Latest Updates
-
குரு பகவான் வக்ர நிவர்த்தி அடைவதால் மார்ச் 11 முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
ஆட்டு ஈரலை இப்படி வறுவல் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட போட்டி போட்டு காலி பண்ணுவாங்க... -
பெண்களே! தொப்பை குறையணுமா? அப்ப இந்த ஃபிட்னஸ் கோச் சொல்ற 5 உடற்பயிற்சியை வீட்லயே செய்யுங்க.. -
சுக்கிர பெயர்ச்சியால் இந்த 5 ராசிக்கு சுக்கிர திசை ஆரம்பிக்குது.. இனி கையில் பணம் குவியப்போகுது.. -
சிக்கன வாங்குனா இந்த 4 பொருட்களை சேர்த்து கேரளா ஸ்டைல் சிக்கன் 65 செய்யுங்க... டேஸ்ட் பட்டாசா இருக்கும்...! -
இந்த வாரம் மட்டன் வாங்குனா.. இந்த சுக்கா கிரேவி செய்யுங்க.. எல்லாத்துக்குமே செமயா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 08 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க வாழ்க்கையில் சில அற்புதங்கள் நடக்குமாம்...! -
வார ராசிபலன் (01 March 2026-07 March 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிகளுக்கு மனஅழுத்தம் நிறைந்த வாரமாக இருக்கும்! -
மட்டன் வாங்குனா இந்த மாதிரி நெல்லூர் ஸ்டைலில் குழம்பு வைச்சு பாருங்க... தோசை, சாதத்துக்கு சூப்பரா இருக்கும்... -
திரிகிரக யோகம் கும்ப ராசியில் உருவாவதால் இந்த 3 ராசிக்காரர்களை தோல்வியும், துரதிர்ஷ்டமும் துரத்தப்போகுதாம்...!
தர்பூசணி விதைகளை தூக்கி எறிவீங்களா? இனிமேல் அத இப்படி சாப்பிடுங்க.. மாரடைப்பு, சர்க்கரை நோய் எதுவும் வராது!
Watermelon Seeds Benefits In Tamil: கோடைக்காலம் ஆரம்பித்துவிட்ட நிலையில், தர்பூசணி பழம் ஆங்காங்கு விலைக் குறைவில் விற்கப்படுவதைக் காணலாம். கோடைப்பழமான தர்பூசணியில் 92% நீர்ச்சத்துடன், வைட்டமின்களும், கனிமச்சத்துக்களும் அதிகம் நிறைந்துள்ளன.
இந்த பழத்தை கொளுத்தும் கோடையில் சாப்பிட்டால், உடலை நீரேற்றத்துடன் வைத்துக் கொள்ளலாம். இந்த பழத்தில் தான் இவ்வளவு சத்துக்கள் உள்ளது என்றால், அதன் விதைகளில் இன்னும் ஏராளமான சத்துக்கள் உள்ளன என்பது தெரியுமா?

ஆம், இதுவரை நீங்கள் தர்பூசணி பழ விதைகளை தூக்கி எறிந்து வந்தால், இனிமேல் அதை தூக்கிப் போடாமல் சேகரித்து தினசரி உணவில் சேர்த்து வாருங்கள். ஏனெனில் இதன் விதைகளில் நுண்ணூட்டச்சத்துக்களான ஜிங்க், மக்னீசியம், பொட்டாசியம் மற்றும் சிறிது கலோரிகள் உள்ளன.
இந்த விதைகளை தினமும் உட்கொண்டு வருவதன் மூலம், உடலில் ஏற்படும் பலவிதமான ஆரோக்கிய பிரச்சனைகளைத் தடுக்கலாம். இப்போது தர்பூசணி விதைகளை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்பதைக் காண்போம்.
1. நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்
வலிமையான நோயெதிர்ப்பு மண்டலத்திற்கு உடலில் ஜிங்க் சத்து போதுமான அளவில் இருக்க வேண்டும். இப்படிப்பட்ட ஜிங்க் தர்பூசணி விதைகளில் ஏராளமாக நிறைந்துள்ளன. ஜிங்க் சத்தானது நோயெதிர்ப்பு செல்களை உருவாக்கவும், செயல்படுத்தவும் உதவுகிறது. இதன் விளைவாக உடலின் நோயெதிர்ப்பு சக்தி வலுவடைகிறது.
2. ஆரோக்கியமான கொழுப்புக்கள்
ஆரோக்கியமான கொழுப்புக்கள் என்பவை மோனோஅன்சாச்சுரேட்டட் மற்றும் பாலிஅன்சாச்சுரேட்டட் கொழுப்புக்கள் ஆகும். இந்த ஆரோக்கியமான கொழுப்புக்கள் இரத்தத்தில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைக்கிறது மற்றும் மாரடைப்பு, பக்கவாதம் ஏற்படும் அபாயத்தைத் தடுக்கிறது. நல்ல கொழுப்புக்களானது ஒட்டுத்த உடல் ஆரோக்கியத்திற்கும் இன்றியமையாதவை. இப்படிப்பட்ட நல்ல கொழுப்புக்கள் தர்பூசணி விதைகளில் அதிகம் காணப்படுகின்றன.
3. இரத்த சர்க்கரை சீராகும்
தர்பூசணி விதைகளால் கிடைக்கும் மற்றொரு நன்மை என்றால், அது இன்சுலின் சகிப்புத்தன்மையை அதிகரித்து, இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது. தர்பூசணி விதைகளில் மக்னீசியம் அதிகம் உள்ளன. இவை இரத்த சர்க்கரை அளவை பாதிக்கும் கார்போஹைட்ரேட்டுகள் வளர்சிதை மாற்றமடைவதைக் கட்டுப்படுத்த உதவி புரிகிறது..
4. செரிமானம் மேம்படும்
தர்பூசணி விதைகளில் நார்ச்சத்து மற்றும் அன்சாச்சுரேட்டட் கொழுப்புக்கள் காணப்படுகின்றன. இவை செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், குடலியக்கத்தை சீராக்கவும் உதவுகின்றன. எனவே செரிமான பிரச்சனைகளைத் தவிர்க்க விரும்பினால், தர்பூசணி விதைகளை உட்கொள்ளுங்கள்.
5. முடி ஆரோக்கியம் மேம்படும்
தர்பூசணி விதைகளில் புரோட்டீன்கள், இரும்புச்சத்து, மக்னீசியம், ஜிங்க் மற்றும் காப்பர் போன்றவை ஏராளமான அளவில் காணப்படுகின்றன. இச்சத்துக்கள் அனைத்தும் தலைமுடிக்கு மிகவும் நல்லது. இந்த விதைகளை உட்கொண்டு வருவதன் மூலம், முடியின் வளர்ச்சி ஊக்குவிக்கப்படுவதோடு, தலைமுடியும் வலுவடையும். அதுவும் இந்த விதைகளில் காணப்படும் மாங்கனீசு, தலைமுடி உடைவதையும், சேதமடைவதையும் தடுக்கின்றன.
6. எலும்புகளுக்கு நல்லது
நல்ல வலிமையான மற்றும் ஆரோக்கியமான எலும்புகளுக்கு கால்சியம் மிகவும் இன்றியமையாதவை. இந்த கால்சியம் தர்பூசணி விதைகளில் அதிகம் காணப்படுகின்றன. இந்த விதைகள் எலும்புகளை வலிமையாக்குவதோடு, தசைகள் மற்றும் நரம்பு செயல்பாடுகளையும் சீராக வைத்துக் கொள்ள உதவுகிறது.
7. இதயத்திற்கு நல்லது
தர்பூசணி விதைகள் இதய ஆரோக்கியத்திற்கு பல வழிகளில் ஆதரவளிக்கின்றன. இந்த விதைகளில் இதயத்திற்கு நன்மை விளைவிக்கும் மோனோஅன்சாச்சுரேட்டட் மற்றும் பாலிஅன்சாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்கள் அதிகம் உள்ளன. ஆய்வுகளின் படி, இந்த ஆரோக்கியமான கொழுப்புக்கள் மாரடைப்பு மற்றும் பக்கவாதத்தை தடுக்க உதவுகின்றன. அதுவும் இதில் உள்ள மக்னீசியம், இதய செயல்பாட்டை பராமரிக்கவும், இரத்த அழுத்தத்தை சீராக வைத்துக் கொள்ளவும் உதவி புரிகிறது.
8. சருமத்திற்கு நல்லது
வறுத்த தர்பூசணி விதைகள் ஒரு நல்ல மற்றும் ஆரோக்கியமான ஸ்நாக்ஸாக விளங்குகின்றன. இந்த விதைகளை உண்பதன் மூலம், சருமம் நீரேற்றத்துடன் இருப்பதோடு, சருமத்தின் இளமைத்தன்மை பராமரிக்கப்படுவதோடு, முகப்பரு பிரச்சனையும் குறையும். எனவே அழகான மற்றும் ஆரோக்கியமான சருமத்தைப் பெற தர்பூசணி விதைகளை உட்கொண்டு வாருங்கள்.
9. நரம்பு மண்டலத்திற்கு நல்லது
தர்பூசணி விதைகளில் வைட்டமின் பி ஏராளமான அளவில் உள்ளன. இவை நரம்பு மண்டலம் மற்றும் மூளையின் ஆரோக்கியத்திற்கு பெரிதும் உதவியாக உள்ளன. கூடுதலாக இந்த விதைகளை உட்கொண்டு வந்தால், நினைவாற்றல் இழப்பு மற்றும் மனநல கோளாறுகளைத் தடுக்கலாம்.
10. நுரையீரலுக்கு நல்லது
தர்பூசணி விடைகளில் உள்ள அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் பண்புகள் நுரையீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், ஆஸ்துமா போன்ற பிரச்சனைகளைத் தடுக்கவும் உதவி புரிகின்றன. எனவே தர்பூசணி பழத்தில் விதைகளை எக்காரணம் கொண்டும் தூக்கி எறியாமல், அவற்றை வெயிலில் உலர்த்தி தினமும் காலையில் உட்கொண்டு வாருங்கள்.
தர்பூசணி விதைகளை எப்படி சாப்பிடுவது?
தர்பூசணி விதைகளை பச்சையாகவோ, முளைக்கட்ட வைத்தோ அல்லது வறுத்தோ சாப்பிடலாம். எந்த வடிவில் சாப்பிட்டாலும், அது மிகவும் சுவையாகவும், ஆரோக்கியமானதாகவும் இருக்கும். அதுவும் இந்த விதைகளை காலையில் வெறும் வயிற்றில் உட்கொள்வது மிகவும் நல்லது.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications











