Latest Updates
-
முட்டைக்கோஸை இப்படி ஒருடைம் கூட்டு செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட விரும்பி சாப்பிடுவாங்க... -
International Yoga Day 2026: தினமும் யோகா செய்வதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
புதன் பெயர்ச்சியால் ஜூன் 22 முதல் இந்த 4 ராசிக்காரங்க பண மழையில் நனையப்போறாங்க.. உங்க ராசியும் இதுல இருக்கா? -
1 கப் ஜவ்வரிசி இருந்தா.. காலையில் 5 நிமிடத்தில் இந்த டிபனை செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 20 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு பெரிய நஷ்டம் ஏற்பட வாய்ப்பிருக்காம் - ஜாக்கிரதை -
ஜூன் 23-ல் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: எந்த ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், யாருக்கு மோசமாகவும் இருக்கும்? -
சனிபகவான்-புதன் உருவாக்கும் அரிய கிரக சேர்க்கையால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் இவங்கதான் -
தக்காளி சட்னி அரைக்கும் போது இந்த ஒரு பொருளை சேர்த்து அரைச்சு பாருங்க - ஆரோக்கியமாவும், சுவையாவும் இருக்கும் -
முகத்தில் உள்ள கருமையைப் போக்கணுமா? அப்ப கடலை மாவு வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
இன்டர்நெட் வசதியே இல்லாத உலகின் மிகவும் மோசமான நாடு எது தெரியுமா? இங்க தங்கத்தை விட இன்டர்நெட் காஸ்ட்லி
எடையை குறைக்கும் புதிய மருந்து - இது எப்படி வேலை செய்யும்? இந்தியாவில் இது எப்போதிருந்து கிடைக்கும்?
Weight Loss Drug Tirzepatide: உலகளவில் பெரும்பாலானோர் அவதிப்படும் ஒரு பொதுவான பிரச்சனையாக உடல் பருமன் உள்ளது. கொழுப்புக்களின் தேக்கத்தால் அதிகரிக்கும் உடல் எடையைக் குறைக்க உடற்பயிற்சிகளும், டயட்டுகளும் இருந்தாலும், அனைவராலுமே இவற்றை சரியாக பின்பற்ற முடியவில்லை.
இந்நிலையில் இந்தியாவின் உச்ச மருந்து கட்டுப்பாட்டாளரான மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பைச் சேர்ந்த நிபுணர் குழுவானது, எல்லி லில்லி என்னும் மருந்து நிறுவனத்தின் எடை இழப்பு மருந்தான டிர்ஸ்படைடை இந்தியாவில் விற்க அனுமதி அளித்துள்ளது. டிர்ஸ்படைடு (tirzepatide) என்னும் செயலில் உள்ள மூலபொருளானது மௌஞ்சாரோ (Mounjaro) மற்றும் ஜிப்பவுண்ட் (Zepbound) என்னும் இரண்டு விதமான பிராண்ட்டின் பெயரில் விற்கப்படவுள்ளது.

இவற்றில் கடந்த ஆண்டு ஜிப்பவுண்ட் என்னும் மருந்தை அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகமானது, உடல் பருமனால் அவதிப்படுபவர்களுக்கு ஊசியின் வழியாக போட அங்கீகாரத்தை வழங்கியது. எல்லி லில்லி கண்டுபிடித்த டிர்ஸ்படைடு என்னும் மருந்தானது மௌஞ்சாரோ என்னும் பெயரில் டைப்-2 சர்க்கரை நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தப்படுகிறது.
அதாவது மௌஞ்சாரோ என்னும் பிராண்டின் மருந்து சர்க்கரை நோயாளிகளுக்கும், ஜிப்பவுண்ட் என்னும் பிராண்டின் மருந்து எடை இழப்புக்கும் விற்கப்படுகிறது. ஆயினும் இந்தியாவில் இந்த டிர்ஸ்படைடு என்னும் மருந்து இறக்குமதி செய்யப்பட்டு சர்க்கரை நோய்க்காக சந்தைப்படுத்தப்படுமே தவிர, உடல் எடையைக் குறைக்க அல்ல. ஏனெனில் உடல் பருமனுக்கான மருந்து இன்னும் பரிசீலனையில் தான் உள்ளது. இருப்பினும், இதுவும் விரைவில் வெளிவருவதாக கூறப்படுகிறது.
இந்த டிர்ஸ்படைடு எப்படி உடலில் வேலை செய்கிறது?
டிர்ஸ்படைடு கணையத்தில் இருந்து இன்சுலினை வெளியிடத் தூண்டி, உணவு உண்ட பின் இரத்த சர்க்கரை அதிகரிக்காமல் தடுக்க உதவுகிறது. மேலும் இது இரத்த சர்க்கரை அளவை உயர்த்தும் குளுக்கோன் என்ற ஹார்மோனின் வெளியீட்டைக் குறைக்கிறது. குளுக்கோன் அளவு குறைவாக இருந்தால், அது கல்லீரலில் குளுக்கோஸ் உற்பத்தியைக் குறைக்க உதவும்.
அதன் பின் இது மெதுவாக இரத்தத்தில் குளுக்கோஸை வெளியிடச் செய்து, உணவு உண்ட பின் இரத்த சர்க்கரை அதிகரிப்பதைக் கட்டுப்படுத்த உதவி புரிகிறது. மேலும் இந்த டிர்ஸ்படைடு மூளையின் மையங்களில் செயல்பட்டு, பசி உணர்வு மற்றும் உணவு உட்கொள்ளும் அளவைக் கட்டுப்படுத்தி, உடல் எடை இழப்புக்கும் வழிவகுக்கிறது.
இதில் பக்க விளைவுகள் உள்ளதா?
டிர்ஸ்படைடு டைப்-2 சர்க்கரை நோயை திறம்பட கட்டுப்படுத்த உதவி புரிந்தாலும், இவற்றிலும் பக்கவிளைவுகள் உள்ளன. அதாவது சர்க்கரை நோய்க்காக எடுக்கும் மௌஞ்சாரா, டைப்-2 சர்க்கரை நோய் அல்லது டயபெடிஸ் மெல்லிடஸ் நோயாளிகளுக்கு தானே தவிர, டைப்-1 சர்க்கரை நோயாளிகள் இதை பயன்படுத்தக்கூடாது. இது தவிர இந்த மருந்தின் பொதுவான பக்கவிளைவுகளாவன குமட்டல், வயிற்றுப்போக்கு, பசியின்மை, வாந்தி, மலச்சிக்கல், அஜீரண கோளாறு, அடிவயிற்று வலி போன்றவை.
இந்த மருந்தால் சில தீவிரமான பக்கவிளைவுகளையும் சந்திக்க நேரிடலாம். அதுவும் இந்த மருந்தை மற்ற மருந்துகளுடன் சேர்த்து எடுக்கும் போது, அதன் விளைவாக கணைண அழற்சி, மிகவும் குறைவான இரத்த சர்க்கரை, தீவிரமான வயிற்று பிரச்சனைகள், பார்வையில் மாற்றம் மற்றும் பித்தப்பை பிரச்சனைகள் போன்றவறறை சந்திக்க நேரிடலாம்.
ஒருவேளை இந்த மருந்தை எடுத்து ஏதாவது பக்கவிளைவை சந்தித்தால், உடனே அம்மருந்தை எடுப்பதைத் தவிர்த்துவிட்டு, மருத்துவரை அணுக வேண்டுமென நிறுவனம் கூறுகிறது.
முன்னெச்சரிக்கைகள்
மௌஞ்சாரோவை பயன்படுத்தும் முன் ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டியவைகள் குறித்து ஒருசிலவற்றை நிறுவனம் பட்டியலிட்டுள்ளது. அவை:
* இந்த மௌஞ்சாரோவை முதன்முதலாக பயன்படுத்துபவராக இருந்தால், சுகாதார நிபுணர்கள் எப்படி பயன்படுத்த வேண்டும் என்று கூறுகிறார்களோ அப்படியே பயன்படுத்த வேண்டும்.
* குறைந்த இரத்த சர்க்கரையை சந்தித்தால், உடனே அதுக்குறித்து உங்கள் சுகாதார நிபுணரிடம் தெரிவியுங்கள்.
* பிறப்பு கட்டுப்பாட்டு மாத்திரைகளை எடுத்து வந்தால், மௌஞ்சாரோவை பயன்படுத்தும் முன் சுகாதார நிபுணரிடம் கேட்டுக் கொள்ள வேண்டும். ஏனெனில் மௌஞ்சாரோவை பயன்படுத்தும் போது பிறப்பு கட்டுப்பாட்டு மாத்திரைகள் வேலை செய்யாமல் போகக்கூடும்.
மௌஞ்சாரோ இந்தியாவில் எப்போது விற்கப்படும்?
இந்தியாவில் மௌஞ்சாரோ எப்போது விற்பனைக்கு வரும் என்ற கேள்விக்கு, தற்போது மௌஞ்சாரோ குறித்த மதிப்பாய்வு நடந்து கொண்டிருக்கிறது. இது தெளிவுபடுத்திய பிறகு 2025 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இந்தியாவில் மௌஞ்சாரோவை அறிமுகப்படுத்த வாய்ப்புள்ளதாக எல்லி லில்லியின் தலைமை நிர்வாக அதிகாரி டேவிட் ரிக்ஸ் ராய்ட்டர்ஸிடம் கூறியுள்ளார்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications