Latest Updates
-
2 ஆண்டுக்கு பின் இணையும் சூரியன்-செவ்வாய்: இந்த 3 ராசிக்காரங்க கோடிகளை குவிக்கப் போறாங்களாம் -
மாங்காய் வாங்குனா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் ஊறுகாய் செய்யுங்க - சுருக்குனு சூப்பரா இருக்கும் -
Skin Care Tips: அந்தகால மகாராணிகள் பயன்படுத்திய வினோதமான அழகு குறிப்புகள் - நீங்களும் ட்ரை பண்ணுங்க -
தக்காளி சட்னி அடிக்கடி சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் என்னென்ன தெரியுமா? -
பாவக்காயை இந்த மாதிரி கர்நாடக ஸ்டைலில் புளி குழம்பு செய்யுங்க - கசப்பே இல்லாம சூப்பரா இருக்கும் -
தமிழ் புத்தாண்டுக்கு மா, பலா, வாழை வெச்சு.. இப்படி முக்கனி பாயாசத்தை செஞ்சு சாப்பிடுங்க.. ருசி அள்ளும்.. -
Chithirai Matha Rasi Palan 2026: சித்திரை மாதத்தில் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் இவங்கதான் -
உலகின் டாப் 10 பழமையான நாடுகள் - இந்தியா எத்தனாவது இடத்தில் இருக்கு தெரியுமா? -
இந்த சூப்பை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடையும் குறையும், சுகரும் கண்ட்ரோலா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 14 ஏப்ரல் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு ஆபத்துகள் துரத்தும் நாளாக இருக்குமாம்
எலும்பு வலி நீங்க, எலும்புகள் வலிமை பெற உதவும் கைதேர்ந்த பாட்டி வைத்தியங்கள்!
எலும்பு வலி நீங்க, எலும்புகள் வலிமை பெற உதவும் கைதேர்ந்த பாட்டி வைத்தியங்கள்!
ஒருவேளை பாட்டிகள் நமது வீட்டிலேயே இருந்திருந்தால், தெருவுக்கு ஒரு கிளினிக், மெடிக்கல் ஷாப், மருத்துவமனைகள் வந்திருக்காது.
அதிலும், இப்போது கண், காது, மூக்கு என தனித்தனி மருத்துவமனைகள், வித்தியாச வித்தியாசமான வகையில் பரிசோதனைகள் செய்து காசை பிடுங்கி விடுகிறார்கள்.
உட்கார்ந்தே வேலை செய்வதனால் தற்போதைய தலைமுறை அதிகம் எலும்பு ஆரோக்கியம் குறைந்து காணப்படுகிறார்கள். மருத்துவமனைக்கு சென்றால் உடனே, ஸ்கேன் செய்து பில்லை தீட்டி விடுவார்கள்.
ஆனால், மிக குறைந்த விலையில் கிடைக்கும் பொருட்களை கொண்டு இந்த பாட்டி வைத்தியங்களை மேற்கொண்டால் நல்ல பலனை மிக விரைவாக காண முடியும்...

குழந்தைகள்!
வளரும் குழந்தைகள் எலும்பு ஆரோக்கியமாக இருக்க கொய்யா பழம் கொடுத்து வாருங்கள். இது எலும்புகளின் வலிமையை உறுதியாக்கும்.

வலிமை!
எலும்புகளின் ஆரோக்கியம் அதிகரிக்க, கோபுரம் தாங்கி செடி வேரை உலர்த்தி பொடி செய்து கற்கண்டு சேர்த்து தினமும் காலை, மாலை இருவேளை உண்டு வந்தால் நல்ல பயன் காணலாம்.

நோய்!
எலும்பு நோய் உள்ளவர்கள், முசுமுசுக்கை இலை மற்றும் தூதுவளை இலை இரண்டையும் காய வைத்து இடித்து பொடியாக்கி சூரணமாக இரண்டு கிராம் உட்கொண்டு வந்தால் எலும்பு நோய்கள் குணமடையும்.

முறிந்த எலும்பு!
பிரண்டை வேர்களை உலர்த்தி பொடியாக்கி ஒரு கிராம் தினமும் காலையில் நீரில் கலந்து குடித்து வந்தால் முறிந்த எலும்பு நல்ல வலு பெறும்.

முறிவு!
எலும்பு முறிவு உண்டான இடத்தில், கழுவி எடுத்து அரைத்த அசோகப்பட்டையை வைத்து கட்டினால் எலும்பு சீக்கிரம் கூடும்.



Click it and Unblock the Notifications











