Latest Updates
-
4 கத்திரிக்காய் இருந்தா செட்டிநாடு ஸ்டைலில் இந்த மாதிரி மிளகு குழம்பு செய்யுங்க - டேஸ்ட் அருமையா இருக்கும் -
International Day of Older Persons: பெற்றோர், முதியோருக்கான சுகாதார பராமரிப்பில் புதிய அணுகுமுறை - ஏன் அவசியம் -
குரு-செவ்வாய் கூட்டணி.. அக்டோபர் 31 வரை இந்த 3 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கும்! -
Personality Test: அக்டோபர் மாதத்தில் பிறந்தவர்களிடம் இருக்கும் நல்ல மற்றும் தீய குணங்கள் என்னென்ன தெரியுமா? -
நீரிழிவு நரம்பியல் பாதிப்பு என்றால் என்ன? அதன் ஆரம்ப கால அறிகுறிகள் என்ன? -
1 கைப்பிடி கொத்தமல்லியும், வேர்க்கடலையும் இருந்தா.. இந்த சைடு டிஷ் செய்யுங்க.. இட்லி, சப்பாத்திக்கு அள்ளும்.. -
அக்டோபர் 01 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களின் ஆரோக்கியத்தில் பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பிருக்காம் -
October Month Rasi Palan 2026: அக்டோபர் மாதம் துலாம் முதல் மீனம் வரை எப்படி இருக்கும்? ஜோதிடர் கணிப்பு! -
Mahalaya Paksha 2026: மகாளய பட்ச காலத்துல வீட்டுக்கு இந்த 5 உயிரினங்கள் வந்தா அதிர்ஷ்டமாம்.. விரட்டாதீங்க.. -
October Month Rasi Palan 2026: அக்டோபர் மாதம் மேஷம் முதல் கன்னி வரை எப்படி இருக்கும்? ஜோதிடர் கணிப்பு!
உங்க கண்ணு இந்த மாதிரி இருக்கா? அப்ப உங்களுக்கு மாரடைப்பு வரப்போகுது-ன்னு அர்த்தம்.. உஷார்..
Heart Attack Symptoms In Eyes: குளிர்காலம் வந்துவிட்டது. இதயம் தொடர்பான பிரச்சனைகளையும் அதிகம் சந்திக்க வேண்டியிருக்கும். ஏனெனில் மற்ற காலங்களை விட குளிர்காலத்தில் இதய ஆரோக்கியம் மோசமாக பாதிக்கப்படும். சொல்லப்போனால் இதய பிரச்சனைகளை இக்காலத்தில் தான் நிறைய பேர் சந்திப்பார்கள். குறிப்பாக நிறைய பேருக்கு மாரடைப்பு வருவதற்கான வாய்ப்புள்ளது.
உடலின் அனைத்து உறுப்புக்களுக்கும் இரத்தத்தை அனுப்பி தினசரி உடல் செயல்பாடுகளை சீராக வைத்திருக்கும் இதயம், குளிர்காலத்தில் வெப்பநிலை குறையும் போது, இதயத்தின் செயல்பாடு பாதிக்கப்பட்டு, அதன் விளைவாக சிலருக்கு மாரடைப்பை ஏற்படுத்தலாம். மாரடைப்பு ஏற்பட்டால் நெஞ்சு வலி, நெஞ்சு பகுதியில் அசௌகரியம் போன்ற அறிகுறிகள் தெரியும். இப்படி நெஞ்சு வலியைத் தவிர, ஒருசில அறிகுறிகள் கண்களிலும் தெரியும்.

என்ன ஆச்சரியமாக உள்ளதா? ஆம், நம் உடலுறுப்புக்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொன்றுடன் தொடர்புடையது. எனவே ஒரு பகுதியில் ஏதேனும் பிரச்சனை அல்லது ஆபத்து என்றால், அது மற்ற பகுதிகளில் அறிகுறிகளை வெளிப்படுத்தலாம். அப்படி தான் மாரடைப்பு ஏற்பட்டால், அதன் அறிகுறிகள் கண்களியும் தெரியும். இப்போது அந்த அறிகுறிகள் என்னவென்பதைக் காண்போம். உங்களுக்கும் அந்த அறிகுறிகள் தென்பட்டால், சற்றும் தாமதிக்காமல் உடனே மருத்துவரை அணுகுங்கள்.
பார்வை இழப்பு அல்லது மங்கலான பார்வை
இதயத்தில் ஏதேனும் பிரச்சனை இருந்தால், உடலின் மற்ற உறுப்புகளுக்கு போதுமான இரத்த ஓட்டம் கிடைக்காமல் போகும். இப்படி இரத்த ஓட்டம் போதுமான அளவு கிடைக்காமல் பாதிக்கப்படக்கூடிய ஒரு உறுப்பு தான் கண்கள். பார்வை நரம்புகளுக்கு இரத்த ஓட்டம் குறைந்தால், அதன் விளைவாக பார்வை இழப்பு அல்லது மங்கலான பார்வையை சந்திக்க நேரிடும்.
ஏனெனில் பார்வை நரம்புகள் தான் மூளைக்கு ஒரு விஷயத்தை பார்ப்பாற்கான சமிக்ஞைகளை அனுப்ப முக்கியமான காரணம். ஆனால் திடீரென்று பார்வை இழப்பு அல்லது மங்கலான பார்வை ஏற்பட்டு, அத்துடன் நெஞ்சு பகுதியில் வலியை அனுபவித்தால், சற்றும் தாமதிக்காமல் மருத்துவரை அணுகுங்கள்.
சமமற்ற அளவில் கருவிழிகள்
மாரடைப்பு வரவுள்ளது என்பதை கண்களில் வெளிப்படுத்தும் ஒரு முக்கியமான எச்சரிக்கை அறிகுறி தான் கருவிழிகள் சமமற்ற அளவில் இருப்பது. பொதுவாக கண்களில் உள்ள கருவிழி ஒரே அளவில் தான் இருக்கும். ஆனால் மாரடைப்பு அபாயம் ஏற்படும் போதும், பார்வை நரம்புகளில் ஏற்படும் சேதத்தால் ஒரு கருவிழி மற்றொன்றை விட பெரியதாக மாறலாம்.
கண்களில் மஞ்சள் புடைப்புகள்
உங்கள் கண்களின் வெண்பகுதியில் அசாதாரமாக மஞ்சள் நிற புடைப்புகள் தென்படுகிறதா? வழக்கமாக இம்மாதிரியான புடைப்புகள் மிகவும் சிறிதாக இருக்கும். இதை சாந்தெலஸ்மாஸ் என்று அழைப்பர்.
பொதுவாக இது உடலில் கொலஸ்ட்ரால் அளவுக்கு அதிகமாகும் போது, அது கண்களில் கொழுப்புக்களை படிய வைத்து, மாரடைப்பு வருவதற்கான அபாயம் இருப்பதை நமக்கு சுட்டிக் காட்டும். உங்கள் கண்களிலும் இப்படி மஞ்சள் நிறத்தில் காணப்பட்டால், மருத்துவரிடம் சென்று உடலில் உள்ள கொலஸ்ட்ரால் அளவை பரிசோதனை செய்து பாருங்கள்.
இமைகள் தொங்குவது
மாரடைப்பு வரவுள்ளது என்பதை வெளிக்காட்டும் மற்றொரு விசித்திரமான அறிகுறி தான் கண் இமைகள் தொங்குவது. பொதுவாக இது ஹார்னர்ஸ் சிண்ட்ரோம் காரணமாக ஏற்படுகிறது. இது ஒரு அரிய வகை நரம்பு பிரச்சனை. சில சமயங்களில் இது மாரடைப்பையும் தூண்டலாம். எனவே இம்மாதிரியான அறிகுறி உங்கள் கண்களின் தென்பட்டால், மருத்துவரை உடனே சந்தித்து பரிசோதனை செய்ய வேண்டும்.
சிவந்த கண்கள்
நிறைய பேர் கண்கள் சிவந்து போனால், அது போதுமான தூக்கம் இல்லாததால் தான் ஏற்படுகிறது என்று, அதை சாதாரணமாக விட்டுவிடுவார்கள். ஆனால் கண்கள் திடீரென்று சிவந்து போவது மாரடைப்பின் அசாதாரண அறிகுறிகளுள் ஒன்று.
உடலில் இரத்த அழுத்தம் அளவுக்கு அதிகமாக உயரும் போது, அது கண்களின் நிறத்தை சிவக்கச் செய்துவிடுகிறது. இரத்த அழுத்தம் கட்டுப்பாடின்றி அதிகரித்தால், அது மாரடைப்பை வரவழைத்துவிடும். எனவே உங்களுக்கு கண்கள் திடீரென்று சிவந்து போனால், அதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல், உடனே மருத்துவரை அணுகுங்கள்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications
