Latest Updates
-
ஐயங்கார் ஸ்டைல் பொரிச்ச ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
1 வருடம் கழித்து சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
வாடகைக்கு மனைவி கொடுக்கும் வினோத நாடு? இதற்கு எவ்வளவு கட்டணம் வாங்குறாங்க தெரியுமா? -
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க...
பிபி, சுகர்-லாம் கண்ட்ரோலா இருக்கணுமா? அப்ப இந்த பழங்களை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடுங்க..
Fruits In Empty Stomach: மனிதனின் ஆரோக்கியத்திற்கு வேண்டிய சத்துக்கள் அனைத்தும் பழங்களில் அடங்கியுள்ளன. எனவே உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த நினைப்பவர்கள் தங்களின் தினசரி உணவில் பழங்களை சேர்த்துக் கொள்ள வேண்டும்.
பழங்களை உட்கொள்வதன் மூலும் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியமும் சிறப்பாக பராமரிக்கப்படும். ஆனால் பழங்கள் குறித்த பல தவறான கருத்துக்கள் மக்களிடையே உள்ளன. அதில் ஒன்று தான் பழங்களை வெறும் வயிற்றில் உட்கொள்ளக்கூடாது என்பது.

ஆனால் உண்மையில் குறிப்பிட்ட பழங்களை வெறும் வயிற்றில் காலை உணவின் போது உட்கொண்டால், அதில் உள்ள முழு சத்துக்களையும் உடல் உறிஞ்சும் மற்றும் செரிமான மண்டலம் ஆரோக்கியமாக செயல்படும். சரி, காலை வேளையில் வெறும் வயிற்றில் எந்த மாதிரியான பழங்களை சாப்பிடுவது நல்லது என்று நீங்கள் கேட்கலாம். எனவே கீழே காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட ஏற்ற சில முக்கியமான பழங்கள் குறித்து கொடுக்கப்பட்டுள்ன.
பப்பாளி
வருடம் முழுவதும் விலைக் குறைவில் கிடைக்கக்கூடிய ஒரு பழம் தான் பப்பாளி. பப்பாளியில் பாப்பைன் மற்றும் சைமோப்பைன் போன்ற நொதிகள் உள்ளன. இந்த நொதிகள் தான் செரிமானத்தை மேம்படுத்துகின்றன மற்றும் மலச்சிக்கலைத் தடுக்கின்றன. இந்த பப்பாளியை வெறும் வயிற்றில் உட்கொள்ளும் போது, அதில் உள்ள வைட்டமின் ஏ, சி மற்றும் ஈ போன்றவை உடலால் திறம்பட உறிஞ்சப்படுகின்றன. இந்த வைட்டமின்கள் அனைத்தும் நோயெதிர்ப்பு சக்தியை மேம்படுத்துவதோடு, சருமத்தை ஆரோக்கியமாக பராமரிக்கின்றன.
தர்பூசணி
இரவு நீண்ட நேரம் எதையும் சாப்பிடாமல், காலையில் வெறும் வயிற்றில் தர்பூசணியை உட்கொள்ளும் போது, அது வறண்டு போன உடலுக்கு போதுமான நீர்ச்சத்தை வழங்கும். மேலும் தர்பூசணியில் லைகோபைன் என்னும் சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட் உள்ளது. இது இதயம் மற்றும் சருமத்திற்கு நல்ல பாதுகாப்பை வழங்குகிறது.
ப்ளூபெர்ரி
ப்ளூபெர்ரியில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் உள்ளன. குறிப்பாக அந்தோசையனின்கள் உள்ளன. இவை மூளையின் செயல்பாட்டை மேம்படுத்துகின்றன. அதுவும் இந்த ப்ளூபெர்ரியை காலையில் வெறும் வயிற்றில் உட்கொள்ளும் போது, அது ஞாபக மறதியை தடுப்பதோடு, இரத்த சர்க்கரை அளவைப் பராமரிக்கவும் உதவுகிறது.
வாழைப்பழம்
வாழைப்பழத்தை காலையில் வெறும் வயிற்றில் உட்கொள்ளும் போது, அது உடலின் ஆற்றலை மேம்படுத்துகிறது. ஏனெனில் வாழைப்பழத்தில் கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் நேச்சுரல் சர்க்கரை போன்றவை அதிகமாக உள்ளன. முக்கியமாக இதில் இதய ஆரோக்கியத்தை ஆதரிக்கும் பொட்டாசியம் அதிகளவில் உள்ளன.
அன்னாசிப்பழம்
அன்னாசிப்பழத்தை வெறும் வயிற்றில் சாப்பிடலாமா கூடாதா என்ற கேள்வி பலருக்கும் எழலாம். ஆனால் அன்னாசியை வெறும் வயிற்றில் சாப்பிடுவது மிகவும் நல்லது. ஏனெனில் இப்படி உட்கொள்ளும் போது, இந்த பழத்தில் உள்ள வைட்டமின் சி மற்றும் மாங்கனீசு போன்றவை உடலால் எளிதில் உறிஞ்சப்பட்டு, நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தும் மற்றும் எலும்புகளை வலுவாக்கும். மேலும் இந்த பழமானது வயிற்று உப்புசம் மற்றும் வயிற்றில் உள்ள அழற்சியைக் குறைக்கிறது.
ஆப்பிள்
தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் மருத்துவரிடம் செல்ல வேண்டிய அவசியம் இருக்காது என்று கூறுவார்கள். அது உண்மை தான். அதுவும் ஆப்பிளை காலையில் வெறும் வயிற்றில் உட்கொள்வது இன்னமும் நல்லது. ஆப்பிளில் பெக்டின் என்னும் ஒரு வகையான நார்ச்சத்து உள்ளது. இது செரிமானத்தை மேம்படுத்தி, பசியுணர்வைக் கட்டுப்படுத்த உதவுகிறது. அதோடு இதில் க்யூயர்சிடின் என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் உள்ளன. இது மூளையின் செயல்பாடு மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது.
கிவி
கிவி பழம் உருவத்தில் சிறியதாக இருக்கலாம். ஆனால் அந்த பழத்தை வெறும் வயிற்றில் உட்கொண்டால், அது எதிர்பாராத அளவில் நன்மைகளை வழங்கும். குறிப்பாக இந்த பழமான நோயெதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தும் மற்றும் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தும். இந்த பழத்தில் உள்ள ஆக்டினிடின் என்ற நொதி பொருள் செரிமானம் சீராக நடைபெற உதவுகிறது.
எனவே நீங்கள் பழப் பிரியராக இருந்தால், காலையில் சமைத்து சாப்பிட நேரம் இல்லாவிட்டால், மேலே கொடுக்கப்பட்டுள்ள பழங்களைக் கொண்டு சாலட் தயாரித்து, காலை உணவாக உட்கொள்ளுங்கள். இதனால் உடல் ஆரோக்கியம் மேம்படுவதோடு, பசியும் அடங்கும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications
