Latest Updates
-
இந்த 5 உணவுகள் உங்கள் உடலில் துர்நாற்றத்தை ஏற்படுத்தி சங்கடமாக உணர வைக்குமாம் - பார்த்து சாப்பிடுங்க -
வாஸ்து செடிகள்: கோடை வெயிலில் வீட்டை குளிர்ச்சியாக வைத்து அதிர்ஷ்டத்தை அள்ளுவது எப்படி? -
சிக்கன் பிரியாணியை விட சூப்பரா இருக்கும் ஆம்பூர் ஸ்டைல் சோயா பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க -
சனிபகவானின் வக்ர பெயர்ச்சியால் 138 நாட்களுக்கு ஜெயிக்கிற குதிரையா மாறப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
சீதா நவமி: உங்கள் வீட்டில் இந்த மாற்றங்களைச் செய்தா பணமழை கொட்டுமா? அதிர்ஷ்டம் தரும் வாஸ்து ரகசியம்! -
கோடையில் இந்த கஞ்சியை தினமும் 1 கப் குடிங்க.. உடல் எடையும் குறையும், உடல் சூடும் தணியும்.. -
இன்றைய ராசிபலன் 25 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ராஜயோகம் கூடிவரப்போகுதாம் -
செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்!
உங்களுக்கு 'அந்த' இடத்துல பயங்கரமா அரிக்குதா? உடனடி நிவாரணத்துக்கு இத தடவுங்க...
சில சமயங்களில் ஈரப்பதமான காலநிலையில் அந்தரங்க பகுதியில் சங்கடத்தை உண்டாக்கும் அரிப்பை அனுபவிக்கலாம். இது ஆண்களுக்கு மட்டுமின்றி, பெண்களுக்கும் ஏற்படக்கூடும். இதை ஜாக் இட்ச் என்று கூறுவர்.
சில சமயங்களில் ஈரப்பதமான காலநிலையில் அந்தரங்க பகுதியில் சங்கடத்தை உண்டாக்கும் அரிப்பை அனுபவிக்கலாம். இது ஆண்களுக்கு மட்டுமின்றி, பெண்களுக்கும் ஏற்படக்கூடும். இதை ஜாக் இட்ச் என்று கூறுவர். இது பொதுவாக ஒரு பூஞ்சை தொற்று ஆகும். இந்த வகை பூஞ்சை ஈரமான மற்றும் சூடான நிலையில் வளரும். இத்தகைய நிலை இடுப்பு மற்றும் அந்தரங்க பகுதியில் இருப்பதால் தான், பலருக்கும் இந்த இடங்களில் கடுமையான அரிப்பு ஏற்படுகிறது.

ஜாக் இட்ச் நிலை இருந்தால், பூஞ்சை தாக்கியுள்ள பகுதி சிவந்தும், அரிப்பு மிக்கதாகவும் இருக்கும். இது பெரும்பாலும் விளையாட்டு வீரர்கள் மற்றும் அதிகமாக வியர்ப்பவர்களுக்கு ஏற்பட வாய்ப்புள்ளது. இது ஒரு தீவிரமான தொற்று அல்ல. ஆனால் இது பொது இடங்களில் அரிப்பைத் தூண்டி சங்கடத்திற்கு உள்ளாக்கும்.
இந்த நிலைக்கு மருத்துவர்க்ள பூஞ்சை எதிர்ப்பு க்ரீம்களை தடவ வழங்குவார்கள். மேலும் அந்த அடத்தில் சுத்தமாகவும், ஈரப்பதமின்றியும் வைத்துக் கொள்ள அறிவுறுத்துவார்கள். அதே சமயம் இந்த பிரச்சனைக்கு ஒருசில இயற்கை வைத்தியங்களும் உள்ளன. கீழே அந்த இயற்கை வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன. வாருங்கள் அதைப் பார்ப்போம்.

ஆப்பிள் சீடர் வினிகர்
ஆப்பிள் சீடர் வினிகரில் பூஞ்சை எதிர்ப்பு மற்றும் ஆன்டி-மைக்ரோபியல் பண்புகள் உள்ளதால், இது எரிச்லூட்டும் சரும அரிப்பு பரவாமல் தடுக்கும். மேலும் அரிப்பு பிரச்சனையையும் விரைவில் குணப்படுத்தும். அதற்கு ஆப்பிள் சீடர் வினிகரை நீரில் சரிசம அளவில் கலந்து, பஞ்சுருண்டைப் பயன்படுத்தி பாதிக்கப்பட்ட இட்த்தில் தடவ வேண்டும். ஒருவேளை அரிப்பு மிகவும் கடுமையாக இருந்தால், வினிகரில் நனைத்த பஞ்சை அவ்விடத்தில் வைத்து ஒரு துணியால் கட்டி இரவு முழுவதும் விடுங்கள். மறுநாள் காலையில் நீரால் அந்த இடத்தில் கழுவி, ஈரப்பசையைத் துடைத்துவிடுங்கள்.

பூண்டு
4-5 பூண்டு பற்களை எடுத்து தோலுரித்து, தட்டிக் கொள்ளுங்கள். பின் ஒரு சிறு வாணலியில் 100 மிலி ஆலிவ் ஆயிலை ஊற்றி சூடேற்றி, அதில் தட்டிய பூண்டுகளை சேர்த்து 4 நிமிடம் வதக்கி இறக்கவும். பின் அதை குளிர வைத்து வடிகட்டி, அந்த எண்ணெயைக் கொண்டு அரிப்புள்ள பகுதியில் மென்மையாக மசாஜ் செய்து, 30 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் கழுவுங்கள். சிறந்த பலனைப் பெற இப்படி ஒரு நாளைக்கு 3 முறை செய்யுங்கள்.

வேப்பிலை
வேப்பிலை இந்தியாவில் காணப்படும் பொதுவான தெய்வீக மரமாகும். இந்த மரத்தில் அற்புதமான மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளன. இந்த மரத்தின் இலைகளில் சக்தி வாய்ந்த பூஞ்சை எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளதால், இது ஜாக் இட்ச் அரிப்பில் இருந்து நிவாரணம் அளிப்பதோடு, விரைவில் இப்பிரச்சனையில் இருந்து விடுபடவும் செய்யும். அதற்கு ஒரு கையளவு வேப்பிலையை 2 லிட்டர் நீரில் போட்டு கொதிக்க வைத்து, பாதியாக சுண்ட வைத்து இறக்கி வடிகட்டிக் கொள்ளவும். பின் அந்த நீரை பஞ்சுருண்டைப் பயன்படுத்தி பாதிக்கப்பட்ட இடத்தில் ஒரு நாளைக்கு 1 முதல் 2 முறை தடவ வேண்டும். இப்படி தினமும் தயாரித்து பயன்படுத்தினால், சிறப்பான பலன் கிடைக்கும்.

டீ-ட்ரீ ஆயில்
இந்த அத்தியாவசிய நறுமண எண்ணெயில் அற்புதமான ஆன்டி-மைக்ரோபியல் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளதால், இது ஜாக் இட்ச் பிரச்சனையில் இருந்து உடனடி நிவாரணம் அளிக்கும். அதற்கு சில துளிகள் டீ-ட்ரீ ஆயிலை சிறிது வெதுவெதுப்பான நீரில் கலந்து, அதை பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி 30 நிமிடம் ஊற வைத்து, பின் நீரில் கழுவ வேண்டும். இப்படி ஒரு நாளைக்கு 2-3 முறை செய்தால், நல்ல மாற்றத்தைக் காணலாம்.

தேங்காய் எண்ணெய்
தேங்காய் எண்ணெயில் லாரிக் அமிலம் உள்ளது. இது பூஞ்சை எதிர்ப்பு பண்புகளைக் கொண்டது. எனவே இந்த எண்ணெயை ஜாக் இட்ச் ஏற்பட்டுள்ள பகுதியில் தடவினால், அரிப்பில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்கும். ஆனால் இதற்கு விர்ஜின் தேங்காய் எண்ணெயைத் தான் பயன்படுத்த வேண்டும். அதுவும் ஒரு டீஸ்பூன் விர்ஜின் தேங்காய் எண்ணெயை பாதிக்கப்பட்ட இடத்தில் ஒரு நாளைக்கு 2 முறை தடவ வேண்டும்.

தேன்
பூஞ்சை தொற்றுகளுக்கு தேன் ஒரு சிறந்த பழங்கால வைத்தியப் பொருளாகும். இதில் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் நிறைந்துள்ளதால், ஜாக் இட்ச்சை உண்டாக்கும் தொற்றுக்களை எதிர்த்துப் போராட உதவும். அதற்கு தேனை பஞ்சுருண்டையில் நனைத்து, பாதிக்கப்பட்ட இடத்தில் தடவ வேண்டும். இப்படி ஒரு நாளைக்கு 3-4 முறை செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.

கற்றாழை
கற்றாழையிலும் பூஞ்சை எதிர்ப்பு மற்றும் ஆன்டி-செப்டிக் பண்புகள் உள்ளன. இது ஜாக் இட்ச்சை உண்டாக்கும் பூஞ்சை தொற்றுக்களை எதிர்த்துப் போராட உதவுவதோடு, இத்தொற்று இனிமேல் வராமலும் தடுக்கும். அதற்கு கற்றாழை ஜெல்லை அரிப்புள்ள பகுதியில் தடவி சிறிது நேரம் ஊற வைக்கவும். பின் குளிர்ந்த நீரால் அப்பகுதியைக் கழுவ வேண்டும். இப்படி தினமும் 2 முறை செய்து வர, அரிப்பு பிரச்சனை விரைவில் குணமாகிவிடும்.

வெங்காயம்
வெங்காயத்தில் அல்லிசின் என்னும் பூஞ்சை எதிர்ப்பு பொருள் உள்ளது. இந்த உட்பொருள் பல்வேறு பூஞ்சை தொற்றுக்களை எதிர்த்து, அதன் வளர்ச்சியைத் தடுக்கும் திறன் கொண்டது. எனவே ஜாக் இட்ச் பிரச்சனையால் அவஸ்தைப்படுபவர்கள், வெங்காயத்தை அரைத்து சாறு எடுத்து, அந்த சாற்றினை பஞ்சுண்டையில் நனைத்து, அரிப்புள்ள பகுதியின் மீது வைத்து, 20 நிமிடம் ஊற வைக்கவும். பின் நீரால் அப்பகுதியை கழுவ வேண்டும்.
குறிப்பு: சிலருக்கு வெங்காயம் சருமத்தில் கடுமையான எரிச்சலூட்டலாம். எனவே இதை முயற்சிக்கும் முன், கையில் தடவி சோதனை செய்து பார்த்து, பின் பயன்படுத்துங்கள்.



Click it and Unblock the Notifications