பலவீனமான நரம்புகளை வலுவாக்க வேண்டுமா? அப்ப இந்த உணவுகளை அடிக்கடி சாப்பிடுங்க போதும்...

Health Tips In Tamil: தற்போது கம்ப்யூட்டர் முன் உட்கார்ந்து வேலை செய்வோரின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது. இப்படி கம்ப்யூட்டர் முன் உட்கார்ந்து எந்நேரமும் கீபோர்ட்டை தட்டி தட்டி பலரது நரம்புகள் பலவீனமாகி, கடுமையான கை வலியை சந்திக்கிறார்கள்.

அதேப் போல் நீண்ட நேரம் நின்று கொண்டு வேலை செய்வோரை எடுத்துக் கொண்டால், அவர்களின் கால்களில் உள்ள நரம்புகள் பலவீனமாகி, கால் வலியை சந்திக்கிறார்கள். இப்படி நீங்களும் பலவீனமான நரம்புகளால் அடிக்கடி கை, கால் வலியால் அவதிப்படுகிறீர்களா? அப்படியானால் நரம்புகளை வலுவாக்க உதவும் உணவுகளை அதிகம் உணவில் சேர்த்து வாருங்கள்.

Top Eight Foods To Fight Nerve Pain In Tamil

நமது உடலில் நரம்பு மண்டலம் தான் மூளை மற்றும் முதுகெலும்பில் இருந்து நரம்புகள் வழியாக உடலின் பல பகுதிகளுக்கு செய்திகளை கொண்டு செல்கின்றன. மேலும் நரம்பு மண்டலமானது சுவாசிப்பது, செரிமானம், உடல் வெப்பநிலையை சீராக்குவது மற்றும் உடல் இயக்கத்தைக் கட்டுப்படுத்துவது போன்றவற்றில் முக்கிய பங்கை வகிக்கின்றன.

நரம்புகள் பலவீனமாக இருந்தால், அது வலியை உண்டாக்குவதோடு, தசை கட்டுப்பாட் இழக்க வைத்துவிடும். ஆகவே நரம்புகளின் ஆரோக்கியமானது மிகவும் இன்றியமையாதது. நரம்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உணவுகள் பெரிதும் உதவி புரிகின்றன. கீழே நரம்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் சில உணவுகள் பட்டியலிடப்பட்டுள்ளன. அவற்றை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தாலே நரம்புகள் ஆரோக்கியமாக இருக்கும்.

1. கீரைகள்

பசலைக்கீரை, கேல் கீரை, சிறுகீரை, அரைக்கீரை போன்ற கீரைகளில் மக்னீசியம், காப்பர், ஃபோலேட் மற்றும் கால்சியம் போன்ற சத்துக்கள் அதிகம் உள்ளன. காப்பர் நரம்பியக்கடத்திகளின் உற்பத்திக்கு அவசியமான சத்தாகும். இது முதுகுத்தண்டு சிதைவு மற்றும் நரம்புகள் செயலிழப்பதைத் தடுக்கிறது.

மக்னீசியம் ஆக்ஸிஜன், நரம்புகள் போன்றவற்றிற்கு ஆக்ஸிஜனை கொண்டு செல்ல உதவி புரிந்து, நரம்புகளை சாந்தப்படுத்துகிறது. வைட்டமின் பி, வைட்டமின் சி மற்றும் வைட்டமின் ஈ போன்றவை நரம்பியக்கடத்திகளின் செயல்பாட்டை மேம்படுத், நரம்பு மண்டலம் மற்றும் மூளை வயதாவதைக் குறைக்கிறது.

2. மீன்

மீன்களில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் அதிகம் உள்ளன. இவை நரம்புகளை பாதுகாக்க உதவுகின்றன. முக்கியமாக மீன்களில் உள்ள DHA மற்றும் EPA போன்ற ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நரம்பு செல் சவ்வுகளைப் பராமரிப்பதன் மூலம் நரம்பு மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கின்றன. எனவே பலவீனமான நரம்புகளைக் கொண்டவர்கள், அதை வலுப்படுத்த மீன்களை அடிக்கடி வாங்கி சாப்பிடுங்கள்.

3. மஞ்சள்

தினசரி சமையலில் சேர்க்கப்படும் மஞ்சள் நரம்புகளை வலுப்படுத்த பெரிதும் உதவி புரியும். இதற்கு இதில் உள்ள குர்குமின் என்ற பாலிஃபீனால் தான் காரணம். இந்த குர்குமின் ஆன்டி-ஆக்ஸிடன்ட், அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆன்டி-அமைலாய்டல் போன்றவைகளாக செயல்பட்டு, நரம்புகளின் செயல்பாட்டை மேம்படுத்தி, நினைவாற்றலை அதிகரிக்க உதவுகிறது. அதற்கு மஞ்சளை தினசரி உணவில் சேர்ப்பதோடு, மஞ்சள் பால், மஞ்சள் நீர் எனவும் குடித்து வரலாம்.

4. நட்ஸ்

பாதாம், முந்திரி, ஹாசில் நட்ஸ் மற்றும் வால்நட்ஸ் போன்ற நட்ஸ்களில் மக்னீசியம் அதிகம் உள்ளன. இந்த மக்னீசியம் நரம்பு மண்டலத்தின் ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமான சத்தாகும். மக்னீசியம் உடலில் செரடோனின் என்னும் ஹார்மோன்களை உற்பத்தி செய்து, நரம்பு மண்டலத்தை ரிலாக்ஸ் அடைய செய்கிறது மற்றும் மனநிலையை மேம்படுத்துகிறது.

இந்த மக்னீசியம் குறைபாடு ஏற்படும் போது, நரம்பு செல்கள் இடையே சமிக்ஞை பரிமாற்றத்தை ஆதரிக்கும் நரம்பியக்கடத்திகளை பாதிக்கும். ஆகவே நரம்புகள் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால் மக்னீசியம் நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும்.

5. ஆட்டு ஈரல்

உடலில் வைட்டமின் பி12 குறைபாடு ஏற்பட்டால், அது மெய்லின் உறையில் பிரச்சனையை ஏற்படுத்தி, நரம்பு மண்டலத்தின் செயல்பாட்டை பாதித்து, முதுகுத்தண்டை சிதைத்துவிடும். மெய்லின் உறை என்பது நமது நரம்பை பாதுகாக்கும் ஒரு மேல் உறை.

இதில் பிரச்சனை ஏற்படும் போது, நரம்புகளில் பிரச்சனை ஏற்படுகிறது. எனவே வைட்டமின் பி12 நிறைந்த ஆட்டு ஈரலை உட்கொண்டு வந்தால், அது நரம்பு சேதத்தை சரிசெய்ய உதவி புரிந்து, நரம்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

6. க்ரீன் டீ

க்ரீன் டீயில் உள்ள கேட்டசின்கள், அறிவாற்றல் சரிவை குறைக்க உதவும். ஆய்வுகளில் தினமும் க்ரீன் டீ குடித்து வருவது வயதான காலத்தில் மூளையில் ஏற்படும் சிதைவை தடுப்பது தெரிய வந்துள்ளது. முக்கியமாக க்ரீன் டீயில் எல்-தியானைன் என்ற அமினோ அமிலம் உள்ளது. இது நரம்பு மண்டலத்தில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அதோடு இது டோபமைன் மற்றும் செரோடோனின் அளவை அதிகரிக்க உதவுகிறது.

7. பெர்ரி பழங்கள்

ஸ்ட்ராபெர்ரி, ப்ளூபெர்ரி, ராஸ்ப்பெர்ரி, ப்ளாக்பெர்ரி போன்ற பெர்டரி பழங்களில் சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட் பண்புகளைக் கொண்ட ப்ளேவோனாய்டுகள் உள்ளன.

இந்த ப்ளேவோனாய்டுகள் அறிவாற்றல் திறனில் நேர்மறையாக தாக்கத்தை ஏற்படுத்துவதோடு, மூளை நோய் மற்றும் மூளை காயங்களை சரிசெய்ய உதவுகின்றன. நரம்பு சேதமானது எப்போது ப்ரீ ராடிக்கல்கள் செல் திசுக்களுடன் தொடர்புகொள்ளும் போது ஏற்படுகிறது. ஆனால் பெர்ரி பழங்களை உட்கொள்ளும் போது நரம்புகளின் ஆரோக்கியம் மேம்படுவதோடு, நரம்புகளும் பாதுகாப்பாக இருக்கும்.

8. டார்க் சாக்லேட்

டார்க் சாக்லேட்டில் கேட்டசின்கள், எபிகாடெசின் மற்றும் புரோசியானிடின்கள் போன்ற ஃபீனாலிக் கலவைகள் உள்ளன. இவை நரம்புகளை காயமடையாமல், வீக்கமடையாமல் நல்ல பாதுகாப்பை வழங்குகின்றன. எனவே எளிய வழியில் நரம்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்த விரும்பினால், டார்க் சாக்லேட்டை சாப்பிடுங்கள் போதும்.

Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.

Story first published: Thursday, July 20, 2023, 13:14 [IST]
Desktop Bottom Promotion