Latest Updates
-
ஆகஸ்ட் 25-ல் நடக்கும் சுக்கிர பெயர்ச்சியால் இந்த 4 ராசிக்கு வருமானம் அதிகரிக்கப்போகுது! -
புதன் ஆயில்ய நட்சத்திரத்திற்கு செல்வதால் புது சொத்துக்களை வாங்கும் யோகமுள்ள 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா -
Independence Day 2026 Wishes: சுதந்திர தினத்தன்று இந்த ஸ்டைலில் வாழ்த்துக்களை சொல்லுங்க.. -
தேசியக்கொடியின் நடுவில் அசோக சக்கரம் ஏன் நீல நிறத்தில் உள்ளது? அதில் ஏன் 24 ஆரங்கள் உள்ளது தெரியுமா? -
ரோட்டுக்கடை இட்லி தக்காளி சாம்பார் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
ஆகஸ்ட் 17-ல் சூரியன் சிம்மம் ராசிக்கு செல்வதால் பணத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 3 ராசிகள் யார் தெரியுமா? -
சனி-சுக்கிரன் இணைப்பால் உருவாகும் பிரதியுதி திருஷ்டி யோகம்: இந்த 4 ராசிக்கு அளவற்ற செல்வத்தை தரப்போகுது! -
சுதந்திர தினத்தின் போது ஏன் பிரதமர் செங்கோட்டையில் கொடியேற்றுகிறார் - அதற்குப்பின்னால் உள்ள வரலாறு என்ன? -
ஆடிப்பூரம் ஸ்பெஷல் அவல் பால் பொங்கல் - 10 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
உடுப்பி ஸ்டைல் வெண்டைக்காய் பொரியல் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - வித்தியாசமா, சூப்பரா இருக்கும்
ஏன் பின் பாக்கெட்டில் பர்ஸ் வைக்கக் கூடாது என உங்களுக்கு தெரியுமா?
ஆண்கள் காலம், காலமாக பின்பற்றி வரும் பழக்கம் ஒன்று அபாயகரமானது என தெரியவந்துள்ளது. கடந்த சில காலமாகவே ஆண்கள் இதுகுறித்து சிறிதளவு அறிந்து வைத்திருந்தாலும், இதன் அபாயம் இவ்வளவு தாக்கத்தை உண்டாக்கும் என்பதை அறிந்திருக்க வாய்ப்புகள் இல்லை.
ஆம், பின் பாக்கெட்டில் பர்ஸ் வைப்பதால் தான் ஒருசில உடல்நல கோளாறுகளால் நீங்கள் அவதிப் படுகிறீர்கள் என்பது உங்களுக்கே தெரியாது. அதிலும் சில ஆண்களின் பர்ஸ் எப்போதும் நிறைமாத கர்ப்பிணி போல தான் இருக்கும். உள்ளே கண்ட காகித குப்பைகள் இருக்கும்.
இந்த பழக்கம் கொண்டுள்ள ஆண்கள் உடனே இதை மாற்றிக் கொள்ள வேண்டியது அவசியம்....

நியூயார்க் மருத்துவர்!
நியூயார்க்-கை சேர்ந்த மருத்துவர் ஒருவர், பின் பாக்கெட்டில் நிறைமாத கர்ப்பிணி போன்று பர்ஸை வைத்திருக்கும் ஆண்களுக்கு இடுப்பு, முதுகு, கழுத்து போன்ற இடங்களில் அதிக வலி ஏற்படும் அபாயம் இருக்கிறது என கூறியுள்ளார்.

அபாயம்!
பின் பாக்கெட்டில் பர்ஸ் வைத்து பயன்படுத்துவதால் நாள்ப்பட இடுப்பு மற்றும் தண்டுவட பகுதியில் சமநிலையின்மை உண்டாகும் இதனால், அசௌகரியங்கள் அதிகரிக்கும் என தெரிவிக்கிறார்.
இதனால் ஒருபக்கம் உயரமாகவும், ஒரு பக்கம் இறக்கமாகவும் உடல் நிலை அமைகிறது, இது இடுப்பில் இருந்து கழுத்து வரை பாதிப்பை உண்டாக்குகிறது.

ஏற்ற இறக்கம்!
கிரீஸ் எனும் மற்றுமொரு மருத்துவர், பின் பாக்கெட்டில் பர்ஸை வைத்துக் கொண்டு அதிக நேரம் உட்கார்ந்து இருப்பதால், உடல் நாள்பட சிறிதளவு ஒருபக்கம் ஏற்றமாகவும், ஒரு பக்கம் இறக்கமாகவும் நிலை பெறும்.

எச்சரிக்கை!
இதுப்போக போக, தண்டுவடம், தசைகள், டிஸ்க் பகுதிகளை வலுவாக பாதிக்கும். நாம் உட்காரும் நிலையானது தண்டுவடம் நேராக இருப்பது போல இருக்க வேண்டும்.
இதனால், தான் அதிக நேரம் சரியான நிலையில் இல்லாமல் சாய்ந்து உட்காருதல் தவறு என கூறப்படுகிறது.

பட்டக்ஸ்!
இதுமட்டுமின்றி, பின் பாக்கெட்டில் அதிக நேரம் பர்ஸ் வைத்திருப்பதால், பட்டக்ஸ் பகுதியில் இருக்கும் நரம்புகள், தசைகள், தமனிகள் மற்றும் சிரைகள் போன்றவை சேதமைடைய காரணியாக இருக்கின்றது.

மருத்துவர் குறிப்பு!
இன்று ஆண்கள் மத்தியில் கழுத்து, முதுகு மற்றும் இடுப்பு வலி அதிகரிக்க இந்த பழக்கம் ஒரு முக்கிய காரணியாக இருந்து வருகிறது.
ஏறத்தாழ 5-15 வருடங்கள் தொடர்ந்து இந்த பழக்கம் இருக்கையில் உடலில் அசௌகரியங்கள் அதிகரிக்கும் அபாயம் நிறையவே இருக்கின்றன என மருத்துவர்கள் கூறுகின்றனர்.



Click it and Unblock the Notifications