Latest Updates
-
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
மாம்பழத்தை சாப்பிடும் முன் ஏன் நீரில் ஊற வெக்கணும்-ன்னு சொல்றாங்க தெரியுமா?
மாம்பழத்தை வாங்கினால் அதை உடனே சாப்பிடாமல் நீரில் ஊற வைத்து சாப்பிட வேண்டும். இதனால் பல்வேறு நன்மைகளைப் பெறலாம். இப்போது ஏன் மாம்பழத்தை நீரில் ஊற வைத்து சாப்பிட வேண்டும் என்பதற்கான காரணங்களைத் தெரிந்து கொள்வோம்.
கோடைக்காலத்தில் பழங்களின் ராஜாவாக கருதப்படும் மாம்பழம் எங்கும் விலைக் குறைவில் அதிகம் கிடைக்கும். மேலும் பழங்களிலேயே மாம்பழத்தை பார்த்தாலே பலருக்கும் வாயில் எச்சில் ஊறும். அந்த அளவில் இதன் சுவை இனிமையாகவும், நல்ல மணத்துடனும் இருக்கும். இதனாலேயே இப்பழம் பெரும்பாலான மக்களுக்கு பிடித்தமான பழமாக உள்ளது.

பொதுவாக சீசன் பழங்கள் அந்தந்த சீசனில் உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான சத்துக்களைக் கொண்டிருக்கும். அதுவும் மாம்பழத்தில் ஏராளமான சத்துக்கள் உள்ளன. பலரும் மாம்பழம் உடல் வெப்பத்தை அதிகரிப்பதாக நினைத்து, அதை சாப்பிட தவிர்த்து வருகிறார்கள். ஆனால் மாம்பழமும் உடல் வெப்பத்தைக் குறைக்க உதவும். அதற்கு மாம்பழத்தை சரியான வழியில் சாப்பிட வேண்டும்.
என்ன புரியவில்லையா? ஆம், மாம்பழத்தை வாங்கினால் அதை உடனே சாப்பிடாமல் நீரில் ஊற வைத்து சாப்பிட வேண்டும். இதனால் பல்வேறு நன்மைகளைப் பெறலாம். இப்போது ஏன் மாம்பழத்தை நீரில் ஊற வைத்து சாப்பிட வேண்டும் என்பதற்கான காரணங்களைத் தெரிந்து கொள்வோம்.

ஏன் மாம்பழத்தை சாப்பிடும் முன் நீரில் ஊற வைக்க வேண்டும்?
சிறு வயதில் இருந்து நம் தாத்தா பாட்டிமார்கள் மாம்பழத்தை சாப்பிடும் முன் அதைக் கழுவி நீரில் ஊற வைத்து பின் சாப்பிடுவதைக் கண்டிருப்பீர்கள். இதனால் மாம்பழத்தில் உள்ள கெமிக்கல்கள், அழுக்குகள் மற்றும் தூசிகள் நீங்குவது மட்டுமின்றி, மாம்பழத்தின் சுவையும், தரமும் மேம்படுமாம். இப்போது இந்த பழங்கால பழக்கத்தின் பின் உள்ள அறிவியல் காரணங்களைப் பற்றி தெரிந்து கொள்வோம்.

சூட்டைக் குறைக்கும்
மாம்பழம் உடல் வெப்பத்தை அதிகரிக்கக்கூடியது மற்றும் கோடைக்காலத்தில் உடல் வெப்பநிலை அதிகரித்தால் அது செரிமான மண்டலம் மற்றும் குடல் ஆரோக்கியத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.
ஆனால் மாம்பழத்தை நீரில் ஊற வைப்பதன் மூலம், மாம்பழத்தில் உள்ள தெர்மோஜெனிக் பண்புகள் குறையும். உடல் வெப்பம் அதிகரித்தால், அது மலச்சிக்கல், முகப்பரு, தலைவலி போன்ற பிரச்சனைகளை உண்டாக்கும்.

கெமிக்கலை நீக்கும்
தற்போது மாம்பழங்களை விரைவில் பழுக்க வைப்பதற்காகவும் பூச்சிகளால் பாழாகாமல் இருக்கவும் பல்வேறு கெமிக்கல்கள் மற்றும் பூச்சிக் கொல்லிகள் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. இப்படி கெமிக்கல் நிறைந்த பழங்களை தொடர்ந்து சாப்பிட்டால், அது ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்திலும் மோசமான பாதிப்பை உண்டாக்கும். அதுவும் பூச்சிக் கொல்லிகளானது சரும எரிச்சல், குமட்டல், சுவாசப் பாதை எரிச்சல், அலர்ஜி, புற்றுநோய் மற்றும் தலைவலி போன்றவற்றை உண்டாக்கலாம். ஆகவே தான் மாம்பழத்தை சாப்பிடும் முன் 30 நிமிடம் நீரில் ஊற வைத்து சாப்பிடுமாறு அறிவுறுத்தப்படுகிறது.

பைடிக் அமிலத்தை நீக்கும்
பைடிக் அமிலம் என்பது ஒரு வகையான சத்து. இது உடலுக்கு நல்லது மற்றும் கெட்டது. இது ஒரு ஆன்டி-ஆக்ஸிடன்ட்டாக கருதப்படுகிறது. இந்த பைடிக் அமிலம் இரும்புச்சத்து, ஜிங்க், கால்சியம் மற்றும் பிற கனிமச்சத்துக்களை உறிஞ்சுவதைத் தடுக்கிறது. இதனால் உடலில் கனிமச்சத்து பற்றாக்குறை ஏற்படும்.
இந்த பைடிக் அமிலம் மாம்பழத்தில் மட்டுமின்றி, பிற பழஙகள், காய்கறிகள் மற்றும் நட்ஸ்களிலும் உள்ளன. முக்கியமாக பைடிக் அமிலம் உடலில் வெப்பத்தை உண்டாக்குகிறது. ஆகவே தான் மாம்பழத்தை நீரில் ஊற வைத்து சாப்பிட சொல்கிறார்கள்.



Click it and Unblock the Notifications