Latest Updates
-
World Brain Day 2026: மூளையில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற இந்த 4 உணவுகளை சாப்பிடுங்க - கூறும் டாக்டர்.பிள்ளை! -
ஜூலை இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! -
ராகி முருங்கைக்கீரை அடையும், வேர்க்கடலை தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
இன்றைய ராசிபலன் 22 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ராஜயோகம் கதவைத் தட்டப்போகுதாம் -
ஆகஸ்ட் 02 செவ்வாய் மிதுன ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சௌ சௌ வாங்குனா இந்த பொருளை சேர்த்து சட்னி அரைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும் -
குருபகவான் கடக ராசியில் அஸ்தமனமாவதால் துரதிர்ஷ்டத்தால் துரத்தப்படப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஈவ்னிங் டைம்ல இந்த செட்டிநாடு உருளைக்கிழங்கு அடையை செஞ்சு கொடுங்க - டேஸ்ட் தாறுமாறா இருக்கும் -
உலகில் எந்த நாட்டில் இன்டர்நெட் மிகவேகமாக உள்ளது தெரியுமா? இந்தியாவின் இன்டர்நெட் வேகம் என்ன தெரியுமா? -
ஆந்திரா பூண்டு மிளகு கார குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவையா, ஆரோக்கியமா இருக்கும்
மாம்பழம் சாப்பிடும் போது இந்த 4 தவறுகளை மட்டும் செய்யாதீங்க.. இல்ல ரொம்ப கஷ்டப்படுவீங்க...
Mangoes In Tamil: பழங்களின் ராஜா என்று செல்லமாக அழைக்கப்படும் மாம்பழம் நிறைய பேரின் விருப்பமான பழமாக இருக்கும். இந்த மாம்பழத்தின் சீசன் ஏப்ரல் முதல் ஜூலை வரை ஆகும். இந்த காலகட்டத்தில் பலவகையான மாம்பழங்களை விலைக் குறைவில் வாங்கி சுவைக்கலாம்.
நீங்கள் மாம்பழ பிரியரா? மாம்பழ சீசன் தொடங்கினாலே, தினமும் மாம்பழத்தை சுவைப்பீர்களா? மாம்பழம் வெறும் சுவையான பழம் மட்டுமின்றி, அதில் ஏராளமான ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் உள்ளன.

அதோடு இது கோடைக்காலத்தில் சந்திக்கும் பிரச்சனைகளில் இருந்து பாதுகாப்பை அளிக்கும் திறனைக் கொண்டது. பொதுவாக சீசன் பழங்கள் அந்த சீசனில் சந்திக்கும் ஆரோக்கிய பிரச்சனைகளைத் தடுக்கும் திறனைக் கொண்டிருக்கும்.
இந்தியாவில் சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை அதிகம் என்பதால், சர்க்கரை நோயாளிகள் மாம்பழத்தை சாப்பிட யோசிப்பார்கள். ஆனால் மாம்பழத்தை சர்க்கரை நோயாளிகளும் சாப்பிடலாம். ஆனால் எந்த ஒரு பழத்தை சாப்பிடுவதாக இருந்தாலும், அதை அளவாக சாப்பிட்டால், எவ்வித ஆபத்தும் இல்லை என்பதை மட்டும் எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும்.
மாம்பழ பிரியர்கள் பலர் மாம்பழத்தை சாப்பிடும் போது ஒருசில தவறுகளை செய்கிறார்கள். அந்த தவறுகளைத் தவிர்த்தால், பலவிதமான பிரச்சனைகளைத் தவிர்க்கலாம். இப்போது மாம்பழம் சாப்பிடும் போது செய்யக்கூடாத தவறுகள் என்னவென்பதைக் காண்போம்.
1. ஜூஸ் மற்றும் ஷேக்குகள்
மாம்பழங்கள் அப்படியே சாப்பிட எளிமையாகவே இருக்கும். அப்படிப்பட்ட மாம்பழங்களை அப்படியே சாப்பிடுவதைத் தவிர்த்து, பலர் மாம்பழ ஜூஸ் மற்றும் மாம்பழ மில்க் ஷேக் என்று செய்து உட்கொள்கிறார்கள். ஆனால் இப்படி மாம்பழங்களை ஜூஸ் வடிவில் எடுக்கும் போது அவை உடலுக்கு தீங்கையே விளைவிக்கும். ஏனெனில் ஜூஸ் அல்லது மில்க் ஷேக் தயாரிக்கும் போது, அதில் சர்க்கரை, பால் என்று சேர்ப்போம். இதனால் அது இரத்த சர்க்கரை அளவை சட்டென உயர்த்தி, ஆபத்தை ஏற்படுத்தும்.
2. காலையில் உட்கொள்வது
என்ன தான் மாம்பழம் ஏராளமான சத்துக்களைக் கொண்ட ஆரோக்கியமான பழமாக இருந்தாலும், அவற்றை காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும. ஏனெனில் இப்படி வெறும் வயிற்றில் உட்கொள்ளும் போது, அது பசியுணர்வை இன்னும் தான் அதிகரிக்கும். இதன் விளைவாக கண்ட உணவுகளின் மீது நாட்டம் அதிகரித்து, உடல் பருமனடையும் வாய்ப்பை ஏற்படுத்தும்.
3. தனியாக உண்பது
மாம்பழத்தை வெறுமனே உட்கொள்வதை விட, நட்ஸ்களுடன் சேர்த்து உண்பது இன்னதும் நல்லது. அதுவும் நட்ஸ்களுடன் ஸ்நாக்ஸ் வேளையில் உட்கொள்டால், அது பசியைக் கட்டுப்படுத்துவதோடு, இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்காமலும் தடுக்கும்.
4. அதிகமாக உண்பது
என்ன தான் மாம்பழம் ஆரோக்கியமான பழமாக இருந்தாலும், ஒரு நாளைக்கு 100 கிராமிற்கு மேல் உட்கொள்ளக்கூடாது. மாம்பழத்தில் கிளைசீமிக் இன்டெக்ஸ் மிதமான அளவில் இருந்தாலும், சர்க்கரை நோயாளிகள் மாம்பழத்தை சாப்பிடுவதாக இருந்தால், குறைவான அளவிலேயே உட்கொள்ள வேண்டும். அதிகமாக உட்கொண்டால், அது உடலில் கிளைசீமிக் இன்டெக்ஸை அதிகரித்து, இரத்த சர்க்கரை அளவை சட்டென உயர்த்திவிடும்.
மாம்பழத்தில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் இருப்பதால், இவை உடலுக்கு பல நன்மைகளை அளிக்கிறது. அதில் செரிமானம் சீராக நடைபெறுவதோடு, இதய நோயின் அபாயம் குறைவது மற்றும் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது போன்றவை குறிப்பிடத்தக்கவை. ஆனால் அந்த மாம்பழத்தை அதிகமாக உட்கொண்டால், அது அலர்ஜி மற்றும் வயிற்றுப்போக்கை ஏற்படுத்திவிடும். எனவே கவனமாக இருங்கள்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications