Latest Updates
-
சிம்ம ராசியில் குரு-செவ்வாய் சேர்க்கை: இந்த 3 ராசிக்கு ஜாக்பாட் அடிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
புதன் வக்ர நிலையில் நட்சத்திரத்தை மாற்றுவதால் கோடிகளைக் குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
தீபாவளிக்கு மொறுமொறுன்னு பேக்கரி ஸ்டைல் தட்டை செய்யுங்க.. 1 மாதம் வரை வெச்சு சாப்பிடலாம்.. -
உத்தர பிரதேச ஸ்டைல் தஹ்ரி புலாவ் ரெசிபி - ஒருதடவை செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
இந்த தேதிகளில் பிறந்தவர்கள் 35 வயசுக்கு மேல் ராஜவாழ்க்கை வாழ்வார்களாம்.. உங்க பிறந்த தேதி என்ன? -
இந்த 4 ராசிக்காரங்க ரொம்ப டாக்ஸிக்கான காதலன், காதலியாக இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
Dhanteras 2026: தந்தேராஸ் என்றால் என்ன? அந்நாளில் என்னென்ன பொருட்களை வாங்குவது நல்லது? -
இந்த தீபாவளிக்கு வேர்க்கடலையை வைச்சு இந்த வித்தியாசமான இனிப்பை செஞ்சு பாருங்க - அட்டகாசமா இருக்கும் -
138 நாட்கள் கழித்து வக்ர நிவர்த்தி அடையும் சனிபகவான்: இந்த 3 ராசிக்காரர்களின் பண கஷ்டம் முடிவுக்கு வரப்போகுது! -
வாஸ்து படி குபேரரின் அருளை பெற்று கோடீஸ்வரராக உங்க வீட்டில் இந்த எளிய மாற்றங்களை செய்யுங்க போதும்
தூங்கும் போது கூட உங்க உடல் எடையை குறைக்கணுமா? இந்த தண்ணீரை தினமும் குடிங்க - எடை டக்குனு குறையும்...!
Weight Loss Tips: எடைக்குறைப்பு என்பது மிகவும் கடினமான மற்றும் சவாலான ஒரு பணியாகும். ஏனெனில் உடலில் அதிகரித்த கொழுப்பைக் கரைப்பது என்பது அவ்வளவு எளிதான காரியமல்ல. எடையைக் குறைக்க முதலில் செய்ய வேண்டியது உணவுக்கட்டுப்பாடுதான். ஏனெனில் ஆரோக்கியமற்ற உணவுகளால் அதிகரித்த உடையை சில ஆரோக்கிய உணவுகள் மூலம் குறைக்கலாம்.

அந்த வகையில் புளி தண்ணீர் கண்டிப்பாக முயற்சிக்க வேண்டிய பானமாகும். இம்லி என்றும் அழைக்கப்படும் புளி பரவலாக பல உணவுகளில் பயன்படுத்தப்படுகிறது, அதன் புளிப்பான சுவைக்காக அனைவராலும் விரும்பப்படுகிறது. இது பல்வேறு சமையல் குறிப்புகளில் ஒரு பொதுவான மூலப்பொருளாக இருக்கிறது. ஆனால் நீங்கள் எப்போதாவது புளி தண்ணீரை குடிக்க முயற்சித்து உள்ளீர்களா?
இந்த கசப்பான மற்றும் புத்துணர்ச்சியூட்டும் பானம் பல ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது, குறிப்பாக கூடுதல் எடையை குறைக்க விரும்புவோருக்கு பல நன்மைகளை அளிக்கும். இந்த பதிவில் தினமும் புளி தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன என்று தெரிந்து கொள்ளலாம்.
வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கும்
புளியில் ஹைட்ராக்ஸிசிட்ரிக் அமிலம் (HCA) உள்ளது, இது வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தக்கூடியது. அதிக வளர்சிதை மாற்ற விகிதம் உங்கள் உடல் ஓய்வில் இருக்கும்போது கூட கலோரிகளை மிகவும் எரிக்கக் கூடியது. புளி தண்ணீரைத் தொடர்ந்து குடிப்பதன் மூலம், உங்கள் வளர்சிதை மாற்றத்தை அதிகரித்து எடைக்குறைப்பை அதிகமாக்கலாம்.
செரிமானத்தை ஊக்குவிக்கும்
சீரான எடை இழப்புக்கு சரியான செரிமானம் அவசியம், மேலும் புளி தண்ணீர் அதற்கு உதவும். புளியில் உணவு நார்ச்சத்து உள்ளது, இது சீரான செரிமானத்திற்கு உதவுகிறது, மலச்சிக்கலை தடுக்கிறது மற்றும் வழக்கமான குடல் இயக்கத்தை ஊக்குவிக்கிறது. ஆரோக்கியமான செரிமான அமைப்பு உங்கள் உடல் ஊட்டச்சத்துக்களை திறம்பட உறிஞ்சி, கழிவுகளை நீக்கி, ஆரோக்கியமான எடையை பராமரிக்க உதவுகிறது.
பசியைக் கட்டுப்படுத்துகிறது
புளி தண்ணீரின் முக்கிய நன்மைகளில் ஒன்று பசியை அடக்கும் திறன் ஆகும். புளியில் HCA இருப்பது மூளையில் செரோடோனின் அளவை அதிகரிப்பதன் மூலம் பசியைக் குறைக்க உதவுகிறது. இதன் அர்த்தம் என்னவெனில் நீங்கள் ஆரோக்கியமற்ற தின்பண்டங்களை சாப்பிடுவது மற்றும் அதிகப்படியான உணவை உட்கொள்வது குறையும், இது ஒரு சீரான உணவுப்பழக்கத்தை கடைபிடிக்க உதவுகிறது.
நச்சுக்களை நீக்குகிறது
புளி தண்ணீர் ஒரு இயற்கை நச்சு நீக்கியாகும், இது உங்கள் உடலில் இருந்து நச்சுகளை வெளியேற்றுகிறது. இந்த நச்சு நீக்கம் செயல்முறை கல்லீரல் செயல்பாட்டை மேம்படுத்துவதன் மூலம் எடை இழப்புக்கு உதவும் மற்றும் உங்கள் உடல் சிறப்பாக செயல்படுவதை உறுதி செய்கிறது.
குறைவான கலோரிகள் மற்றும் அதிக ஊட்டச்சத்துக்கள்
புளி தண்ணீர் குறைந்த கலோரி பானமாகும், இது எந்த எடை இழப்பு டயட்டில் ஒரு சிறந்த சேர்க்கையாக இருக்கும். கலோரிகள் குறைவாக இருந்தாலும், இது வைட்டமின் சி, பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் போன்ற அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் தாதுக்களால் நிரம்பியுள்ளது. இந்த ஊட்டச்சத்துக்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு இன்றியமையாதவை மற்றும் உங்கள் உடளுக்கு ஊட்டமளித்து உற்சாகமாக வைத்திருப்பதன் மூலம் உங்கள் எடை இழப்பை துரிதமாக்கும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.
இந்த கட்டுரையின் போட்டோ, முன்னுரை, Tags மற்றும் தலைப்பு மாற்றப்பட்டுள்ளது.



Click it and Unblock the Notifications

