Latest Updates
-
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம் -
50 ஆண்டுகளாக திருமணமே நடக்காத கிராமம் முதல் இரட்டை குடியுரிமை வரை இந்தியாவின் நம்பமுடியாத வினோத கிராமங்கள் -
கடக ராசியில் குரு-செவ்வாய் கூட்டணி: 12 ராசிகளில் நீச பங்க ராஜயோகம் யாருக்கு? - ஜோதிடர் கணிப்புகள்! -
ராகி ரவா இட்லியும்.. பீர்க்கங்காய் சட்னியும்.. - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணுங்க.. -
செப்டம்பர் 21, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு வீண் செலவுகள் தேடிவருமாம் - கவனமா இருங்க -
குருபகவானின் நட்சத்திர மாற்றத்தால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நார்த் இந்தியன் ஸ்டைல் உருளைக்கிழங்கு சப்ஜி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை,சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இரண்டாவது திருமணம் நடக்க பிரகாசமான வாய்ப்பிருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா?
உப்பு சாப்பிடுவது உண்மையில் ஆரோக்கியமானதா?
" அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு " என்பது உப்பிற்கும் பொருந்தும். ஏனெனில் உணவில் உப்பு அதிகமாக சேர்க்கப்படும்போது அது இரத்த அழுத்தத்தை அதிகரிக்கும் மேலும் பல ஆரோக்கிய கேடுகளையும் உண்டாக்கும்.
" உப்பில்லா பண்டம் குப்பையிலே " என்று தமிழில் ஒரு பழமொழி உள்ளது. இது 100 சதவீதம் ஏற்றுக்கொள்ள கூடிய ஒரு பழமொழி. ஏனெனில் உலகில் உப்பின்றி சமைக்கப்படும் உணவென்று எதுவும் இல்லை. அப்படி சமைக்கப்பட்டாலும் அது ஒருத்தருக்கு கொடுக்கப்படும் தண்டையாகத்தான் இருக்கும். ஏனெனில் எவ்வளவுதான் சுவையாக சமைத்தாலும் அதன் சுவையை நமது நாக்கு உணரவேண்டுமெனில் அதில் உப்பு போட வேண்டியது அவசியமாகும்.

" அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு " என்பது உப்பிற்கும் பொருந்தும். ஏனெனில் உணவில் உப்பு அதிகமாக சேர்க்கப்படும்போது அது இரத்த அழுத்தத்தை அதிகரிக்கும் மேலும் பல ஆரோக்கிய கேடுகளையும் உண்டாக்கும். அதேபோலத்தான் உப்பு உணவில் இல்லாமல் இருப்பதும் பல ஆரோக்கிய கேடுகளை உண்டாக்கும். உப்பை உணவில் சேர்க்காமல் நேரடியாக சாப்பிடுவது இன்னும் மோசமான விளைவுகளை உண்டாக்கும்.

சமைக்கப்படாத உப்பின் பக்க விளைவுகள்
உப்பு அதிகளவு சாப்பிடுவது உயர் இரத்த அழுத்தம், வயிறு புற்றுநோய், ஆஸ்துமா போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்தும். உங்களுக்கு தெரியாத ஒரு விஷயம் என்னவெனில் சமைக்கப்படாத உப்பு அதிகமாக சாப்பிடும்போது அது இதய கோளாறு மற்றும் சிறுநீரக கோளாறுகளை உருவாக்கும். மருத்துவர்களின் கருத்துப்படி இது நரம்பு மண்டலத்திலும் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்துமாம்.

சமைத்து முடித்தவுடன் உணவில் சேர்ப்பது ஆபத்து
சமைத்து முடித்தவுடன் உணவில் உப்பு சேர்ப்பது ஆரோக்கிய பிரச்சினைகளை உண்டாக்கும். உப்பு உணவுடன் சேர்த்து வேகவைக்கப்படும்போது அதில் உள்ள இரும்பு சத்துக்கள் எளிதில் உடலால் உறிஞ்சப்படுகிறது. சமைத்து முடித்தவுடன் உணவில் உப்பு சேர்க்கும்போது அதன் இரும்புசத்து அப்படியே இருப்பதால் அது எளிதாக நம் உடலில் உயர் இரத்த அழுத்தத்தையும், மனஅழுத்தத்தையும் அதிகரிக்கும். இதனால் மாரடைப்பு கூட ஏற்படலாம்.

குறைந்த அளவு உப்பு ஆபத்தானதா?
உண்மைதான். உணவில் அதிக அளவு உப்பு சேர்ப்பது எப்படி இரத்த அழுத்தத்தை அதிகரிக்கிறதோ அதேபோல குறைந்த அளவு உப்பும் ஆபத்துதான். இது மரணம் வரை கூட ஏற்படுத்தலாம். ஆய்வுகளின் படி மாரடைப்பால் இறப்பவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் குறைவான உப்பு போட்டு சாப்பிடும் பழக்கம் உள்ளவர்கள்தான் என்று கண்டறியப்பட்டுள்ளது.

நீர்க்கட்டு
உங்கள் முட்டி, பாதம் மற்றும் கைகளில் வீக்கம் இருந்தால் அது நீர்க்கட்டாக கூட இருக்கலாம். உடலில் அதிகளவு சோடியம் சேரும்போது அது உடலில் இருக்கும் நீரின் அளவை குறைக்கும். இதன் விளைவாக கை மற்றும் கால்களில் வீக்கம் ஏற்படும். எனவே அதிகளவு உப்பு சேர்ப்பதை தவிர்க்கவும்.

வயிறு புற்றுநோய்
அதிகளவு பதப்படுத்தப்பட்ட உணவுகள் உங்கள் வயிற்றில் பல ஆரோக்கிய பிரச்சினைகளை உண்டாக்கும். உணவுகளை பதப்படுத்த அவற்றில் உப்பு அதிகம் சேர்க்கப்படுகிறது என்பது நாம் அறிந்த ஒன்றே. எனவே பதப்படுத்தப்பட்ட இறைச்சி, பலங்கள், காய்கறிகள் போன்றவற்றை சாப்பிடாதீர்கள்.ஏனெனில் இது வயிற்று புற்றுநோயை உண்டாக்கவல்லது. பெண்களை காட்டிலும் ஆண்களுக்கு இது ஏற்பட வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

எடை அதிகரிப்பு
உப்பானது மற்ற உணவுகளை போல நேரடியாக உங்கள் உடல் எடையை அதிகரிக்க செய்யாது. ஆனால் அதிக உப்பு சாப்பிடுவது இன்சுலின் சுரப்பை அதிகரிக்கிறது. இன்சுலின் உங்கள் உடலில் அதிக கொழுப்பை தங்க செய்கிறது. இதனால் சர்க்கரை நோய், ஈரல் தொடர்பான பிரச்சினைகள் என பல நோய்கள் ஏற்படுகிறது. இதன் விளைவாக உங்கள் உடல் எடை அதிகரிக்கும்.

எவ்வளவு உப்பு சாப்பிட வேண்டும்?
மருத்துவர்களின் கருத்துப்படி ஒருவர் ஒரு நாளைக்கு இரண்டு ஸ்பூன் உப்பை உணவில் சேர்த்துக்கொள்ளவேண்டும். 10 கிராம் உப்பில் 4000 மிகி சோடியம் உள்ளது. உடலில் சோடியத்தின் அளவு அதிகரிப்பது நல்லதல்ல. எனவே ஒரு நாளைக்கு 2 ஸ்பூன் உப்பிற்கு மேல் சாப்பிடக்கூடாது. உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் 1 ஸ்பூன் உப்பு மட்டுமே சேர்த்துக்கொள்ள வேண்டும்.

தாகத்தை குறைத்து பசியை அதிகரிக்கிறது
மருத்துவ ஆய்வுகளின் படி உப்பு அதிகமாக இருக்கும் உணவை சாப்பிடும்போது அது தாகத்தை குறைத்து பசியை அதிகரிக்கும். இதனால் உடல் எடை அதிகரிக்கும் வாய்ப்புகள் அதிகம். உடலில் நீரின் அளவு குறையும்போது அதுவும் பல ஆரோக்கிய கேடுகளை உருவாக்கும். மொத்தத்தில் அதிக உப்பு என்பது ஆபத்தானது.

மாற்றுவழி?
ஒருவேளை உங்களுக்கு உப்பு அதிகமாக இருந்ததால்தான் சாப்பிட பிடிக்கும் என்னும் பட்சத்தில் வெள்ளை உப்பிற்கு பதிலாக ராக் சால்ட்டை சேர்த்துக்கொள்ளுங்கள். இது எந்தவித பக்கவிளைவுகளையும் ஏற்படுத்துவதில்லை என மருத்துவர்கள் கூறுகிறார்கள்.



Click it and Unblock the Notifications
