Latest Updates
-
இட்லி, தோசைக்கு இப்படி வெங்காய சட்னியை செய்யுங்க.. டேஸ்ட் தாறுமாறாக இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 21 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிக்காரர்களை ஆபத்துகள் துரத்தப்போகுதாம் -
1 வருடம் கழித்து சிம்ம ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்! -
சனிபகவான் ரேவதி நட்சத்திரத்திற்குள் நுழைவதால் வெற்றியின் உச்சத்தை தொடப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி என்ன? -
வரலட்சுமி விரதம் ஸ்பெஷல் - கர்நாடகா ஸ்பெஷல் கசகசா பாயாசம் ரெசிபி - செஞ்சு பாருங்க செமையா இருக்கும் -
உங்க முகத்தை வெள்ளையாக்கணுமா? அப்ப தேனை கொண்டு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
தமிழ்நாட்டின் உயிர்நாடி என்று அழைக்கப்படும் நதி எது தெரியுமா? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
இந்த ஆண்டின் கடைசி 4 மாதங்கள் இந்த 3 ராசிக்காரர்களுக்கு தொழில் ரீதியாக அதிர்ஷ்டமானதா இருக்கப்போகுது... -
கொசுக்களுக்கு ஏன் மனித இரத்தம் தேவைப்படுகிறது? கொசுக்கள் கடித்தால் ஏன் அரிப்பு ஏற்படுகிறது தெரியுமா? -
செப்டம்பர் மாதத்தில் வெற்றிகளையும், கோடிகளையும் குவிக்கும் அதிர்ஷ்டமுள்ள 3 ராசிகள் என்னென்ன தெரியுமா?
கஷ்டப்படாம உடல் எடையை குறைக்கணுமா? இந்த பானங்களை தினமும் குடிங்க.. ஒரே மாதத்தில் நல்ல மாற்றம் தெரியும்..
Weight Loss Tips In Tamil: உலகளவில் ஏராளமானோர் அவதிப்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு பொதுவான பிரச்சனை தான் உடல் பருமன் அல்லது தொப்பை. இப்படி உடல் எடை அதிகரிப்பதற்கும், தொப்பை வருவதற்கும் முக்கிய காரணமாக தற்போதைய ஆரோக்கியமற்ற மற்றும் உடலுழைப்பு இல்லாத வாழ்க்கை முறை, மோசமான உணவுப் பழக்கங்கள் போன்னறவை தான்.
உடல் எடை அதிகரிக்கத் தொடங்கினால், அதை உடனே குறைக்க முயற்சிக்க வேண்டும். இல்லாவிட்டால், அதுவே உயிரைப் பறிக்கும் பல ஆரோக்கிய பிரச்சனைகளின் அபாயத்தை அதிகரித்துவிடும். தற்போது கோடைக்காலம் ஆரம்பித்துவிட்ட நிலையில், உடல் எடையைக் குறைக்க இக்காலம் பெரிதும் உதவி புரியும்.

சொல்லப்போனால் பருவ காலங்களிலேயே கோடைக்காலம் தான் எடையைக் குறைக்க ஏற்ற சிறந்த காலம். இக்காலத்தில் வெளிப்புறம் வெதுவெதுப்பாக இருக்கும் மற்றும் லேசான உடற்பயிற்சிகளில் ஈடுபட்டு வந்தாலே விரைவில் எடையில் நல்ல மாற்றத்தைக் காணலாம். அதோடு கோடையில் ஆரோக்கியமான, கொழுப்பு குறைவான மற்றும் கலோரி குறைவான பழங்கள் மற்றும் காய்கறிகளின் சீசன் என்பதால், ஈஸியாக உடல் எடையைக் குறைக்கலாம்.
நீங்கள் பல மாதங்களாக உடல் எடையைக் குறைக்க ஏராளமான முயற்சிகளை மேற்கொண்டும் எந்த பலனும் கிடைக்கவில்லையா? அப்படியானால் தினசரி உடற்பயிற்சிகளுடன் ஒருசில பானங்களைக் குடித்து வாருங்கள். இந்த பானங்கள் கோடையில் சந்திக்கும் உடல் சூட்டைக் குறைப்பதோடு, உடலின் மெட்டபாலிசத்தை அதிகரித்து, எடையையும் குறைக்க உதவி புரியும். இப்போது வேகமாக உடல் எடையைக் குறைக்க உதவும் அந்த அற்புத பானங்கள் எவையென்பதைக் காண்போம்.
1. எலுமிச்சை இஞ்சி பானம்
தேவையான பொருட்கள்:
* தண்ணீர் - 1 லிட்டர்
* எலுமிச்சை - 2
* இஞ்சி - 1 இன்ச் (துருவியது)
* மிளகு - 1/2 டீஸ்பூன்
* தேன் - 1 டீஸ்பூன்
* எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்
எப்படி தயாரிப்பது?
* முதலில் பாத்திரத்தில் 1 லிட்டர் நீரை ஊற்றி அடுப்பில் வைத்து, அதில் 2 எலுமிச்சையின் தோசை துண்டுகளாக்கிப் போட வேண்டும். எலுமிச்சையின் தோலை துண்டுகளாக்குவதற்கு முன் அதன் சாற்றினை எடுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அந்நீரில் மிளகு, இஞ்சி சேர்த்து 5 நிமிடம் மிதமான தீயில் வைத்து கொதிக்க வைத்து இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பின்பு அதை வடிகட்டி, வெதுவெதுப்பான நிலையில் இருக்கும் போதே ஒரு டம்ளரில் ஊற்றி, அத்துடன் ஒரு டீஸ்பூன் தேன் மற்றும் 1 டீஸ்பூன் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து, காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.
2. சீரக பட்டை நீர்
தேவையான பொருட்கள்:
* தண்ணீர் - 1 லிட்டர்
* சீரகம் - 3 டீஸ்பூன்
* பட்டை - 3 இன்ச்
* தேன் - 1 டீஸ்பூன்
* எலுமிச்சை - 1 டீஸ்பூன்
தயாரிக்கும் முறை:
* முதலில் ஒரு பாத்திரத்தில் 1 லிட்டர் நீரை ஊற்றி அடுப்பில் வைக்க வேண்டும்.
* பின் அதில் சீரகம் மற்றும் பட்டை சேர்த்து குறைந்தது 5 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும்.
* பின்பு அதை இறக்கி சிறிது நேரம் குளிர வைத்து, வடிகட்டிக் கொள்ள வேண்டும்.
* பிறகு வெதுவெதுப்பான நிலையில் இருக்கும் போதே ஒரு டம்ளரில் ஊற்றி, அதில் 1 டீஸ்பூன் தேன் மற்றும் 1 டீஸ்பூன் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின் இந்த நீரை காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.
3. எலுமிச்சை மற்றும் சியா விதை நீர்
தேவையான பொருட்கள்:
* சியா விதைகள் - 2 டேபிள் ஸ்பூன்
* தண்ணீர் - 2 கப்
* தேன் - 1 டீஸ்பூன்
* எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்
தயாரிக்கும் முறை:
* முதலில் ஒரு பாத்திரத்தில் ஒரு கப் நீரை ஊற்றி, அதில் 2 டேபிள் ஸ்பூன் சியா விதைகளை சேர்த்து, 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* 10 நிமிடம் கழித்து, ஊற வைத்த சியா விதைகளுடன் 2 கப் நீரை ஊற்றி கலந்து கொள்ள வேண்டும்.
* பின் அதை ஒரு டம்ளரில் ஊற்றி, அத்துடன் 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் 1 டீஸ்பூன் தேன் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* இந்த நீரை காலையில் எழுந்ததும், காபி, டீ-க்கு பதிலாக வெறும் வயிற்றில் 1 டம்ளர் குடிக்க வேண்டும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications