Latest Updates
-
டிராபிக் போலீஸ் ஏன் வெள்ளை நிற யூனிஃபார்ம் அணிகிறார்கள் - இதுக்கு பின்னாடி உள்ள காரணம் என்ன தெரியுமா? -
கல்யாண வீட்டு சுரைக்காய் கூட்டு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. பிடிக்காதவங்க கூட சாப்பிடுவாங்க.. -
40 கிலோ எடை குறைத்த நடிகை குஷ்பு - எப்படி? இந்த ஒரு ஜப்பானிய பழக்கம் தான் காரணமாம்! -
சிங்கப்பூர் வெஜ் ப்ரைடு ரைஸ் ரெசிபி - இந்த மாதிரி ரைஸ் செஞ்சா இனிமே ஹோட்டல் பக்கமே போகமாட்டிங்க -
அக்டோபரில் உருவாகியுள்ள லட்சுமி நாராயண ராஜயோகம்: இந்த 5 ராசிக்கு பணம் சம்பாதிக்க புதிய வழி கிடைக்கும்! -
சிப்ஸ் பாக்கெட்களில் ஏன் சிப்ஸை விட காற்று அதிகமாக உள்ளது தெரியுமா? அது சாதாரண காற்றே இல்லையாம் -
15 நிமிடத்தில் இட்லி குருமா எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
அக்டோபர் 06 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு ஏமாற்றங்கள் நிறைந்த நாளாக இருக்குமாம் -
அக்டோபர் இறுதியில் நடக்கும் குரு பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு கூரைய பிச்சுகிட்டு பணம் கொட்டப்போகுது! -
30 ஆண்டுக்கு பின் சனி மீனத்தில் நேரடி இயக்கத்தை தொடங்குவதால் இந்த 3 ராசியின் பலமும்,பணமும் அதிகரிக்கப்போகுதாம்
கஷ்டப்படாம தொப்பையை குறைக்கணுமா? அப்ப இந்த பொருட்களை நைட் நீரில் ஊற வெச்சு காலையில குடிங்க...
Weight Loss Tips In Tamil: இன்றைய காலத்தில் நோய்களின் எண்ணிக்கை அதிகமாவதற்கு முக்கிய காரணமே உடல் பருமன் தான். உலகளவில் உடல் பருமனால் அவதிப்படுவோர் ஏராளம். இப்படி அதிகரித்த உடல் எடையைக் குறைக்க ஒவ்வொருவருமே பல வழிகளை முயற்சித்து வருகிறார்கள்.
இணையத்திலும் உடல் எடையைக் குறைப்பதற்கு ஏராளமான வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன. ஆனால் அவை அனைத்துமே அனைவருக்கும் நல்ல பலனைத் தருவதில்லை. சிலருக்கு சில வழிகள் நல்ல பலனையும், சிலருக்கு எவ்வித மாற்றத்தையும் ஏற்படுத்தாமல் இருக்கலாம்.

ஒருவர் நல்ல நீரேற்றத்துடன் இருந்தால், அது ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் சிறப்பாக வைத்துக் கொள்வதோடு, உடல் எடையைக் குறைக்கவும் உதவுகிறது. உடலின் நீரேற்றத்தை மேம்படுத்துவதற்கான சிறந்த வழி இரவில் ஊற வைத்த நீரைக் குடிப்பது.
இப்படி இரவு தூங்கும் முன் மருத்துவ குணம் வாய்ந்த ஒருசில பொருட்களை நீரில் ஊற வைத்து, மறுநாக் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடித்து வந்தால், உடலில் உள்ள அதிகப்படியான எடை குறைவதோடு, உடலும் புத்துணர்ச்சியுடன் இருக்கும். இப்போது உடல் எடையைக் குறைக்க எந்த மாதிரியான பொருட்களை நீரில் ஊற வைத்து குடிக்க வேண்டும் என்பதைக் காண்போம்.
1. எலுமிச்சை நீர்
எலுமிச்சை நீர் உடல் எடையைக் குறைக்க பெரிதும் உதவி புரியும். ஏனெனில் இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் வைட்டமின் சி அதிகளவில் உள்ளன. இவை உடலில் நச்சுநீக்கும் செயல்முறையையும் ஊக்குவிக்கவும், மெட்டபாலிசத்தை மேம்படுத்தி எடையைக் குறைக்கவும் உதவுகின்றன. அதற்கு இரவு தூங்கும் முன் ஒரு கண்ணாடி ஜாரில் நீரை நிரப்பி, அதில் எலுமிச்சை துண்டுகளை சேர்த்து, இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் குடிக்க வேண்டும்.
2. வெள்ளரிக்காய் நீர்
அதிகரிக்க உடல் எடையைக் குறைக்க உதவும் மற்றொரு நீர் தான் வெள்ளரிக்காய் நீர். வெள்ளரிக்காயில் நார்ச்சத்து அதிகமாகவும், கலோரிகள் குறைவாகவும் இருப்பதுடன், உடலை நீரேற்றத்துடன் வைத்துக் கொள்ள தேவையான நீர்ச்சத்து அதிகமாகவும் உள்ளன. இந்த வெள்ளரிக்காய் நீரை குடிக்கும் போது உடலில் உள்ள நச்சுக்களை நீங்குவதோடு, வயிற்றை நீண்ட நேரம் நிரம்பியிருக்க செய்து, கலோரிகளை எரிக்க உதவுகின்றன. இந்த நீரை தயாரிப்பதற்கு ஒரு கண்ணாடி ஜாரில் நீரை நிரப்பி, அதில் வெள்ளரிக்காய் துண்டுகளை சேர்த்து இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் குடிக்க வேண்டும்.
3. இஞ்சி நீர்
இஞ்சியில் சக்தி வாய்ந்த அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இந்த இஞ்சி நீரைக் குடிக்கும் போது அது உடல் எடை இழப்பிற்கு உதவுகிறது. இந்த நீரை தயாரிக்க இரவு தூங்கும் முன் நீரில் இஞ்சியைத் துருவிப் போட்டு, இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் குடிக்க வேண்டும். இந்நீரைக் குடிக்கும் போது உடலின் மெட்டபாலிசம் அதிகரிப்பதோடு, கொழுப்புக்கள் எரிக்கப்படுகிறது மற்றும் பசியைக் குறைக்கவும் உதவுகிறது.
4. புதினா நீர்
புதினா நீர் உடலை புத்துணர்ச்சியுடன் வைத்துக் கொள்ள உதவுவதோடு, செரிமானத்தை மேம்படுத்தி, உடல் எடையைக் குறைக்க உதவுகிறது. இந்த நீரைத் தயாரிப்பதற்கு இரவு தூங்கும் முன் ஒரு கையளவு புதினாவை ஒரு கண்ணாடி ஜாரில் போட்டு, நீரை நிரப்பி இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும். பின் மறுநாள் காலையில் குடிக்க வேண்டும்.
5. ஆப்பிள் பட்டை நீர்
ஆப்பிள் பட்டை நீர் நல்ல சுவையான நீர் மட்டுமின்றி, உடல் எடையை வேகமாக குறைக்க உதவும் அற்புதமான பானமும் கூட. இந்த நீரில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், நார்ச்சத்து போன்றவை அதிகம் உள்ளன. இவை உடலின் மெட்டபாலிசத்தை மேம்படுத்தவும், இரத்த சர்க்கரைஅளவை பராமரிக்கவும் உதவுகிறது. இந்த நீரை தயாரிப்பதற்கு ஒரு கண்ணாடி ஜாரில் நீரை நிரப்பி, அதில் பட்டை துண்டுகள் மற்றும் சிறிது ஆப்பிள் துண்டுகளை சேர்த்து இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும். பின் அதை மறுநாள் காலையில் குடிக்க வேண்டும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications
