வாய் துர்நாற்றமா? இதை சாப்பிட்டா தடுக்கலாம்!!

Written By: Hemalatha V
Subscribe to Boldsky

வாய் துர் நாற்றம் என்பது மிகவும் சங்கோஜப்படக் கூடிய விஷயம். மற்ற பாதிப்புகள் வெளியே தெரியாது. ஆனால் வாய் துர் நாற்றம் நம்மை மட்டுமல்லாது பக்கத்திலிருப்பவரையும் நெளிய வைக்கும். இதனால் வாய் துர் நாற்றம் இருப்பவர்கள் மற்றவர்களிடம் பேசவே தயங்குவார்கள். தனிமையில் இருப்பார்கள்.

இப்படி குறையை மறைப்பதால் ஏதாவது ப்ரயோஜனம் உண்டா? அதற்கு தீர்வு காண முயலுங்கள். நீங்கள் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள் எவை தெரியுமா? தொடர்ந்து படியுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
 பல்விளக்கிய பின் என்ன செய்யலாம்?

பல்விளக்கிய பின் என்ன செய்யலாம்?

பல் விளக்கியபின் சமையல் சோடா 1 ஸ்பூன் எடுத்து அரை கப் வெதுவெதுப்பான நீரில் கரைத்து கொப்பளியுங்கள். பல் இடுக்களிலும் நீர் செல்லும்படி சுமார் 1 நிமிடம் வரை கொப்பளியுங்கள். சமையல் சோடா துர் நாற்றத்தை உண்டுபண்ணும் பேக்டீரியாக்களை அழிக்கிறது. இதனால் சில நொடிகளில் உங்கள் வாய் துர் நாற்றம் காணாமல் போகும்.

அடுத்து செய்ய வேண்டியவை :

அடுத்து செய்ய வேண்டியவை :

பற்களைப் போல இருமடங்கு அழுக்குகளும் கிருமிகளும் உங்கள் நாக்கின் துவாரங்களில் இருக்கும். அவைகளால் துர் நாற்றம் உண்டாகும். இதனால் நாக்கை மறக்காமல் தினமும் காலை எழுந்தவுடன் மற்றும் இரவு தூங்கப் போகும் முன் சுத்தம் செய்ய வேண்டும். இதனால் பாதி பிரச்சனைகள் முடியும்.

இரவில் செய்ய வேண்டியவை :

இரவில் செய்ய வேண்டியவை :

தூங்குவதற்கு முன் எதையும் சாப்பிடாதீர்கள். இதனால் கிருமிகள் வேகமாக வாயில் உருவாகிவிடும். முக்கியமாய் பால் குடிக்கும் வழக்கம் இருப்பவர்கள் குடித்தவுன் வாய் கொப்பளிக்க மறக்காதீர்கள். பால் வாயில் பற்சிதைவு உண்டாக முக்கிய காரணமாகும்.

பற்களை பரிசோதித்துக் கொள்ளுங்கள் :

பற்களை பரிசோதித்துக் கொள்ளுங்கள் :

பற்களில் சிதைவு, சொத்தை இருந்தால் வாயில் துர் நாற்றம் உண்டாகும். அவாறு இருந்தால் உடனடியாக மருத்துவரிடம் சென்று தகுந்த சிகிச்சை எடுத்துக் கொள்ளுதல் அவசியம்.

நீர் குடிக்கிறீர்களா?

நீர் குடிக்கிறீர்களா?

அடிக்கடி நீர் குடித்தால் கிருமிகள் பற்களில் தங்காது. அடித்துச் சென்றுவிடும். ஆகவே ஒரு மணி நேரத்திற்கு ஒரு தடவை நீர் குடியுங்கள். மறு நாள் பாருங்கள். உங்கள் வாயில் துர் நாற்றம் உண்டாகாது.

காரம் சாப்பிடுபவரா?

காரம் சாப்பிடுபவரா?

காரம் சாப்பிடுபவர்களுக்கு வாயில் துர் நாற்றம் உண்டாகாது. காரணம் அவர்களுக்கு வாயில் அதிக எச்சில் சுரக்கும். எச்சிலில் இருக்கும் என்சைம் கிருமி நாசினி. பேக்டீரியாக்களை அழித்துவிடும். ஆகவே காரமான உணவுகளை சாப்பிட்டு பாருங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Tips to prevent Bad Breath

How to prevent mouth decay and bad breath. Tips to be Followed everyday
Subscribe Newsletter