இந்த சூப்பை அடிக்கடி குடிங்க.. மாரடைப்பு முதல் புற்றுநோய் வரை தடுக்க முடியும்...

Vegetable Soups And Their Benefits In Tamil: உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்க வேண்டுமானால் காய்கறிகளை உணவில் அதிகம் சேர்க்க வேண்டும். ஏனெனில் காய்கறிகளில் உடலுக்கு வேண்டிய சத்துக்கள் ஏராளமான அளவில் நிறைந்துள்ளன. நிறைய பேர் காய்கறிகள் என்றாலே அலறுவார்கள்.

ஆனால் காய்கறிகளில் தான் உடலுக்கு தேவையான முக்கியமான சத்துக்கள் உள்ளன. உங்களுக்கு காய்கறிகளை சாப்பிட பிடிக்காவிட்டால், அந்த காய்கறிகளைக் கொண்டு சூப் செய்து குடியுங்கள். இப்படி காய்கறிகளை சூப் செய்யும் போது, காய்கறிகளில் உள்ள சத்துக்கள் முழுமையாக கிடைப்பதோடு, சுவையாகவும் இருக்கும்.

Top 5 Vegetable Soups And Their Health Benefits In Tamil

சொல்லப்போனால் காய்கறிகளை பொரியல், வறுவல் என்று சாப்பிடுவதை விட, சூப்பாக குடிக்கும் போது முழு சத்துக்களைப் பெறலாம். மேலும் உடலின் மெட்டபாலிசம் அதிகரிக்கும் மற்றும் நோயெதிர்ப்பு சக்தியும் மேம்படும். இப்போது எந்த காய்கறி சூப்புகளை குடித்தால், எந்த மாதிரியான நன்மைகள் கிடைக்கும் என்பதைக் காண்போம்.

காளான் சூப்

காளானில் செலினியம் வளமான அளவில் உள்ளது. அடிக்கடி காளான் சூப்பைக் குடித்து வந்தால், அது உடலில் உள்ள நச்சுக்களை நீக்கி, சிறுநீர்ப்பை புற்றுநோயைத் தடுக்க உதவுகிறது. அதோடு, செலினியம் நரம்பு மண்டலத்தை கட்டுப்படுத்துகிறது மற்றும் இரத்த அழுத்த அளவு அதிகரிப்பதைத் தடுக்கிறது.

மேலும் காளானில் ஃபோலிக் அமிலம் காணப்படுகிறது. இது இரத்த வெள்ளையணுக்களை உருவாக்குகிறது மற்றும் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. இந்த காளானைக் கொண்டு சூப் தயாரிக்கும் போது, அத்துடன் ஆரிகனோ, ரோஸ்மேரி, சேஜ், செலரி போன்ற மூலிகைகளை சேர்க்கும் போது, சூப் சுவையாக இருப்பதோடு, ஆரோக்கியமும் மேம்படும். முக்கியமாக இந்த சூப்பை குடித்து வந்தால், பூஞ்சை தொற்றுக்களின் அபாயம் குறையும்.

ஸ்வீட் கார்ன் சூப்

ஸ்வீட் கார்னில் உள்ள ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், இதயத்தில் உள்ள அடைப்பை நீக்க உதவுகிறது. அதுவும் இதைக் கொண்டு சூப் தயாரித்து குடிக்கும் போது, குளிர்காலத்தில் சந்திக்கும் சுவாச நோய்களில் இருந்து நிவாரணம் கிடைத்து, நுரையீரலும் ஆரோக்கியமாக இருக்கும்.

அதோடு இந்த சூப் மாரடைப்பின் அபாயத்தைக் குறைக்கிறது. மூளையில் உள்ள நரம்புகளை தளர்த்துகிறது மற்றும் மன அழுத்தத்தைக் குறைக்கிறது. இதனால் மூளை பக்கவாதம் ஏற்படும் அபாயம் குறைகிறது.

பட்டாணி சூப்

பட்டாணி சூப்பில் நார்ச்சத்து மற்றும் பொட்டாசியம் உள்ளன. இவை உடலில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது, இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது. இதன் மூலம் இதய ஆரோக்கியம் மேம்படுகிறது. மேலும் பட்டாணியில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பதால், இவை ஆர்த்ரிடிஸ் மற்றும் அல்சைமர் நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. அதோடு சர்க்கரை நோயாளிகளுக்கும் இது நல்லது.

தக்காளி சூப்

தக்காளியில் வைட்டமின் சி, வைட்டமின் ஏ போன்றவை அதிகம் உள்ளன. இவை கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்தி, இதயத் தமனிகளில் உள்ள அடைப்பை நீக்க உதவுகிறது. அப்படிப்பட்ட தக்காளியைக் கொண்டு சூப் தயாரித்து குடிக்கும் போது, அது சுவாச நோய்களைத் தடுக்கிறது. இது தவிர இது சருமத்திற்கு ஈரப்பதமளிப்பதோடு, சரும சுருக்கத்தைத் தடுக்கிறது. நீங்கள் உடல் எடையைக் குறைக்கும் முயற்சியில் இருந்தால், தக்காளி சூப்பைக் குடிக்க நல்ல பலன் கிடைக்கும்.

ராஜ்மா-சன்னா சூப்

ராஜ்மா, சன்னா ஆகியவற்றைக் கொண்டு தயாரிக்கப்படும் சூப்பை புரோட்டீன் சூப் என்றும் அழைப்பார்கள். இந்த சூப் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. மேலும் இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், நார்ச்சத்து மற்றும் புரோட்டீன் போன்றவை இருப்பதால், இது உடலுக்கு ஆற்றலை வழங்கி, உடல் சோர்வை நீக்குகிறது. இரத்த சோகை உள்ளவர்களுக்கு இந்த சூப் மிகவும் நல்லது. அதோடு இந்த சூப் கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்துகிறது மற்றும் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.

Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.

Story first published: Tuesday, October 24, 2023, 12:15 [IST]
Desktop Bottom Promotion