Latest Updates
-
'இனிப்புகளின் ராஜா' என்று அழைக்கப்படும் ஸ்வீட் எது தெரியுமா? எதுனா சொன்ன நம்பவே மாட்டிங்க -
ஆண்கள் இறுக்கமான உள்ளாடை அணிந்தால் உண்மையில் விந்தணு பாதிக்கப்படுமா? டாக்டர் என்ன சொல்றாரு பாருங்க.. -
பச்சை மிளகாயை வைச்சு இந்த மாதிரி செட்டிநாடு ஸ்டைலில் குழம்பு செஞ்சு பாருங்க - காரசாரமா நச்சுனு இருக்கும் -
Vijayadashami 2026: விஜய தசமியில் இந்த பொருட்களை வாங்குங்க.. ஆண்டு முழுவதும் வீடு செல்வ செழிப்போடு இருக்கும்! -
ஒரு விஷப்பாம்பு இன்னொரு விஷப்பாம்பை கடித்தால் என்ன நடக்கும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
சுக்கிரன் அஸ்தமனமாவதால் இன்று முதல் அடுத்த 10 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. -
கருப்பு கவுனி தேங்காய் பால் கஞ்சியும், கறிவேப்பிலை துவையலும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
அக்டோபர் 20, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ரொம்ப கவலையான நாளாக இருக்கப்போகுதாம் -
இந்த 4 ராசிக்காரங்க ஓவர் தன்னம்பிக்கையால் எப்பவும் சொதப்பிட்டே இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஆயுத பூஜைக்கு சுண்டல் சாப்பிட்டு கேஸ் ஏறிடுச்சா? அப்ப இந்த இயற்கை பானங்களை குடிங்க..
உங்க இதயத்தை இரும்பு போல வலிமையாக்கணுமா? இந்த மாவில் ஒன்றை தினமும் உணவில் சேர்த்துக்கோங்க...!
இதயம் தொடர்பான நோய்களால் மரணிப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதயம் தொடர்பான நோய் வயதில் மூத்தவர்களுக்கு மட்டுமல்ல தற்போது இளைஞர்களும் இந்த பிரச்சினையால் பெருமளவில் பாதிக்கப்படுகின்றனர்.
ஆரோக்கியமற்ற உட்கார்ந்த வாழ்க்கை, ஆரோக்கியமற்ற இதயத்தை நோக்கி நம்மை அழைத்துச் செல்கிறது. வாழ்க்கை முறை மாற்றங்கள் மிகவும் முக்கியமானது என்றாலும், உணவுத் திட்டமிடலும் அவசியம். கார்போஹைட்ரேட்டுகள், வறுத்த உணவுகள், சிவப்பு இறைச்சி ஆகியவற்றை உட்கொள்வதைக் குறைப்பது மட்டும் போதாது. நாம் பயன்படுத்தும் மாவில் சிறிய மாற்றங்கள் கூட மாற்றத்தை ஏற்படுத்தலாம்.

இதய ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, சரியான மாவுகளைத் தேர்ந்தெடுப்பது மாற்றத்தை ஏற்படுத்தும். பொதுவாக இதய ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் சில மாவுகள் உள்ளன. இந்த மாவு வகைகள் இதய ஆரோக்கியத்தில் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த பதிவில் எந்தெந்த மாவு வகைகள் இதயத்தை பாதுகாக்கும் என்று தெரிந்து கொள்ளலாம்.
ஸ்டீல் கட் ஓட்ஸ் மாவு
பொதுவாவே ஓட்ஸ் மிகவும் ஆரோக்கியமான உணவாக கருதப்படுகிறது. இதில் கரையக்கூடிய நார்ச்சத்து அதிகம் உள்ளது, குறிப்பாக பீட்டா-குளுக்கன் அதிகமுள்ளது. இது கொழுப்பின் அளவைக் குறைக்கவும் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகிறது.
அமர்நாத் மாவு
துரதிர்ஷ்டவசமாக இந்த மாவைப் பற்றி பலருக்கும் தெரியது. ஆயுர்வேதத்தில் மிகவும் முக்கியமான அமர்நாத் பல நோய்களை குணப்படுத்த உதவுகிறது. இதன் மாவில் உள்ள பைட்டோஸ்டெரால்கள் காரணமாக கொலஸ்ட்ராலைக் குறைக்கும் பண்புகள் உள்ளன.
ஜவ்வரிசி மாவு
ஜவ்வரிசி மாவில் உள்ள பைட்டோ கெமிக்கல்கள், பீனால்கள், டானின்கள் மற்றும் தாவர ஸ்டெரால்களின் நன்மைகள் ஹைபர்கொலஸ்டிரோலீமியா விளைவைக் கொண்டிருப்பதாக அறியப்படுகிறது. இதில் உள்ள குறிப்பிடத்தக்க அளவு ஆக்ஸிஜனேற்றிகள், வைட்டமின்கள் ஈ, பி மற்றும் தாதுக்கள் இரும்பு மற்றும் மெக்னீசியம் கொலஸ்ட்ரால் அளவைக் குறைப்பதில் மதிப்புமிக்கது.
பாதாம் மாவு
பாதாம் மாவில் MUFA மற்றும் PUFA நிறைந்துள்ளது. கொழுப்பு அமிலங்களில், ஒலிக் அமிலம் இரத்தக் கொழுப்பின் அளவைக் குறைக்கிறது, லினோலிக் அமிலம் இரத்த நாளங்கள் சுருங்குவதைத் தடுக்கிறது, ஒலிக் மற்றும் லினோலிக் அமிலங்கள் இரத்த லிப்பிட் மற்றும் கிளிசரைடு மற்றும் உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்கின்றன. இதன் மூலம் இதயத்தை பாதுகாக்கிறது.
பஜ்ரா மாவு
பஜ்ரா மாவில் உள்ள லிக்னின் மற்றும் பைட்டோநியூட்ரியண்ட்கள் நல்ல ஆக்ஸிஜனேற்றிகளாக செயல்படுகின்றன, இதனால் இதயம் தொடர்பான நோய்களைத் தடுக்கிறது. இந்த காரணத்திற்காக, முத்து தினை இதய ஆரோக்கியத்திற்கு நல்லது என்று கருதப்படுகிறது.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications

