Latest Updates
-
வெள்ளரிக்காய் தோசையும், கருப்பு உளுந்து சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு கேட்ட வரங்கள் கிடைக்கப்போகுதாம் -
வக்ரமாகும் சனிபகவான்: ஜூலை முதல் 138 நாட்களுக்கு இந்த 4 ராசிக்கு தொழில் வளரும், வருமானம் அதிகரிக்கும்! -
வெயில் காலத்தில் ஏன் அடிக்கடி சண்டை வருது? தம்பதிகளே, இந்த ஒரு விஷயத்தை கவனிங்க! -
திருமண சீசன்ல வெயில், மழையால் கவலையா? பட்ஜெட் வீணாகாம இருக்க இந்த 5 டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க! -
வயசானாலும் இளமையா தெரியணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்குகளை போடுங்க.. -
1 கப் உளுந்து இருந்தா, ஈவ்னிங் டைம்-ல இப்படி செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
பாபா வாங்கா கணிப்புப்படி, அடுத்த 6 மாதம் இந்த 5 ராசிக்கு ராஜவாழ்க்கை தான்.. உங்க ராசி இதுல இருக்கா? -
ஜூன் மாத வானிலை மாற்றமா? இந்த 5 வாஸ்து செடிகள் இருந்தா வீடே குளிர்ச்சியாகவும் அதிர்ஷ்டமாகவும் மாறும்! -
அடிக்குற வெயிலுக்கு மாம்பழத்தை இப்படி சர்பத் செஞ்சு குடிங்க.. குளுகுளுன்னு இருக்கும்..
பதப்படுத்தப்பட்ட உணவுகள் புற்றுநோயை உண்டாக்குமா?

உணவுகளானது கெட்டுப்போகாமல் இருக்க பதப்படுத்தப்பட்ட உணவுகளில் அதிகமாக கெமிக்கல்கள் பயன்படுத்துகின்றனர். அதிலம் முக்கியமாக நைட்ரைட் என்னும் பொருள் உணவுகளை கெட்டுப்போகாமல் நீண்ட நேரம் வைக்கிறது. மேலும் அத்தகைய உணவுகளில் கார்சினோஜென் எனப்படும் புற்றுநோயை உண்டாக்கும் பொருள் உள்ளது. அதுமட்டுமல்லாமல் அதிக உப்பும், கொழுப்பும் இருக்கிறது. அதன் காரணமாகவே பல நாடுகளில் பதப்படுத்தப்பட்ட உணவுகளுக்கு தடை விதிக்கின்றனர். ஆனால் ஒரு சில நாடுகளில் அவற்றிற்கு தடை விதிக்கவில்லை. ஆகவே உடலானது ஆரோக்கியமாக இருக்க பதப்படுத்தப்பட்ட உணவுகளை வாங்கி உண்பதை விட, சுத்தமான உணவுகளை தேர்ந்தெடுத்து உண்ண வேண்டும்.
பதப்படுத்தப்பட்ட உணவுகளால் பல வகையான புற்றுநோய்கள் வருகின்றன. அதில் அதிகமாக வரக்கூடியது கணையப் புற்றுநோய். இந்த நோய் வந்தால் கொஞ்சம் கொஞ்சமாக மனிதனைக் கொல்லும். இந்த நோய் வந்தால் ஆரம்பத்திலேயே கண்டுபிடிப்பது மிகவும் கடினம். சொல்லப்போனால் சிறிதளவு பதப்படுத்தப்பட்ட உணவுகளை உண்டாலே, அந்த நோய் வரும் அபாயம் உள்ளது. அதிலும் தற்போதைய ஆய்வில், இந்த உணவு உண்பவர்களுக்கு சிகரெட் பிடிப்பவர்களை விட அதிக அளவு கணைய புற்றுநோய் ஏற்படுகிறது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒரு சில உணவுகள் உடலில் கொழுப்புகளை சேர்த்து உடல் பருமனை அதிகரித்துவிடும் என்றும் கூறுகின்றனர்.
அதற்காக எந்த ஒரு பதப்படுத்தப்பட்ட உணவுகளையும் உண்ணக்கூடாது, அனைத்து உணவுகளும் புற்றுநோயை உண்டாக்கும் என்று சொல்லவில்லை. ஒரு சிலவற்றை உண்ணலாம், ஆனால் குறைந்த அளவே உண்ண வேண்டும். ஆகவே ஆரோக்கியமாக நீண்ட நாட்கள் வாழ வேண்டும் என்று ஆசைப்படுபவர்கள் சுத்தமான காய்கறி மற்றும் பழங்களை உண்ணலாம். மேலும் கடைகளில் உணவுப்பொட்களை வாங்கும் போது நல்ல தரமுள்ள உணவுகளை, பதப்படுத்தாத உணவுகளை வாங்க வேண்டும். பதப்படுத்தப்பட்ட உணவுகளை வாங்கி உண்ண வேண்டும் என்றால் தினமும் 50 கிராம் அளவு மட்டும் போதுமானது.
ஆரோக்கியமாக வாழ வேண்டுமென்றால் பதப்படுத்தப்பட்ட உணவுகளை தவிர்த்து, சுத்தமான உணவுகளை வாங்கி உண்ணுங்கள் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications