வீட்டு வேலை செய்யுங்கப்பா...உடல் ஆரோக்கியமா இருக்குமாம்!!!

By Maha

இன்றைய காலத்தில் என்ன தான் வேலைக்கு சென்றாலும், வீட்டை சுத்தமாக வைக்க வேண்டும் என்பதற்காக வீட்டை சுத்தம் செய்ய கடைகளில் விற்கும் வாஷிங் மிசின், கிரைண்டர், வேக்கியூம் கிளீனர் போன்ற பொருட்களை வாங்கி சுத்தம் செய்கின்றனர். அவ்வாறு வீட்டை சுத்தம் செய்ய சோம்பேறித்தனப்பட்டால், உடல் வளையாமல் இருந்து, அதனால் ஆரோக்கியத்திற்கு தடை ஏற்படும். ஏனெனில் வீட்டை சுத்தம் செய்வதால், உடல் ஆரோக்கியமாக இருக்கும். அது எப்படியென்று பார்ப்போமா!!!

Cleaning Good For Health

* வீட்டை சுத்தம் செய்வதால், உடலில் இருக்கும் அதிகமான கலோரிகள் கரையும். அதுவும் நாம் செய்யும் வேலையைப் பொருத்தம். உதாரணமாக, வீட்டில் தொடர்ந்து 1 மணிநேரம் வேலை செய்தால், ஜிம்மில் அரை மணிநேரம் ஒர்க் அவுட் செய்ததற்கு சமம். அதிலும் செய்யும் வேலை "நோவாமல் நோன்பு கும்பிடுவது" போல் இருக்க கூடாது. அந்த வேலை அனைத்து நம் உடலை வளைந்து கொடுத்து செய்யுமாறு இருக்க வேண்டும். உதாரணமாக, வீட்டை பெருக்க துடைப்பத்தை பயன்படுத்துவது, பாத்திரங்களை கழுகூவது போன்றவாறு இருக்க வேண்டும். இவ்வாறு ஒரு நல்ல உடற்பயிற்சி இருக்கும் போது, எதற்கு ஜிம்மிற்கு பணத்தை செலவழிக்க வேண்டும். இதனால் வீடும் சுத்தமானது போல் இருக்கும், உடலுக்கு ஆரோக்கியமான ஒரு உடற்பயிற்சியாகவும் இருக்கும்.

* நிறைய தடவை அலர்ஜியானது மூலை முடுக்குகளில் கரையான், அந்துப்பூச்சிகள் மற்றும் பிற பூச்சிகளால் ஏற்படுகிறது. ஆகவே அவற்றை வீட்டில் இருக்கும் போது சுத்தம் செய்ய ஆரம்பிக்கலாமே. ஆனால் அப்போது செய்யும் போது முகத்திற்கு மாஸ்க் அணிந்து கொண்டு சுத்தம் செய்யுங்கள். ஆகவே வீடு சுத்தமாவதுடன், பூச்சித் தொல்லை ஏற்படாமல், உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

* மனச்சோர்வு மற்றும் மனஅழுத்தம் வீட்டை சுத்தம் செய்வதால் சரியாகும். எப்படியென்றால், வீட்டை சுத்தம் செய்யும் போது மனம் அந்த வேலையில் கவனத்தை செலுத்துவதால், மனதில் இருக்கும் கவலைகள் மற்றும் கஷ்டங்கள் பறந்துவிடும். இதனால் மனம் ஆரோக்கியத்துடன் இருக்கும். அதிலும் வெறுப்புடன் வேலையை செய்யாமல், மிகவும் ஆசைப்பட்டு செய்ய வேண்டும்.

* உடற்பயிற்சியிலேயே சிறந்த பயிற்சி என்றால் அது வீட்டை சுத்தம் செய்வது தான். இதனால் உடலில் உள்ள அனைத்து உறுப்புகளும் நன்கு செயல்படுவதோடு, கை கால்கள் நன்கு வளைந்து, தசைகள் நன்கு வலுவாகின்றன. அதிலும் கர்ப்பமாக இருக்கும் பெண்கள் வீட்டு வேலையை செய்தால், எலும்புகள் வலுபெற்று பிரசவத்தின் போது, எந்த பிரச்சனையும் இல்லாமல் இருக்கும்.

* துணியை துவைக்க வாஷிங் மிசினை பயன்படுத்தாமல், கைகளினாலேயே துவைத்தால், கைகள் வலுபெறுவதுடன், இடுப்பு எலும்புகளும் நன்கு வலுவோடு இருக்கும்.

* எதிலும் கவனம் செலுத்த முடியாமல் இருக்கும் போது, சிறிது நேரம் வீட்டு வேலையை செய்தால் கவனச்சிதறல்கள் நீங்கும். சுத்தம் செய்யும் போது வேறு எந்த நினைப்பும் இருக்காது, சுத்தம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே இருக்கும். இவ்வாறு செய்வதால், கவனச்சிதறல்கள் ஏற்படாமல் இருப்பதோடு, வீடும் சுத்தமாகும்.

நண்பர்களே! வீட்டை சுத்தம் செய்வது என்பது செலவழிக்காமல் செய்யும் ஒரு உடற்பயிற்சி. எனவே வீட்டை சுத்தம் செய்யுங்க!!! உடலை ஆரோக்கியமாக வெச்சுக்கோங்க!!!

Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.

Story first published: Sunday, September 2, 2012, 16:46 [IST]
Desktop Bottom Promotion