Latest Updates
-
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்..
இந்த 5 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உங்க கல்லீரலில் பெரிய பிரச்சனை இருக்குன்னு அர்த்தமாம்.. எச்சரிக்கும் டாக்டர்!
Liver Damage Symptoms In Tamil: நமது உடலில் கல்லீரல் மிகப்பெரிய உறுப்பு. இந்த கல்லீரல் நமது உடலில் ஏராளமான முக்கியமான வேலைகளை செய்து வருகிறது. அதில் நச்சுக்களை வடிகட்டுவது, செரிமானத்திற்கு தேவையான பித்த நீரை உற்பத்தி செய்வது, ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தை பேணுவது போன்றவை குறிப்பிடத்தக்கவை. இவ்வளவு வேலைகளை செய்யும் கல்லீரலில் பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புக்கள் அதிகம் உள்ளன.
ஏனெனில் நாம் உண்ணும் உணவுகள் மற்றும் நமது பழக்கவழக்கங்கள் நமது கல்லீரலில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. எனவே ஒருவர் மோசமான உணவுப் பழக்கம் மற்றும் கெட்ட பழக்கவழக்கங்களை கொண்டிருந்தால், அது கல்லீரல் தான் முதலில் பாதிப்பை ஏற்படுத்தும்.

மேலும் ஒருவரது கல்லீரலில் பிரச்சனை இருந்தால், அது ஒருசில அறிகுறிகளை நமக்கு வெளிக்காட்டும். ஆனால் அந்த அறிகுறிகள் தினசரி நாம் சந்திக்கும் பொதுவான ஆரோக்கிய பிரச்சனைகள் போன்று இருப்பதால், பெரும்பாலானோர் அதை சாதாரணமாக நினைத்து புறக்கணித்துவிடுகின்றனர்.
இரைப்பை குடல் நிபுணரான டாக்டர் கால்யா டெண்டுகுரி, தனது இன்ஸ்டா பக்கத்தில் ஒருவரது கல்லீரல் மோசமான நிலையில் இருந்தால் வெளிப்படும் எச்சரிக்கை அறிகுறிகளை பகிர்ந்து கொண்டுள்ளார். அந்த அறிகுறிகள் என்னவென்பதை இப்போது காண்போம்.
அதில் அவர் கூறியதாவது, "பெரும்பாலானோர் உடலின் நுட்பமான SOS சமிக்ஞைகளை புறக்கணிக்கிறார்கள். அதுவும் பெரும்பாலானோர் மன அழுத்தம் அல்லது வயது என்று நினைத்து விடுகிறார்கள். ஆனால் இப்படி வெளிக்காட்டும் அறிகுறிகளானது கல்லீரல் நச்சுக்களை நீக்கவும், ஹார்மோன்களை ஒழுங்குப்படுத்தவும், மெட்டபாலிசத்தை சமநிலையில் பராமரிக்கவும் போராடிக் கொண்டிருக்கிறது என்பதன் ஆரம்ப கால அறிகுறிகளாகும். கல்லீரலில் இருக்கும் பிரச்சனைகளை வெளிக்காட்டும் அறிகுறிகள் சாதாரணமாக இருந்தாலும், இதை புறக்கணிக்கும் போது தீவிரமான விளைவுகளை சந்திக்க நேரிடும்." என்று கூறினார்.
அதோடு பெரும்பாலானோர் புறக்கணிக்கும் கல்லீரல் பிரச்சனையின் ஆரம்ப கால எச்சரிக்கை அறிகுறிகளையும் டாக்டர் காவ்யா பகிர்ந்து கொண்டுள்ளார். அந்த அறிகுறிகளாவன:
1. சோம்பல் அல்லது வயிற்று உப்புசத்துடன் காலையில் எழுவது
"தினமும் காலையில் எழும் போது வயிற்று உப்புசத்துடன் அல்லது மிகுந்த சோம்பலுடன் எழுந்தால், முக்கியமாக குமட்டல், பசியின்மை போன்ற அறிகுறிகளையும் சந்தித்தால், கல்லீரல் மோசமான நிலையில் இருக்க வாய்ப்புள்ளது" என்று டாக்டர் காவ்யா கூறினார்.
2. கை, கால் வீக்கம்
"எந்த காரணமும் இல்லாமல் தொடர்ந்து வாந்தி, குமட்டலை சந்தித்தால், அதை சாதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டாம். அதுவும் அடிக்கடி கை, கால்களில் வீக்கத்தை சந்தித்தால், அது கல்லீரல் பிரச்சினையாக இருக்கலாம்" என்கிறார் டாக்டர் காவ்யா.
3. பொலிவிழந்த முகம்
உங்கள் முகம் வழக்கத்திற்கு மாறாக பிம்பிள், அதிக வறட்சி மற்றும் சரும நிறம் கருமையாக மாறி வந்தால், அது உங்கள் கல்லீரலில் இருந்து வரும் நேரடி சமிக்ஞையாக இருக்கலாம்" என்று டாக்டர் காவ்யா எச்சரிக்கிறார். இது கல்லீரல் அழுத்தத்துடன் தொடர்புடைய இன்சுலின் எதிர்ப்பின் பொதுவான அறிகுறியாகும். எனவே உங்கள் அக்குள், கழுத்து போன்ற பகுதிகள் கருமையாக மாறினால், அதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல் உடனே மருத்துவரை அணுகுங்கள்.
4. மிகுந்த உடல் சோர்வு
தினமும் இரவு போதுமான தூக்கத்தை மேற்கொண்டும் மிகுந்த உடல் சோர்வை சந்திக்கிறீஙர்களா? எதுவாக இருந்தாலும் உங்கள் ஆற்றல் அளவுகள் குறைவாக இருந்தால், உங்கள் கல்லீரல் மூல காரணமாக இருக்கலாம்" என்று டாக்டர் காவ்யா மேலும் கூறுகிறார்.
5. ஹர்மோன் ஏற்றத்தாழ்கள்
பிசிஓஎஸ், தைராய்டு பிரச்சனைகள், இன்சிலின் எதிர்ப்புத்தன்மை, மோசமான மெட்டபாலிசம் போன்றவை ஒருவரது கல்லீரல் மோசமான நிலையில் இருப்பதன் அறிகுறியாகும். எனவே இந்த அறிகுறிகளை சந்தித்தால், உடனே மருத்துவரை அணுகுகங்கள். என்று டாக்டர் கூறினார்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications











