Latest Updates
-
மட்டன் சுவையை மிஞ்சும் சோயா உருளைக்கிழங்கு குருமா ரெசிபி - செஞ்சு பாருங்க, செமையா இருக்கும் -
பொருளாதாரச் சுரண்டல் இனி குடும்ப வன்முறை! மனைவியிடம் கையேந்த வைக்கும் கணவர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த செக்! -
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டகாத்து வீசும்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
ஏசி ஓடினாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா? ஏசியை இந்த மாதிரி யூஸ் பண்ணுங்க -
வீட்டிலேயே மாம்பழ ஐஸ்க்ரீம்மை ஈஸியாக செய்வது எப்படி-ன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இந்த உணவுகளில் ஒன்றை தினமும் சாப்பிடணுமாம் - அதான் நல்லது -
May Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. மே மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
ஐயங்கார் ஸ்டைல் பருப்பு உருண்டை குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, செமையா இருக்கும் -
வெயிலால் கருமையாகியுள்ள சருமத்தை வெள்ளையாக்கணுமா? அப்ப இந்த முலாம் பழ ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
வெயிலின் தாக்கத்தை குறைக்க வாஸ்து செடிகளுக்கு மவுசு: மணி பிளாண்ட், அரேகா பாம் வாங்க மக்கள் ஆர்வம்
உடல் எடையை ஒரே வாரத்தில் குறைக்கணுமா..?அப்போ பீட்ரூட்டை இவற்றோடு சேர்த்து குடிங்க..
உடல் எடை கூடி கொண்டே போனால், நாம் நிச்சயம் கவலை பட கூடும். உடல் எடையை சீராக பார்த்து கொள்வது நம் ஒவ்வொருவரின் கடமையாகும். உடல் பருமன் உயர்ந்தால் அது நம் ஆரோக்கியத்திற்கு மிக பெரிய ஆபத்தை ஏற்படுத்தும். எடையை குறைக்க பல வழிகளை நாம் பயன்படுத்தி சோர்ந்து போயிருப்போம்.

இனி இந்த சோர்வை தூக்கி எறிய ஒரு அற்புத வழி முறை இருக்கிறது. அது என்னவென்றால், பீட்ரூட் தான். பீட்ரூட்டுடன் வேறு சில உணவுகளை சேர்த்து உண்டால் உடல் எடை சட்டென குறைந்து விடும் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இந்த பதிவில் பீட்ரூட்டை எப்படியெல்லாம் பயன்படுத்தினால் உடல் எடை குறையும் என்பதை நாம் தெரிந்து கொள்வோம்.

பழமை மிக பீட்ரூட்...!
பீட்ரூட்டிற்கென்றே ஒரு தனி வரலாறே இருக்கிறது. இந்த பீட்ரூட்டை போலந்து நாட்டில் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்டது. இவற்றின் நிறம் அப்போது சற்றே வேறுபட்டு இருந்ததாம். இவை உடலின் நலத்தை பாதுகாக்க மிக முக்கியமாக உதவுகிறது. இதில் எண்ணற்ற சத்துக்களும் நிறைந்துள்ளது. இவற்றின் நிறத்திற்காகவே பல வகைகளிலும் இதனை பயன்படுத்தி வருகின்றனர்.

குறைந்த கலோரி கொண்டதா..?
பீட்ரூட்டில் மிக குறைந்த அளவே கலோரிகள் உள்ளன. 100 ml பீட்ரூட் சாற்றில் வெறும் 35 கலோரிகளே இருக்கிறதாம். எனவே, இவை உடல் எடையை கூடாமல் பார்த்து கொள்ளும். அத்துடன் இவற்றில் ஏராளமான ஊட்டசத்துக்களும் உள்ளன.
புரதசத்து
நீர்சத்து
ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள்
ஃபோலேட்
நார்சத்து
வைட்டமின் சி
பொட்டாசியம்
இரும்புசத்து

சிவப்பும் சிவப்பும் சேர்ந்தால்..?
தலைப்பில் கூறப்பட்டது போலவே இரு சிவப்பு நிற உணவுகள் ஒன்றாக சேர்ந்தால் ஒரு அற்புத விடை கிடைக்குமாம். அதவாது, மாதுளையும் பீட்ரூட்டையும் சேர்த்து சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
தேவையானவை :-
மாதுளை 1 கப்
நறுக்கிய பீட்ரூட் 2 கப்
எலுமிச்சை சாரி 3 ஸ்பூன்
சிறிது கருப்பு உப்பு (அ) சாதாரண உப்பு

சிவப்பும் சிவப்பும் சேர்ந்தால்..?
தலைப்பில் கூறப்பட்டது போலவே இரு சிவப்பு நிற உணவுகள் ஒன்றாக சேர்ந்தால் ஒரு அற்புத விடை கிடைக்குமாம். அதவாது, மாதுளையும் பீட்ரூட்டையும் சேர்த்து சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
தேவையானவை :-
மாதுளை 1 கப்
நறுக்கிய பீட்ரூட் 2 கப்
எலுமிச்சை சாறு 3 ஸ்பூன்
சிறிது கருப்பு உப்பு (அ) சாதாரண உப்பு

செய்முறை :-
உடல் எடையை உடனடியாக குறைக்க, முதலில் மாதுளை மற்றும் பீட்ரூட்டை ஒன்றாக அரைத்து கொள்ளவும். அடுத்து, இவற்றுடன் சிறிது நீர், சிறிது உப்பு, எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாக கலந்து கொண்டு, குடித்து வரவும். இதனை தொடர்ந்து குடித்து வந்தால், இவற்றில் உள்ள பி-காம்ப்லெக்ஸ் வைட்டமின் செரிமானத்தை சீராக்கி உடல் எடையை கச்சிதமாக வைத்து கொள்ளும்.

பீட்டும் கேரட்டும் சேர்ந்தால்..?
உடல் எடையை குறைக்க பெரும்பாடு படுவோருக்கு, இந்த எளிய முறை நன்கு உதவும். இந்த ஜுஸை குடித்து வந்தால் உடலில் உள்ள கொழுப்புகள் விரைவாக கரைய தொடங்கும்.
தேவையனவை :-
நறுக்கிய பீட்ரூட் 2 கப்
நறுக்கிய கேரட் 2 கப்
எலுமிச்சை சாறு 5 ஸ்பூன்
ஒரு சிட்டிகை உப்பு
சிறிது புதினா இலைகள்

செய்முறை :-
முதலில் கேரட், புதினா மற்றும் பீட்ரூட் ஆகியவற்றை சேர்த்து நன்றாக அரைத்து கொள்ளவும். அடுத்து இவற்றுடன் சிறிது நீர், எலுமிச்சை சாறு, சிறிது உப்பு சேர்த்து நன்கு கலந்து கொண்டு குடிக்க வேண்டும். இதை தொடர்ந்து குடித்து வந்தால் உடல் எடை ஒரே வாரத்தில் குறைய தொடங்கும்.

ஆப்பிளும் பீட்ரூட்டும் எப்படி..?
ஆப்பிள் மற்றும் பீட்ரூட், இவை இரண்டிலுமே மிக குறைந்த அளவே கலோரிகள் இருக்கின்றன. உடல் பருமனால் அவதிப்படுவோருக்கு இந்த ஜுஸ் அருமையான தீர்வாம்.
தேவையானவை :-
நறுக்கிய ஆப்பிள் 1 கப்
நறுக்கிய பீட்ரூட் 2 கப்
சிறிது இலவங்க பொடி
சிறிது கருப்பு உப்பு (அ) சாதாரண உப்பு

செய்முறை :-
ஆப்பிள் மற்றும் பீட்ரூட்டை சேர்த்து அரைத்து கொள்ளவும். தேவைக்கேற்ப சிறிது நீர் சேர்த்து கொள்ளலாம். பிறகு இவற்றுடன், சிறிது இலவங்க பொடி மற்றும் உப்பு சேர்த்து கொண்டு நன்றாக கலக்கி குடித்து வரவும். இந்த ஜுஸை 1 மாதம் தொடர்ந்து குடித்து வந்தால் உடல் எடை குறையும்.

மீண்டும் ஒரு சிவப்பு..!
பொதுவாகவே அதிக நிறங்கள் கொண்ட பழங்கள் உடலுக்கு ஏராளமான நன்மைகளை தருமாம். அதிலும் குறிப்பாக தக்காளி மற்றும் பீட்ரூட் இந்த வரிசையில் முதன்மையான இடத்தில் உள்ளது.
தேவையானவை :-
நறுக்கிய பீட்ரூட் 2 கப்
நறுக்கிய தக்காளி 1 1/2 கப்
புதினா இலைகள் சிறிது
உப்பு
எலுமிச்சை சாறு 3 ஸ்பூன்

செய்முறை :-
முதலில் தக்காளி, புதினா மற்றும் பீட்ரூட்டை ஒன்றாக சேர்த்து அரைத்து கொள்ளவும். பிறகு இவற்றுடன் எலுமிச்சை சாறு, உப்பு சேர்த்து கலந்து கொண்டு குடிக்கவும். இந்த சிவப்பு நிற ஜுஸ், மிக சிறந்த பலனை உங்களுக்கு தரும். தொடர்ந்து இதனை குடித்து வந்தாலே போதும்.

பயன்கள் :-
- பீட்ரூட்டை உணவில் அதிகமாக சேர்த்து கொண்டால் இரத்தத்தை சுத்தமாக வைத்து கொள்ளும்.
- அடிக்கடி சோர்வாக இருப்பவர்களுக்கு பீட்ரூட் மிக அற்புதமான மருந்தாகும்.
- இதயத்தின் ஆரோக்கியத்தை கட்டி காப்பதில் பீட்ரூட் முக்கிய இடத்தை பிடித்துள்ளது.
- ஆரோக்கியமான உடல் அமைப்பை பீட்ரூட் தரும்.

நலமோடு வாழ..
- உடல் பருமனால் பாதிக்கப்பட்டுள்ளோருக்கு பீட்ரூட் மிக சிறந்த தீர்வாகும்.
- புற்றுநோய் உடலில் வராமல் தடுக்க பீட்ரூட் நன்கு உதவும்.
- நீண்ட காலம் இளமையாக இருக்க பீட்ரூட்டை தினமும் உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தாலே போதும்.



Click it and Unblock the Notifications