Latest Updates
-
பால் போன்ற வெள்ளையான சருமம் வேண்டுமா? அப்ப இந்த சோள மாவு ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
சன்டே ஸ்பெஷல் ஹனி கார்லிக் சிக்கன் - சிம்பிளா எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
அடுத்த 6 மாதம் இந்த 3 ராசிக்காரங்க தொழில் மற்றும் பண விஷயத்தில் கவனமா இருக்கணும்.. -
Actor Bhagyaraj Death: வாக்கிங் சென்ற பின் காலமான நடிகர் பாக்யராஜ்! உண்மையில் வாக்கிங் மாரடைப்பை ஏற்படுத்துமா? -
சத்தான.. எலுமிச்சை இஞ்சி ரசம் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
வெறும் தோசையை விட முட்டை தோசை ஏன் சிறந்தது? - விளக்கும் டாக்டர்.பிரகாஷ்மூர்த்தி! -
ஜூன் இறுதியில் உருவாகும் அங்காரக யோகம்: டிசம்பர் வரை இந்த 3 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்! -
1/2 கப் வேர்க்கடலை இருந்தா.. இப்படி சட்னி அரைங்க.. வீட்டுல எல்லாரும் எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 27 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு ராஜயோகம் கதவைத் தட்டப்போகுதாம் -
புதன் வக்ர பெயர்ச்சியால் ஜூன் இறுதியில் இந்த 3 ராசிக்கு பண வரவு அதிகரிக்கும்..
சிறுநீரக கற்களை உடனடியாக கரைக்க கூடிய இந்த கீரை பற்றி தெரியுமா..?
புது வருஷம் பொறந்துடுச்சி..! பலர் ரொம்ப சந்தோஷமா இந்த புத்தாண்ட ஆரம்பிச்சி இருப்பாங்க. என்னதான் வருஷம் மாறுனாலும் நமக்கு இருக்க கூடிய உடல்நல கோளாறுகள் அப்படியே தான் இருக்குது. பலருக்கு இந்த புத்தாண்டுல இந்த நோய்கள் குணமாக வேண்டும் என்பதே பெரும் ஆசையாக இருக்கும். அந்த வகையில பலர் அவஸ்தை படுகின்ற மோசமான பிரச்சினை தான் இந்த சிறுநீரக கோளாறும்.

சிறுநீரகம் நமது உடம்பின் மிக முக்கிய உறுப்பு. இது பாதிக்கப்பட்டால் உடலில் உள்ள மற்ற உறுப்புகளும், ஒவ்வொன்றாக பாதிப்பை சந்திக்க நேரிடும். சிறுநீரகத்தின் சீர்கேட்டிற்கு முக்கிய காரணம் இந்த சிறுநீரக கற்கள் தான். இவை உருவாவதால் தான் உயிருக்கே ஆபத்து ஏற்படுகின்றது. இந்த பிரச்சினைக்கு இந்த ஒரு கீரை மட்டுமே போதும் என ஆராய்ச்சிகள் சொல்கின்றது. அது என்ன கீரை என்பதை இனி தெரிந்து கொள்வோம்.

அபாயமா..?
பொதுவாக நமது கிட்னி அபாயத்தில் உள்ளது என்பதை உணர்த்தும் சில அறிகுறிகள் நமது உடலில் ஏற்படும். இதை வைத்தே நாம் எந்த அளவிற்கு சிறுநீரக பிரச்சினையால் பாதித்துள்ளோம் என்பதை அறிந்து கொள்ள இயலும்.
- சிறுநீர் கழித்தலில் சிரமம்
- சிறுநீர் நிறம் மாற்றம்
- சிறுநீரக பகுதியில் திடீர் வலி
- சிறுநீரில் அதிக துர்நாற்றத்துடன் வருதல்

4 முறைகள் என்னென்ன..?
சிறுநீரக பிரச்சினைக்கு தீர்வு தர 4 விதமான முறைகள் உள்ளது. இவை அனைத்திலும் முக்கிய பங்கு ஒரு கீரைக்கு மட்டும் உண்டு. அதுதான் பார்ஸ்லி. இதை இந்த பதிவில் கூறுவது போல தயாரித்து சாப்பிட்டு வந்தால் 1 மாதத்திற்குள் சிறுநீரக கோளாறுகள் குணமாகி விடும்.

முத்தான மூன்று..!
ஒவ்வொரு உணவின் தன்மையையும் வேறு சில உணவுகளுடன் சேரும்போது இரு மடங்காக கூடும். அதே போன்று தான் இவைகளும். இவை மூன்றையும் சேர்த்து சாப்பிடுவதால் மிக சீக்கிரத்திலே சிறுநீரக கற்கள் கரைந்து விடும்.
இதற்கு தேவையானவை...
வெள்ளரிக்காய் பாதி
எலுமிச்சசை 1
பார்ஸ்லி 1 கப்

செய்முறை :-
முதலில் பார்ஸ்லி இலைகளை 15 நிமிடம் நீரில் கொதிக்க விடவும். அடுத்து இதன் நீரை மட்டும் வடிகட்டி கொள்ளவும். பிறகு வெள்ளரிக்காயை நன்றாக அரைத்து கொள்ளவும்.
இந்த இரண்டு சாற்றையும் ஒன்றாக சேர்த்து கொண்டு, இறுதியாக எலுமிச்சை சாறு கலக்கவும். தினமும் காலையில் இந்த சாற்றை குடித்து வந்தால் சிறுநீரக அழுக்குகள் நீங்கி மற்றும் கற்களும் கரைந்து விடுமாம்.

கற்களை முழுமையாக தடுக்க
கிட்னியில் சேர்ந்துள்ள கற்களை கரைக்கவும், இனி மீண்டும் ஏற்படாதவாறு பார்த்து கொள்ளவும் இந்த குறிப்பு பயன்படும். இதற்கு தேவையானவை...
பார்ஸ்லி ஒரு கைப்பிடி
ஆலிவ் எண்ணெய் அரை ஸ்பூன்
ஆப்பிள் சிடர் வினிகர் 1 ஸ்பூன்

செய்முறை :-
முதலில் பார்ஸ்லியை நன்றாக அரைத்து கொள்ளவும். அடுத்து இவற்றுடன் ஆப்பிள் சிடர் வினிகர் மற்றும் ஆலிவ் எண்ணெய் சேர்த்து மீண்டும் லேசாக அரைத்து கொண்டு தேவைக்கு 1 கப் நீரும் சேர்த்து கொள்ளலாம்.
இந்த கலவையை தினமும் காலையில் குடித்து வந்தால் சிறுநீரக கற்கள் கரைந்து, உங்கள் கவலை முழுவதுமாக நீங்கி விடும்.

வண்ணமயமான ஜுஸ்..!
பலவித ஜுஸ்கள் இங்கு இருந்தாலும் இந்த பலவித நிறங்கள் கொண்ட ஜுசிற்கென்று தனித்துவம் உள்ளதாம். இதை தயாரிக்க தேவையானவை...
கேரட் 1
பீட்ரூட் பாதி
வெள்ளரிக்காய் பாதி
பார்ஸ்லி இலை ஒரு கைப்பிடி
எலுமிச்சை சாறு 2 ஸ்பூன்

தயாரிப்பு முறை...
கேரட் மற்றும் பீட்ரூட்டை சேர்த்து முதலில் அரைத்து கொள்ளவும். அடுத்து இவற்றுடன் வெள்ளரிக்காயையும் சேர்த்து மீண்டும் அரைத்து கொண்டு எலுமிச்கை சாற்றை சேர்க்கவும்.
பின் பார்ஸ்லி இலையை நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி கொண்டு இந்த கலவையுடன் சேர்த்து குடிக்கலாம். இந்த முறை அழுக்குகளை முற்றிலுமாக சுத்தம் செய்து நல்ல பலனை தரும்.

இந்த டீ தெரியுமா..?
தினமும் நாம் காலையில் பாலுடன் கலந்து குடிக்கும் டீயை விட இந்த பார்ஸ்லி பல அற்புதத்தை உங்களுக்கு தரும். பார்ஸ்லி இலைகளை 1 கப் அளவிற்கு எடுத்து கொண்டு சிறிது சிறிதாக நறுக்கி, நீரில் கொதிக்க வைக்கவும். அடுத்து இதனை வடிகட்டி தேனுடன் கலந்து குடிக்கவும். இவ்வாறு செய்வதால் குறைந்த காலத்திலே கிறுநீரக கற்கள் கரைந்து விடும்.

இரண்டின் கலவை எப்படி..?
பெரும்பாலும் நமது ஆரோக்கியதை நிர்ணயிக்கும் தன்மை இந்த இரு வகையான உணவு பொருளுக்கும் உண்டு. அதாவது 1 கப் வெது வெதுப்பான நீரில் 2 ஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் 1 ஸ்பூன் கலந்து குடித்தால் சிறுநீரக கோளாறுகள் எதுவும் இல்லாமல் எல்லா வருஷமும் சந்தோஷமாக இருக்கலாமாம்.



Click it and Unblock the Notifications