உணவுப்பழக்கத்தை கைவிடுவதன் மூலம் அன்றாட வாழ்க்கை முறையில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்படும். இது பொருட்டு தங்களது விருப்பங்களை தாங்களே மதிப்பிட வேண்டும். மேலும் உணவு திட்டத்தை தாமே வரையறுக்க வேண்டும். அதில் ஆரோக்கியமான உணவு பதார்த்தங்களை சேர்த்துக் கொள்ள வேண்டும். வீட்டில் சமைத்த உணவுகளை சாப்பிட வேண்டும். இது பணத்தை மிச்சபடுத்த மட்டுமல்லாது, சமையல் திறன்களையும் அதிகரிக்கும்.
உடற்பயிற்சி :
உடற்பயிற்சி ஒருவரின் உணவு பழக்கத்தை உணர வழி செய்கிறது. ஆரோக்கியமான உடலா அல்லது ஆரோக்கியமற்ற உணவா என்று பார்க்கையில் ஒரு புத்திசாலி, ஆரோக்கியமான உடலையே தேர்வு செய்வார். ஆகவே பிடித்தமான உடற்பயிற்சி முறையை தேர்வு செய்து, அதை விடாமுயற்சியுடன் பின்பற்ற வேண்டும். இவ்வாறு எந்த ஒரு பயிற்சியை செய்யும் போதும் உடலில் நிணநீர் ஓட்டம் சீராகும். இது நோய்களுக்கு தேவையான மருந்தை உணவிலிருந்து எடுத்து அந்ததந்த உறுப்புகளுக்கு கொண்டு செல்லும்.
அனுபவித்து உண்ணுங்கள்:
ஆரோக்கியமான உணவு எளிதில் சமைக்க கூடியதல்ல என்ற தவறான கருத்து நிலவி வருகிறது. தாங்களும் அது போல் நினைப்பவர் என்றால், எண்ணத்தை மாற்றிக் கொள்ள வேண்டும். சரியான முறையில் சமைக்க பட்டால் ஆரோக்கியமான உணவும் கூட மதிப்பற்ற துரித உணவை காட்டிலும் அதிக சுவை கொண்டதாய் இருக்கும்.
சுயக்கட்டுப்பாடு :
துரித உணவுகளை சாப்பிடும் ஆசையைக் கட்டுப்படுத்தியதும், மாதம் ஓரிருமுறை பிரஞ்ச் ப்ரைஸ் கூட கொரிக்கலாம். இத்தகைய செயல் முழுமையாக மதிப்பற்ற உணவுகளை புறக்கணிக்க என்று அல்லாமல், அவற்றை உண்ணும் இடைவெளியை அதிகப்படுத்துவதற்கே ஆகும்.
‘யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப்(உடலிழுக்குப்) பட்டு'
என்ற குறளை சொல் அடக்கத்திற்கு மட்டும் அல்லாமல் சுவையடக்கத்திற்கும் கொண்டோமேயானால் நல்வாழ்வு பெறலாம்.
எந்த ஒரு கெட்ட பழக்கத்திற்கும் சரியான வழிகாட்டுதலும், பயிற்சியும் இருந்தால் முழுமையாக அதிலிருந்து வெளியே வந்துவிடலாம். மேலே கூறப்பட்ட குறிப்புகளை கடைபிடித்தீர்கள் என்றால் ஆரோக்கியமற்ற துரித உணவு பழக்கத்திலிருந்து பெருமளவு வெளிவந்துவிடலாம்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications
