ப்ரோஸ்டேட் புற்று நோய், மார்பக புற்று நோய் வராம தடுக்கனும்னா இந்த பழத்தை அடிக்கடி சாப்பிடுங்க!!

Posted By: Aashika
Subscribe to Boldsky

 பொதுவாக சீசனுக்கு கிடைக்கும் பழங்களில் அதிக சத்துக்கள் நிரம்பியிருக்கும். இப்போது அதிக கிடைக்கும் மாம்பழங்களில் சுவையைத் தாண்டி மாம்பழங்களில் ஏராளமான சத்துக்கள் நிரம்பியிருக்கின்றன.

Health Benifits Of Mango

மாம்பழங்களில் ஒவ்வொரு ரகத்திற்கும் ஒவ்வொரு சுவை இருக்கும் பட்சத்தில் சத்துக்கள் பெரும்பாலும் ஒன்றே தான் இருக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் :

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் :

ஒரு மாம்பழத்தில் இருக்கும் சத்துக்கள் பாதாமில் இருக்கும் சத்துக்களுக்கு நிகரானது. இது நம் நரம்பு மண்டலத்தையும் திசுக்களையும் உயிர்ப்பிக்கும் அத்துடன் உணவுகளை எளிதில் ஜீரணமாக்கும்.

கேன்சர் தடுக்கும் :

கேன்சர் தடுக்கும் :

மாம்பழங்களில் நிறைந்திருக்கும் டயட்ரி ஃபைபர், விட்டமின்ஸ், மினரல்ஸ்,மற்றும் ஃபினாலிக் ஃப்ளேவனாய்ட்ஸ் எனப்படுகிற ஆன்ட்டி ஆக்ஸிடண்ட்ஸ் இருக்கிறது. இவை, மார்பக புற்றுநோய் மற்றும் ப்ரோஸ்ட்டேட் புற்றுநோய் வராமல் தடுத்திடும்.

பார்வை அதிகரிக்கும் :

பார்வை அதிகரிக்கும் :

மாம்பழங்களில் விட்டமின் ஏ இருக்கிறது. அதுமட்டுமின்றி அதில் இருக்கும் பீட்டா கரோட்டீன், ஆல்ஃபா கரோட்டீன் போன்றவை கண்களுக்கு நல்லது. இதிலிருக்கும் கரோட்டீன் சத்து நுரையீரல் புற்றுநோய் வராமல் தடுக்கும்.

பிரசர் :

பிரசர் :

புதிய மாம்பழங்களில் பொட்டாசியம் இருக்கும் ஒரு நாளில் 100 கிராம் சாப்பிடும் பட்சத்தில் நம் உடலுக்கு 156 கிராம் பொட்டாசியம் கிடைக்கும். உடலை ஆரோக்கியமானதாக இருக்க தண்ணீர் சத்து அவசியம் அதற்கு பொட்டாசியம் துணை நிற்கும். அத்துடன் இது நம் இதயத்துடிப்பையும் சீராக்கும்.

சருமம் :

சருமம் :

மாம்பழத்தில் இருக்கும் விட்டமின் ஏ சத்து, நம் உடலுக்கு தேவையான குறிப்பாக சரும ஆரோக்கியத்தியத்திற்கு மிகவும் அவசியம். இவை சாப்பிடலாம் அல்லது மாம்பழக்கூழை முகத்தில் பூசி 15 நிமிடங்களில் முகத்தைக் கழுவலாம்.

இதய நோய் :

இதய நோய் :

மாம்பழங்களில் விட்டமின் பி6, விட்டமின் சி மற்றும் விட்டமின் இ இருக்கிறது. விட்டமின் சி நோய்த் தொற்று வராமல் தடுத்திடும். விட்டமின் பி6 ரத்தத்தில் உள்ள ஹோமோசிஸ்டீன் அளவை அதிகரிக்காமல் பாத்துக் கொள்ளும் இது அதிகரிப்பதால் தான் மாரடைப்பு மற்றும் பக்கவாதம் வருகிறது.

 அனீமியா :

அனீமியா :

ரத்தசோகையால் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் மாம்பழங்களை நிறைய எடுத்துக் கொள்ளலாம். ரத்த சிகப்பணுக்களை உருவாகவும், உடலில் உள்ள என்சைம்களுக்கும் காப்பர் அவசியம் அவை மாம்பழங்களில் நிறையவே இருக்கின்றன. மாம்பழங்களை சாப்பிட்டால் ரத்த சோகையை தவிர்க்கலாம்.

இளநரையா? :

இளநரையா? :

மாம்பழம் மட்டுமல்ல மாங்கொட்டையும் நமக்கு நன்மையளிக்ககூடியது தான். அதிலும் ஃபேட்டி ஆசிட் உட்பட ஏராளமான சத்துக்கள் இருக்கின்றன. மாங்கொட்டையை தனியாக எடுத்து காய வைத்து சின்ன சின்ன பீஸ்களாக கட் செய்து கொள்ளுங்கள்.

அதனை தேங்காய் எண்ணெய் மற்றும் கடுகு எண்ணெயுடன் போட்டு வெயிலில் வையுங்கள். மூன்று முதல் நான்கு நாட்கள் வரை வெயிலில் நன்றாக காய்ந்த பிறகு அந்த எண்ணெயை தினமும் தலைக்கு பயன்படுத்தலாம்.

 சர்க்கரை நோய் :

சர்க்கரை நோய் :

மாவிலைகள் சர்க்கரை நோயை குணப்படுத்த வல்லது. முதல் நாள் இரவே குடிக்கும் நீரில் சில மாவிலைகளை போட்டு கொதிக்க வைத்திடுங்கள் மறு நாள் அந்த நீரை பருகலாம். இது சர்க்கரையை நோயை கட்டுக்குள் வைத்திருக்க உதவிடும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
Read more about: health fruit tips
English summary

Health Benifits Of Mango

There are so many benefits in fruits.Here we listed the health benefits of mango