Latest Updates
-
50 ஆண்டுகளாக திருமணமே நடக்காத கிராமம் முதல் இரட்டை குடியுரிமை வரை இந்தியாவின் நம்பமுடியாத வினோத கிராமங்கள் -
கடக ராசியில் குரு-செவ்வாய் கூட்டணி: 12 ராசிகளில் நீச பங்க ராஜயோகம் யாருக்கு? - ஜோதிடர் கணிப்புகள்! -
ராகி ரவா இட்லியும்.. பீர்க்கங்காய் சட்னியும்.. - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணுங்க.. -
செப்டம்பர் 21, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு வீண் செலவுகள் தேடிவருமாம் - கவனமா இருங்க -
குருபகவானின் நட்சத்திர மாற்றத்தால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நார்த் இந்தியன் ஸ்டைல் உருளைக்கிழங்கு சப்ஜி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை,சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இரண்டாவது திருமணம் நடக்க பிரகாசமான வாய்ப்பிருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா? -
தலப்பாக்கட்டி பன்னீர் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - மட்டன் பிரியாணி மாதிரியே இருக்கும் -
அரசு அதிகாரிகளின் குழந்தைகள் வெளிநாட்டில் படிக்க அனுமதிக்காத நாடு - மீறுனா அவ்வளவுதான் - எந்த நாடு தெரியுமா? -
அஸ்ஸாம் ஸ்டைல் சிக்கன் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் வித்தியாசமா அட்டகாசமா இருக்கும்
உங்களுக்கு நீர் உடம்பா? அதை ஈஸியா குறைக்க காலையில் இந்த விஷயங்களை செய்யுங்க போதும்...
Weight Loss Tips In Tamil: உலகளவில் உடல் பருமன் பெரும்பாலான மக்கள் சந்திக்கும் ஒரு பொதுவான பிரச்சனையாக உள்ளது. இப்படிப்பட்ட உடல் பருமன் ஒருவருக்கு உடலில் அதிக கொழுப்புக்கள் காரணமாவோ அல்லது அதிக நீர் தேக்கத்தின் காரணமாகவோ ஏற்படலாம். இதில் கொழுப்புக்களால் அதிகரித்த உடல் எடையைக் குறைப்பது என்பது சற்று கடினம். ஆனால் நீர் தேக்கத்தினால் அதிகரித்த உடல் எடையைக் குறைப்பது என்பது சற்று சுலபம்.
பொதுவாக நீர் உடம்பை கொண்டவர்களின் உடலில் உள்ள திசுக்களில் அதிகப்படியான நீர் சேர்ந்திருக்கும். இப்படி நீர் தேங்கும் போது, அதன் காரணமாக உடலின் குறிப்பிட்ட பகுதியில் வீக்கம் ஏற்படும் மற்றும் தற்காலிகமாக உடல் எடையை அதிகரிக்கும். ஆனால் இப்படி நீர் தேக்கத்தால் அதிகரித்த உடல் பருமனை ஒருசில எளிய காலை பழக்கவழக்கங்களின் மூலம் குறைக்க முடியும். இப்போது நீர் உடம்பைக் குறைக்க காலையில் பின்பற்ற வேண்டியவைகள் எவை என்பதைக் காண்போம்.

1. வெதுவெதுப்பான எலுமிச்சை நீர்
நீர் உடம்பைக் கொண்டவர்கள் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாற்றினை கலந்து குடிக்க வேண்டும். இப்படி குடிப்பதன் மூலம், உடல் நீரேற்றத்துடன் இருப்பதோடு, உடலில் உள்ள நச்சுக்களும் வெளியேறும். பொதுவாக எலுமிச்சை ஜூஸ் ஒரு டையூரிக் ஆகும். இது சிறுநீரகங்களில் உள்ள அதிகப்படியான சோடியம் மற்றும் நீரை வெளியேற்ற ஊக்குவிக்கிறது.
மேலும் இந்த வெதுவெதுப்பான எலுமிச்சை நீரைக் குடிப்பதன் மூலம், செரிமானம் மற்றும் மெட்டபாலிசம் மேம்படுகிறது மற்றும் சிறுநீர் உற்பத்தியை ஊக்குவிப்பதன் மூலம் உடலில் உள்ள அதிகப்படியான நீரை வெளியேற்றுகிறது. முக்கியமாக இதில் உள்ள வைட்டமின் சி நோயெதிர்ப்பு சக்தியையும், சரும ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது.
இந்த நீரை தயாரிப்பதற்கு ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் பாதி எலுமிச்சையைப் பிழிந்து கலந்து கொள்ள வேண்டும். பின் அதை சுவைக்கு சர்க்கரை எதுவும் சேர்க்காமல், வேண்டுமானால் தேனை சிறிது கலந்து கொள்ளுங்கள். ஆனால் தேன் சேர்க்காமல் குடிப்பது இன்னும் நல்லது.
2. லேசான கார்டியோ அல்லது ஸ்ட்ரெட்ச்சிங் பயிற்சி
காலையில் எழுந்ததும் உடற்பயிற்சி செய்வதன் மூலம் உடலில் உள்ள அதிகப்படியான நீர் வியர்வை வழியாக வெளியேறும் மற்றும் உடலில் இரத்த ஓட்டம் மேம்படும். அதுவும் நடைப்பயிற்சி, ஜாக்கிங், யோகா, ஸ்ட்ரெட்சிங் போன்ற பயிற்சிகள் நிணநீர் மண்டலத்தைத் தூண்டி, உடலில் உள்ள நச்சுகள் மற்றும் அதிகப்படியான திரவத்தை அகற்ற உதவுகிறது.
எனவே நீர் உடம்பைக் கொண்டவர்கள் எளிதில் உடல் பருமனைக் குறைக்க விரும்பினால், விறுவிறுப்பான நடைப்பயிற்சி, யோகா, சைக்கிள் ஓட்டுவது போன்றவற்றை 15-30 நிமிடங்கள் மேற்கொள்ள வேண்டும்.
3. காலை உணவில் உப்பைக் குறைக்கவும்
உடலில் நீர் தேங்குவதில் சோடியம் முக்கிய பங்கை வகிக்கிறது. எனவே நீங்கள் உப்பை அதிகமாக உணவில் சேர்த்து வந்தால், அது உடலில் எலக்ட்ரோலைட்டுகளின் சமநிலையை பராமரிக்க உடல் நீரை தக்க வைத்துக் கொள்ளும். இதன் மூலம் உடல் பருமனாகும். எனவே நீர் உடம்பைக் கொண்டவர்கள் உணவில் உப்பை அதிகம் சேர்ப்பதைத் தவிர்க்க வேண்டும்.
மேலும் பதப்படுத்தப்பட்ட உணவுகள், உப்பு நிறைந்த உணவுகள், ஜங்க் உணவுகள் போன்றவற்றை அறவே தவிர்க்க வேண்டும். மாறாக பழங்கள், காய்கறிகள், முட்டைகள், முழு தானியங்கள் போன்றவற்றை அதிகம் உணவில் சேர்க்க வேண்டும். ஒருவேளை உணவில் உப்பு வேண்டுமானால், அந்த சுவைக்கு மூலிகைகள் மற்றும் மசாலா பொருட்களைப் பயன்படுத்த வேண்டும்.
4. மூலிகை டீ
நீர் உடம்பைக் கொண்டவர்கள் மூலிகை டீக்களை குடித்து வருவதன் மூலம், அதில் உள்ள டையூரிக் பண்புகள் சிறுநீர் கழிப்பதை ஊக்குவித்து, நீர் எடையைக் குறைக்க உதவும். அதுவும் டீக்களில் க்ரீன் டீ, இஞ்சி டீ போன்றவற்றை குடிப்பது மிகவும் நல்லது. இந்த வகை டீக்களை குடித்து வருவதன் மூலம், செரிமானம் மேம்படும். உடல் வீக்கம் குறையும். எனவே நீர் உடம்பைக் கொண்டவர்கள் காலையில் ஒரு கப் மூலிகை டீயை சர்க்கரை சேர்க்காமல் குடிக்க வேண்டும்.
5. மக்னீசியம் மற்றும் பொட்டாசியம் நிறைந்த உணவுகளைத் தவிர்க்கவும்
மக்னீசியம் மற்றும் பொட்டாசியம் போன்றவை உடலில் திரவங்களை சமநிலைப்படுத்தவும், நீர் தேக்கத்தைக் குறைக்கவும் உதவும் அத்தியாவசியமான சத்துக்கள் ஆகும். இதில் மக்னீசியம் நீரேற்ற அளவைக் குறைக்க உதவுகிறது. பொட்டாசியம் உடலில் உள்ள அதிகப்படியான நீரை வெளியிட உடலை ஊக்குவித்து, சோடியத்தின் விளைவுகளை எதிர்க்கிறது.
எனவே பொட்டாசியம் நிறைந்த வாழைப்பழம், வெண்ணெய், கீரை, தயிர் போன்றவற்றை அதிகம் உட்கொள்ள வேண்டும். மேலும் மக்னீசியம் நிறைந்த டார்க் சாக்லேட், பாதாம், கீரை வகைகள் போன்றவற்றை உட்கொள்ள வேண்டும். தேவைப்பட்டால் மருத்துவரின் ஆலோசனையுடன் மக்னீசியம் சப்ளிமெண்ட்டுகளை எடுக்கலாம்.
மேலே கொடுக்கப்பட்டுள்ள விஷயங்களை ஒருவர் தவறாமல் மேற்கொண்டு வந்தால், நீர் உடம்பை எளிதில் குறைக்கலாம். இவ்வளவு விஷயங்களை மேற்கொண்டும் உடலில் நீர் தொடர்ந்து தேங்கினால், உடனே மருத்துவரை அணுகி, உடலை பரிசோதனை செய்து பாருங்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.
உடலில் உள்ள திசுக்களில் அதிகப்படியான நீர் தேங்கி உடல் பருமனடைந்து இருந்தால், அந்நபருக்கு இருப்பது நீர் உடம்பாகும். ஒருவருக்கு இருப்பது நீர் உடம்பு என்பதை, மணிக்கட்டு மற்றும் கணுக்காலைக் கொண்டே அறிந்து கொள்ளலாம்.
உப்பு மற்றும் சர்க்கரை நிறைந்த உணவுகளை அதிகம் உட்கொண்டாலோ, நீண்ட நேரம் உட்கார்ந்து வேலை செய்தாலோ மற்றும் குறிப்பிட்ட மருந்துகளை எடுத்தாலோ, அந்நபருக்கு நீர் உடம்பு வருவதற்கான வாய்ப்புள்ளது.
1. காலையில் எழுந்ததும் வெதுவெதுப்பான எலுமிச்சை நீரை குடிக்க வேண்டும்.
2. லேசான கார்டியோ அல்லது ஸ்ட்ரெட்ச்சிங் பயிற்சியை செய்ய வேண்டும்.
3. உப்பைக் குறைக்க வேண்டும்.
4. மூலிகை டீ குடிக்க வேண்டும்.
5. மக்னீசியம் மற்றும் பொட்டாசியம் நிறைந்த உணவுகளை அதிகம் உட்கொள்ள வேண்டும்.



Click it and Unblock the Notifications
