Latest Updates
-
குரு பகவானின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
தள்ளுவண்டி கடை புதினா கொத்தமல்லி சட்னி - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 18 ஜூன் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு ஆரோக்கியம் மோசமாகப் போகுதாம் - ஜாக்கிரதை -
ஜூன் 22-ல் புதன் கடக ராசிக்குள் நுழைவதால் சகல நன்மைகளையும் பெற்று ஜெயிக்கப்போகும் 3 ராசிகள் -
கோவக்காய் வாங்குனா இந்த ஆந்திரா ஸ்டைல் சட்னி செய்யுங்க - இட்லி, தோசை, சாதம் எல்லாத்துக்கும் சூப்பரா இருக்கும் -
100 ஆண்டுகளுக்கு முன்னரே இந்தியாவில் நிறுவப்பட்ட முதல் விமான நிலையம் எது தெரியுமா? -
செவ்வாய் ரிஷப ராசிக்கு செல்வதால் அதிர்ஷ்டத்தால் ஜெயிக்கிற குதிரையா மாறப்போகும் 4 ராசிகள் -
மீந்து போன இட்லி இருந்தா இந்த மாதிரி மசாலா சேர்த்து மசாலா இட்லி செய்யுங்க - சூப்பர் டிபனா இருக்கும் -
Telegram ஆப் இந்தியாவில் தடைசெய்யப்பட்டுள்ளதற்கு காரணம் என்ன தெரியுமா? எத்தனை நாள் தடை தெரியுமா? -
கொத்தவரங்காயை இந்த மாதிரி செட்டிநாடு ஸ்டைலில் கூட்டு செஞ்சு பாருங்க - பிடிக்காதவங்க கூட விரும்பி சாப்பிடுவாங்க
குளிர் காலத்தில் தாக்கும் முகவாதம் : எச்சரிக்கை ரிப்போர்ட்

அதிகாலையில் பனியில் வெளியில் செல்வோரின் பலரும் இந்த நோயால் பாதிக்கப்படுகின்றனர். காது வழியாக ஊடுருவும் பனி, உள்ளே சென்று முகத்துக்குச் செல்லும் ரத்த நாளங்களில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதனால் ரத்தம் தடைபட்டு முகத்தின் ஒரு பகுதி மட்டும் இழுத்துக்கொள்கிறது.
இந்நோய் குளிர் காலத்தில் மட்டும் மனிதர்களைத் தாக்கும் சீசன் நோய். நோய் எதிர்ப்பு சக்தி குறைவானர்கள் மாதவிடாய் காலங்களில் உடல் பலவீனமாகும்போது முகவாதம் ஏற்படும்.
நகர்ப்புறங்களில் பனியில் வேலைக்குச் சென்று திரும்புவோரையும், கிராமங்களில் மலையடிவாரங்களில் உள்ள மக்களையும் இது தாக்குகிறது. ஆண்களைவிட பெண்களையே இந்த நோய் அதிகம் பாதிக்கிறது. பனியில் பஸ்சிலோ ரயிலிலோ, பயணம் செய்யும்போது, பனிகாற்று ஊசிபோல் காதில் பனி ஊடுருவாத வகையில் ‘மப்ளர்' கட்டிச் செல்ல வேண்டியது அவசியம்.
நோய் எதிர்ப்புச் சக்தி குறைவாக உள்ள சிறு குழந்தைகளுக்கு கூட முகவாதம் வரும். பெண்களுக்கு மாதவிடாய் சமயத்தில் அதிக இரத்தப்போக்கு ஏற்பட்டு உடல் பலவீனமடையும் காலங்களில் முகவாதம் எளிதில் தாக்கும். பாதிக்கப்பட்ட பகுதியில் உள்ள கண்ணை மூட இயலாமல் போகும். உணவு சாப்பிடும்போதோ, திரவ ஆகாரங்கள் சாப்பிடும்போதோ, அனைத்தும் வெளியே கொட்டிவிடும். வேலைக்குச் செல்லும் பெண்கள் பலரும் காலை, மாலை நேரங்களில் தலைக்கு ‘மப்ளர்' கட்டியபடி செல்வது நல்லது என்கின்றனர் மருத்துவர்கள்.
குளிர் காலத்தில் ஆக்சிஜன் குறைவாகக் கிடைப்பதால் அதிகாலையில் முறையான உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும். சத்தான உணவுப் பொருட்களைச் சாப்பிட வேண்டும். குளிர்காலங்களில் பெண்கள் கண்டிப்பாக உடற்பயிற்சி செய்ய வேண்டும்.
கடந்த சில ஆண்டுகளை விட, இந்தாண்டு முகவாதத்தால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்று கூறும் மருத்துவர்கள் இந்த நோயை 15 நாட்களுக்குள் குணப்படுத்திவிட முடியும் என்று கூறியுள்ளனர். உடலில் பலம் குறைவதால் அங்கத்தில் ஏற்படும் ஒரு குறைபாடு தான் இது. எனவே சரியான முறையில் சிகிச்சை பெற்றால் பூரணமாக குணமடைந்துவிடலாம் என்று கூறியுள்ளனர்.
முகவாதம் வந்தவர்கள் குளிர்ச்சியான உணவுப்பொருட்களை தவிர்த்து விட வேண்டும். ஐஸ்கிரீம், ப்ரிட்ஜ்ஜில் வைத்த உணவுப்பொருட்களை கண்டிப்பாக சாப்பிடக்கூடாது. அதேபோல் தயிர் உள்ளிட்ட புளிப்பான உணவுப்பொருட்களை தவிர்க்கவேண்டும், அதேபோல் மஞ்சள் பூசணிக்காயை உண்ணக்கூடாது என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
முக வாதத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் கீரை போன்ற இலைக்காய்கறிகளை உட்கொள்வது ஆரோக்கியமானது. மேலும் அரிசி உணவுகளை விட கோதுமையில் செய்த உணவுப்பொருட்களை உட்கொள்ளலாம். அதேபோல் எருமைப் பாலை விட பசுவின் பாலை உட்கொள்ளலாம் என்றும் நிபுணர்கள் கூறியுள்ளனர்.
எந்த சூழ்நிலையிலும், மது, சிகரெட் போன்றவைகளை எந்த சூழ்நிலையிலும் தொடவே கூடாது. அதை கண்டிப்பாக தவிர்த்து விடவேண்டும் என்பதும் நிபுணர்களின் அறிவுரையாகும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications